சமீபத்தில் நான் கேட்டு ரசித்த புதுப்பாடல்களில், என்னை வரிகளாலும் இசையாலும் கவர்ந்தன இரண்டு பாடல்கள். முதல் பாடல் பொறி படத்தில் வரும் "பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்", இசை தீனா. வழக்கமான தமிழ் சினிமா பாடல்களில் காதலியை, மானே, தேனே, நிலவே, மலரே என்று காலம் காலமாய் வரும் இலக்கிய clicheக்களை போட்டு கொன்றிருப்பார்கள். கொஞ்சம் அதைத் தாண்டி "உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா, கோதுமையா, மைதாவா" என்று commodities trading செய்திருக்கிறார்கள். மிக சமீபத்தில் "கண்ணும் கண்ணும் nokia, aiwa, LG, videocon" என்று commercial marketingம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த பாடல்களில், நாம் அன்றாடம் subtleஆக ரசிக்கும், நம் வாழ்க்கையில் இயல்பாய் இருக்கும் விஷயங்களை தொகுத்து அதை காதலிக்கும், காதலனுக்கும் ஒப்பிட்டிருக்கிறார்கள். "ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்", "அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்" வரிகள் அபாரம்.
(பல்லவி)
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
(சரணம்1)
பயணத்தில் வருகின்ற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரிட்சைக்கு படிக்கின்ற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் தினறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ தானே
(சரணம்2)
தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல் வரும் நகக்கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே
இரண்டாவது பாடல் உன்னாலே உன்னாலே படத்தில் வரும் "வைகாசி நிலவே". இந்த பாடல் நான் முதலில் சொன்ன இலக்கிய clicheக்குள் வந்தாலும், செல்போன், ரிங்டோன் சமாசாரங்கள் இல்லாததால் மன்னிக்கலாம். ஹாரிஸ் இந்த பாடலுக்கு நல்ல இசை அமைத்திருக்கிறார்.