உலகத்தின் மிகச் சிறிய திகில் கதை எது? இதுதான்:
"உலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது."
உலகத்தின் மிகச் சிறிய விஞ்ஞான சிறு கதை இதுதான்:
கதையின் தலைப்பு "டெலிபதிக்காரர்களுக்கான விஞ்சானக் கதை" அவ்வளவு தான் கதை. இது சமீபத்தில் விகடனில் படித்தது. போன வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு கேள்வி: "மனித குலத்தில் எழுந்த முதல் கேள்வி எதுவாக இருக்கும்?" இதற்கு அவர் சொன்ன பதில் "எவ இவ?!".
chanceஏ இல்ல!!!...இவற்றின் எல்லாவற்றிலும் நான் பார்த்து பிரமிப்பது இவர்களின் அசாய creativity தான். எப்படி தான் இவர்களுக்கு மட்டும் தோன்றுகிறதோ. இது தான் மற்றவர்களையும் கலைஞர்களையும் வேறு படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு creator இருக்கிறான், ஒரு சில பேர் அதை வெளிக்கொனர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் அதை உள்ளேயே புதைத்து சாமானிய உலகத்திற்குள் கானாமல் போய் விடுகின்றனர். ஒரு மகாக்கவிஞனுக்குள் இருக்கும் இந்த அதீத creativityக்கு challenge வரும்போது தான் அவன்:
"பல வேடிக்கை மனிதரைப் போல் - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ.." என்று வெடிக்கிறான். நம்மில் பலர் ஆழ் மனதில் ஏங்கி தவிக்கும் அந்த creative satisfactionக்கு தான் பலவற்றை இழக்கிறோம், அதற்காக வருத்தப்படவும் மாட்டோம். உதாரணத்திற்கு மிகக் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாய் தமிழில் அடித்து, அதை யுனிக்கோடாக மாற்றி வலைப்பூக்களில் பதிவு செய்கிறோம், எல்லாம் எதற்காக, யாராவது ஒரு ஜீவன் அதை விமர்சித்தோ, பாராட்டியோ பின்னூட்டம் போட மாட்டார்களா என்பதற்கு தானே.
சரி சீரியஸாக பேசாமல் மீண்டும் தலைப்பு பற்றி பேசலாம். நான் பார்த்து, ரசித்து, பிரமித்த, நம்மவர்களின் creative விஷயங்களை தொகுக்க நினைக்கிறேன், ஒரு partial list இதுதான்:
1) இளையராஜாவின் பல பாடலின் orchestration and composition. உதாரனம்: 1) பூவே செம்பூவே 2) பூங்கதவே தாழ் திறவாய் etc.
2) வைரமுத்துவின் பல பாடல்கள், அவரின் சொல் ஆளுமை.
உதாரனம்: "பனி விழும் மலர் வனம் -உன்
பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்"
3) சுஜாதாவின் சிறுகதைகள். உதாரனம்: முதல் மனைவி, வி.சி கதைகள்
4) சமீபத்தில் வந்த வைகைப்புயலின் காமெடிகள் (எழுதியது யாரோ!!). "எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் வராது..", "என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாமா..", "கட்டடம் strong தான், basementதான் கொஞம் வீக்.."
5) crazy மோகனின் நகைச்சுவை வசனங்கள்.
உதாரனம்:
"என் மகனுக்கு பயங்கர ஞாபகசக்திங்க"
"அப்படியா"
"ஆமாங்க...தம்பி உன் பேர் என்ன"
"முத்துபாண்டி"
"பாருங்க இருபது வருஷத்துக்கு முன்ன வச்சது, இப்பவும் ஞாபகம் வச்சிருக்கான்"
6) நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள். உதாரனம்:
"தொட்டு தொட்டு என்னை
வெற்றுக் களி மன்னை
சிற்பமாக யார் செய்ததோ"
7) ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதை அமைப்பு. முதல் munnabhaiயிலும், இரண்டாவது munnabhaiயிலும் கலகலப்பான சினிமாவில், மனிதத்தனமான விஷயங்களை அவர் கலந்த முறை பிரமிக்க வைக்கிறது. சிரிக்கவும் வைத்து, சீரியஸாக சிந்திக்கவும் வைக்கிறார்.
இது போல் எத்தனையோ இருக்கு.
கடைசியாய் ஒரு சுய விளம்பரம். நான் எழுதியதில் creativeஆக, இது நான்தானா என்று நான் வியந்த ஒன்றே ஒன்று:
மூன்று வருடம் முன்பு, தீவரமாய் திரைக்கதை எழுத பயிற்சி எடுத்து, பல புத்தகங்கள் படித்து, பல திரைக்கதைகள் படித்து, பார்த்து முடிவில் நானே ஒரு கதையை
திரைக்கதையாய் எழுதினேன். 70% எழுதி முடித்து, 30% இன்னும் மன்டையில் இருக்கிறது. அதில் ஒரு சின்ன காட்சி:
கதாநாயகன் கிரிஷ்ணா தன் வீட்டில் பார்த்து பேசிய பெண்ணை, அவன் முதலில் பார்க்க ஒரு ஓட்டலில் காத்திருக்கிறான். மெனுக்கார்ட் அவன் முகத்தை மறைக்க படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அகிலா அங்கே வருகிறாள்.
அகிலா: எக்ஸ்க்யூஸ் மீ
கிரிஷ்ணா: (மெனுக்கார்டை இறக்கி பார்க்கிறான். அகிலாவின் அழகை பார்த்து வாயடைத்து போகிறான்)
அகிலா: நான் தான் அகிலா...Hi
கிரிஷ்ணா: (அகிலா முகத்தை பார்த்தே எழுந்து கை கொடுக்க முயல்கிறான்) Hi...நான்...வந்து...அது...என் பேர்...பேரு...பேரு.....சே என்ன பேர் வச்சாங்க.....
