Total Pageviews

Wednesday, August 02, 2006

படித்ததில் ரசித்தது

சமீபத்தில் ரசித்த பாடல். மொழி என்னும் படத்திற்காக கவியரசு வைரமுத்து எழுதிய பாடல். கவிஞனுக்கு கற்பனை தான் களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கவியரசு.

காற்றின் மொழி
ஒலியா, இசையா?
பூவின் மொழி
நிறமா, மணமா?
கடலின் மொழி
அலையா, நுரையா?
காதல் மொழி
விழியா, இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.


காற்று வீசும்போது
திசைகள் கிடையாது
காதல் பேசும்போது
மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல
மவுனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை
கடவுள் அறியாது

உலவித் திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக் கூட்டில் அடங்காது

வானம் பேசும் பேச்சு
துளியாய் வெளியாகும்!
வானவில்லின் பேச்சு
நிறமாய் வெளியாகும்!
உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில்
உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில்
அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!