Total Pageviews

Wednesday, November 09, 2005

கொஞ்ச நேரம்...

வலைப் பதிவித்து பல நாள் ஆகிவிட்டது. முதற் காரணம் வேலைச் சுமை, இரண்டாவது காரணம் தீபாவளிக்கு வந்த தமிழ் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்த்தாக வேண்டிய கடமை. சிவகாசி, மஜா, அது ஒரு கனாக் காலம் எல்லாம் பார்த்தாகி விட்டது. நான் மிகவும் எதிர்ப் பார்த்த தவமாய் தவமிருந்து வராதது கொஞ்சம் ஏமாற்றமே. பார்த்த படங்களில் என்னைக் கேட்டால் வர்த்தக ரீதியாக சிவகாசி தான் ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. வழக்கமான விஜய் மார்க் மசாலா தான் ஆனால் போர் அடிக்கவில்லை. அதிக பஞ்ச் டயலாக்குகள் இல்லாதது படத்திற்கு பலம். கஜினியைப் போலவே இதிலும் அசின் அடிக்கும் லூட்டிகள் 'ஜொள்ள'ப்பட வேண்டியவை. அந்நியனுக்கு பிறகு மஜாவாக விக்ரமை பார்க்க உட்கார்ந்தால், கொஞ்சம் எமாற்றமே. மலையாளப் படத்தை, மலையாளப் படமாகவே எடுத்திருக்கிறார்கள். அசின் வந்து போகிறார். "ஐயார் எட்டு நாட்டுக்கட்டை..." என்னும் குட்டுப்பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. பார்த்த மூன்று படங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம். தனுஷ், ப்ரியாமணியிடம் யதார்த்த நடிப்பை அழகாய் வாங்கியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் எங்கேயோ ஒரு வலையத்தின் விமர்சனத்தில், இந்தப் படம் ஏற்கனவே பாலு மகேந்திரா எடுத்த யாத்ரா என்னும் மலையாளப் படத்தின் அச்சு அசல் copy என்று படித்தேன். அதில் மோகன்லால் மற்றும் ஷோபா நடித்தார்களாம். இந்த யாத்ராவைப் பற்றி மெலும் அறிய (google) கூகிலிடும் போது, கமல் & மோகன்லாலின் நடிப்பை பற்றி, சென்னையில் வளர்ந்த மலையாள மற்றும் தமிழ் படம் பார்க்கும் ஒருத்தர் எழுதிய rediff article ஒன்றை படித்தேன். அதில் கமல் மோகன்லால் இவர்களின் முத்தான முன்று படங்களாய் (அனைத்தும் அவர்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம்) மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், கிரீடம், பரதம், வானப்ரஸ்தம் இவற்றை சொல்லியிருந்தார். இதில் ஒரு சோறு பதமாய் நாயகனில் மகனின் சடலத்தை பார்த்து கமல் அழுவதும், பரதம் படத்தில் தன் அண்ணனின் சடலத்தை பார்த்து மோகன்லால் அழுவதையும் compare செய்து, அவர்களின் நடிப்பை பிரமித்து எழுதியிருக்கிறார். இதை படித்தலிருந்து மோகன்லாலின் அந்த படங்களை பார்க்க ஆவலாய் இருக்கிறது.

3 comments:

Maayaa said...

nice !!1
naan maja pathen.. innum sivakasi paakanum. people say its pretty much like thirupachi..
yet to find out!!
Priya

Maayaa said...

enna pudhu poste kaanum???

Anonymous said...

its actually mamooty in yathra n not mohanlal... both of them r extemly good actor ... bettr to watch a lot of mallu movies to know abt good story telling