Total Pageviews

Thursday, September 06, 2007

சக் தே இந்தியா - தமிழில்

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த படம் சக் தே இந்தியா. தரமான படம். ஷாருக்கான் என்ற அற்புதமான நடிகன் எப்படி மற்ற படங்களில் வீணடிக்கப்படுகிறான் என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். இந்த படத்தை பற்றி இந்த பதிவில் நான் விமர்சிக்க போவதில்லை. இந்த படத்தை பற்றி என் நன்பர் செந்திலிடம் பேசும் போது, நாங்கள் இருவருமே இது போல ஒரு படம் ஏன் தமிழில் வருவதில்லை என்று விவாதித்தோம். அப்போது வேடிக்கையாக நம் தமிழ் நடிகர்கள் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கதை எப்படி இருக்கும் என்று யோசித்தோம். அதை தான் இப்போது இங்கே பகிர்ந்துகொள்ள போகிறேன்.

கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்: நம் கேப்டன் இந்த படத்தில் நடித்திருந்தால், 16 பெண்களுக்கும் ஹாக்கி மட்டை பதில், ஏகே 47 துப்பாக்கி பயிற்சி கொடுத்திருப்பார். பின்பு அனைவருடன் ஒரு டூயட் பாடி முடித்து, நம் நாட்டை பற்றி விலாவரியாக statistics சொல்லி முடித்து, எல்லாரையும் கூப்பிட்டு போய் காஷ்மீரில் baakistaan தீவரவாதிகிளுடன் சண்டை போடுவார். படத்தில் இவரோட பன்ச் லைன் "penalty தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்த.." படத்திற்கு அட்டகாசமாக "சுக்கு டா இந்தியா" என்று பெயர் வைத்திருப்பார். சன் டிவியில், கால் மேல் கால் போட்டுகொண்டு "சுக்கு டா இந்தியா...காரம் இல்லை" என்று விமர்சனம் செய்வார்கள்.

கமல்ஹாசன்: 16 பெண்களில், பத்து கெட்டப்பை அவரே போட்டிருப்பார். கோச்சாக 'நம்மவர்' தாடி வைத்துகொண்டு வந்திருப்பார். அவருடைய ·ப்ளாஷ்பேக்கை ஒருவர் பாகிஸ்தானிடம் அவர் பெட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வில்லன் ரேஞ்சுக்கு சொல்லுவார், ஆனால் அவரோ அதெ ·ப்ளாஷ்பேக் காட்சியை கேமிரா அங்கிளை மாற்றி வேறு மாதிரி சொல்லி அவர் நிரபராதி என்று நிரூபிப்பார்.

சூப்பர்ஸ்டார்: தலைவரை 16 பெண்களும் ஒருதலையாக காதலிப்பார்கள், தலைவரின் பெற்றோர்கள் அந்த பதினாறில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லுவார்கள், ஆனால் தலைவரோ தனக்கு 'தமிழ் கலாச்சாரதோட ஒரு பெண் தான் வேண்டும்' என்று சொல்லி, ஹாக்கி ஸ்டேடியம் கூட்டிகொண்டிருக்கும் பெண்ணை டாவடிப்பார். வில்லன் ஹாக்கி மேட்சை fix செய்யும் ப்ரோக்கராக வருவார். அவர் தலைவரிடம் தோற்றுபோக சொல்ல, தலைவரோ மாட்டேன் என்று சொல்ல, வில்லன் வில்லத்தனம் செய்து தலைவரை பாகிஸ்தான் கையாள் என்று முத்திரை குற்றி விடுவான். தலைவர் பிறகு ஹாக்கி மேட்சில் புரளும் பெட்டிங் பணத்தை எல்லாம் வில்லன்களிடம் வெளியே கொண்டு வந்து, ஊருக்கு ஊர் ஹாக்கி ஸ்டேடியம் கட்டுவார். படத்தின் பெயர் "சிவாஜி the coach". படத்தில் இவரோட பன்ச் லைன் "goalஅ போட்டாலே ச்சும்மா அதிருதுல்ல..."

விக்ரம்: 'நான் கோச் இல்ல...பொறுக்கி' இது தான் படத்தில் இவரோட பஞ்ச் லைன். ரேய்மண்ட் க்ளாஸ் போட்டுக்கொண்டு முறுக்காக 16 பெண்களுக்கும் கோச் கொடுப்பார். அதில் ஒரு மாமி ·பிகரை மட்டும் காதலிப்பார். இங்கேயும் வில்லன் மேட்ச் ·பிக்ஸிங் பார்ட்டி. வில்லன் லஞ்சம் கொடுக்க, அதை வாங்கிக்கொள்வார், க்ளைமாக்சில் தான் அந்த பணத்தையெல்லாம் பிரதமர் ஹாக்கி நிதிக்கு அவர் கொடுத்தது தெரியும்.

சிம்பு: தம்பி சிம்புவை ஹாக்கி ஆடும் பெண் ஒருத்தி ஏமாற்றிவிட, அதற்கு பழிவாங்க அண்ணன் சிம்பு கோச்சாக பொய் சொல்லிக்கொண்டு 16 பெண்களையும் ஏமாற்றுவார். அடிக்கடி "யார் முதல்ல கோல் போடுறாங்கன்னு முக்கியம் இல்ல..கடைசில் யார் நிறைய கோல் போடுறாங்கன்னு தான் முக்கியம்.." என்று விரலை மடக்கி மடக்கி சொல்லுவார்.

3 comments:

SKG said...

Very Funny :-) Why did you leave Vijay, Arjun, Sarathkumar, Ramajaran? They are born heros for such roles!!

தென்றல் said...

ஹா.....ஹா....! நல்ல கற்பனை!! ;)

Yogi said...

நான் கூட சக் தே தமிழில் டப்பாகித் தான் வருதோன்னு நம்பி வந்து ஏமாந்துட்டேன் :)))

நல்ல காமெடி :)