Total Pageviews
Thursday, October 19, 2006
Tuesday, October 17, 2006
என் சினிமாக்கள் - 1
இந்த தொடரில் என்னை பாதித்த, நான் ரசித்த தமிழ் சினிமாக்கள் பற்றி சொல்ல போகிறேன். சிலர் சினிமா ஒரு சீரியஸான மெசெஜ் சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள், சிலர் அது பொழுதுபோக்கு விஷயமாக மற்றுமே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள், என்னைக் கேட்டால் அது ஏதாவது ஒரு விஷயத்தில் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அப்படியானால் நல்ல சினிமாவின் இலக்கனம் தான் என்ன? ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், அது ஞாபகத்தில் தங்க வேண்டும். அப்படி என் ஞாபகத்தில் தங்கிய, என்னை பிரமிக்க வைத்த சினிமாக்கள் சிலவற்றை இந்த பகுதியில் எழுத உள்ளேன்.
மூன்றாம் பிறை:
இப்படி ஒரு தொடர் ஆரம்பித்தால், இந்த படத்தை பற்றி முதலில் சொல்வது தான் சரியாய் இருக்கும். சிறு வயதில் மற்ற பிள்ளைகள் போல சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மற்றுமே கண்டுகளித்த என்னை முதன் முதலில் கேமராவின் பின்னால் நடக்கும் விஷயங்களை அறிய தூண்டிய படம் இது. இந்த படத்தை பற்றி முதலில் என் அம்மா தான் எனக்கு பல விஷயம் சொல்லியிருந்தார். இதில் கமல் நடிப்பு அழகாய் இருக்கும், ஸ்ரீதேவி நன்றாய் நடித்திருப்பார், கண்ணதாசன் கடைசியாய் பாட்டு எழுதியிருப்பார் என்று பல விஷயங்கள் சொன்னார். ஆனால் அப்போது வீட்டில் வீடியோ ப்ளேயர் எல்லாம் இல்லை, அதனால் இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்டு வெகு நாள் வரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தேன். அப்போழுதெல்லாம் டிடி தான் ஒரே சேனல், டிடியில் நல்ல படங்கள் பார்க்க வேண்டுமானால் ஞாயிறு கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஞாயிறு கிழமைகளில் மதியம், காது கேளாதவர் செய்தி முடிந்தபிறகு 1:00 மணி அளவில் தேசிய விருது வாங்கிய படங்கள் போடுவர். அடிக்கடி வங்க மொழி படங்கள், மலையாள மொழி படங்கள் வரும். எப்போதாவது தமிழ் படங்கள் வரும். பலகாலம் இது டிடியின் சதி என்று நினைத்திருந்தேன், பிறகு தான் தெரிந்தது தொன்னூறுகள் வரை, தேசிய விருதுகள் வாங்கிய தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு என்று. எனினும் ஞாயிற்று கிழமைகளில் பல நல்ல படங்களை பார்த்தேன். அத்திப்பூத்தாற் போல சில சமயம், வெள்ளி கிழமை நடுராத்திரி டிடியில் சில படங்களை திரையிடுவர். ஒரு சமயம் அப்படி வெள்ளி கிழமை இரவு மூன்றாம் பிறை காட்ட போகிறார்கள் என்று செய்தி கேட்டு. நான் மட்டும் ராத்திரி 12 மணிவரை விழித்திருந்து, கடைசி இந்தி செய்தி முடிந்து, அந்த படத்தை பார்த்தேன். முதன் முதலாய் ஒரு தமிழ் படத்தை பார்த்து நான் பிரமித்தது இந்த படத்தை தான். ஒளிப்பதிவில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. கதை, திரைக்கதை, இசை, பின்னனி இசை, நடிப்பு என்று எல்லா விதத்திலும் அசத்தியிருப்பார். 'பொன்மேனி உருகுதே..' தான் படத்தின் திருஷ்டி பரிகாரம். பாடல்களில் நடிகர்கள் வாயசைக்காமல் வெறும் மாண்டேஜ் ஷாட்களில் கச்சிதமாக காட்டியது இந்த படத்தில் தான் என நினைக்கிறேன். இந்த படத்தில் பாடல் என்றால் பொதுவாக எல்லோருடைய ·பேவரைட் கண்ணே கலைமானே பாடலாக தான் இருக்கும். எனக்கும் இதுதான் பிடித்த பாடல், ஆனால் படத்தோடு பார்க்கும் போது நான் மிகவும் ரசித்தது 'பூங்காற்று புதிதானது..' பாடலை தான். பல்லவியில் ஒரு வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆரம்பித்து, சரணத்தில் ஹிந்துஸ்தானியில் குழைத்திருப்பார் இளையராஜா. இந்த பாடலின் நடுவில், ஸ்ரீதேவியின் பாவாடை நுனி ஊட்டி ரயில் தண்டவாளத்தில் மாட்ட, எதிரே ரயில் நெருங்கி வர அப்போது ஒரு இசை போட்டிருப்பார் ராஜா, எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம், முன்னேயே அப்படி ஒரு காட்சியை யோசித்து பாலுமகேந்திரா கேட்டிருப்பாரோ, அல்லது அப்படி ஒரு ஷாட் எடுத்து அதை அழகாய் அந்த பாடலில் பொருத்தியிருப்பாரோ. மிக அழகான ஒரு காட்சி அது.

Subscribe to:
Posts (Atom)