காதலர் தினம் என்பதே greeting cards கம்பெனிகளின் கார்ப்பரேட் சதி என்பதில் எனக்கு சில உடன்பாடு உண்டு. இருந்தாலும் அந்த ஒரு நாளில் காதலுக்காகவே வாழ்ந்த, காதலுக்கு மரியாதை தந்த பலரை நினைத்து பார்த்து வாழ்த்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்று நான் எனக்கு தெரிந்து, காதலித்து கரம் பிடித்த நன்பர்களுக்கும், அந்த பகுதியை எட்ட இருக்கும் நன்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்களை அனுப்பினேன். காதலர் தின ஷ்பெஷலில் விகடனில் வந்த பார்வையற்ற தம்பதியினரின் கதை என்னை கலங்க வைத்தது. செல்வனின் காதலர் தின பதிப்பும் என்னை கவர்ந்தது.
சொல்ல மறந்த கவிதை - என் டைரியிலிருந்து.
நான் காதல் உணர்ந்த தருனம்...
என் வானம் விரிந்தன
உலகம் சுருங்கின
இரவுகள் நீண்டன
கவிதைகள் பிறந்தன
இதயம் பட்டாம்பூச்சி ஆனது
இது சுரப்பிகளின் சதி - என
சொன்னது விஞ்ஞானம்
அது உன்மையென்றால் - என்
அவயங்கள் உறங்கும் போது
கனவுகள் காதல் செய்தது ஏன்
பொக்கிஷமாய் இருக்கும்
கல்லூரி ஆட்டோகிரா·ப்
விழிகள் உன் பக்கம் தேடின
'நல் வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன்'
நிரப்பாத நான்கு வரிகள் தள்ளி உன் கையெழுத்து
இடையில் நீ எழுத மறந்ததென்ன
சொல்லாமல் இருந்தால்
இதயம் சுடுகாடாகிவிடும் என்று
சொன்னேன் ஒரு நாள் பார்த்து
பதில் சொல்லாமலே
என் காதலை கல்லறையாக்கி
ஒற்றை ரோஜாவை வைத்தாய்
காதல் தெய்வீகமானது என்றால்
என் ஞாபகங்கள் வேண்டுதல் வடிவம் பெற்றதா..
இல்வாழ்வெல்லாம் நல்வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கேட்டதும் ஒரு சந்தோஷ பெருமூச்சு
நான் காதலை நினைக்கும் தருனம்
மறந்து போக நினைத்தாலும்
கடந்து போன மைல் கல்லாய் உன் ஞாபகங்கள்...
Total Pageviews
Monday, February 13, 2006
Monday, February 06, 2006
டிஷ்யூம்
சும்மா பொழுது போகட்டுமே என்று தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் படம் முடிய அசந்து விட்டேன். தமிழில் இப்படி ஒரு sensible காதல் கதையை பார்த்ததில்லை. வித்தியாசமான திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்பிலும் படத்தை நிறையச்செய்த சசிக்கு பாராட்டுகள். திரையில் ஹீரோவுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேனாக வரும் ஹீரோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிக்கும் ரசனைமிக்க ஒரு ஹீரோயின், இப்படி இரு கதாபாத்திரம், இருவருக்கும் காதல் என்று typical தமிழ் பட இயக்குநர் படத்தை எடுத்திருந்தால், தனக்கு பொருந்தவே பொருந்தாத ஹீரோவுடன், ஹீரோயினுக்கு கண்டதும் காதல், ஹீரோயின் அப்பாவிடம் நாம் பார்த்து புளித்துபோன ஏழை பனக்கார காதல் டயலாக்குகள், நாலு பைட் கடைசியில் சுபம் என மசாலா தூவி கைமா பன்னியிருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட cliche எதுவும் இல்லாமல், காட்சிக்கு காட்சி வித்தியாசமாய் படத்தை கொண்டு சென்றிருக்கும் விதம் சூப்பர்...
'ரிஸ்க்' பாஸ்கராக ஜீவா, ராம் படத்திற்கும் இதற்கும் பயங்கர இம்ப்ரூவ்மெண்ட். லாக்கப்பில் போலீசார் அடிப்பதற்கு முன்பே அடிவாங்கியது போல் ரியாக்ஷன் கொடுத்து விழ, ரகளயான ஓப்பனிங். லோக்கலாக பேசும் பேச்சு, பான்பராக் போடும் ஸ்டண்ட்மேனாக பாடி லாங்க்வேஜ் என்று நடிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இமேஜ் வளர்க்கிறேன் பேர்விழி என்று பஞ்ச் டயலாக், அதீத ஹீரோயிஸம் என்று சிக்காமல் இப்படியே நாலு படம் நடித்தால் சூர்யா பாதையில் செல்லலாம்.
ஹீரோவின் ரசனையும், ஹீரோயின் ரசனையும் எப்படி ஒட்டாமல் இருக்கிறது என்று சொல்லுகிற காட்சியமைப்பு எல்லாம் பன்ச். சந்தியா பீச்சில் செய்த மணல் சிலையை பேசிக்கொண்டே அதன் அருமை புரியாமல் ஜீவா காலால் உதைப்பதும், மோனாலிசா படத்தை பார்த்து "இது உங்க பெரியம்மாவா" என்று கேட்பதும் சில உதாரணங்கள்.
வசனங்களும் ஆங்காங்கே நச். டைட் டி சர்ட், கழுத்தில் தொங்கும் கத்தி செயின்கள் என்று வரும் ஜீவாவை பார்த்து, சந்தியா "கொஞ்சம் டீசண்டா வரலாமே" என்று கேட்க "நாங்க வில்லனா தெரியற வரைக்கும் தான் எங்களுக்கு பொழைப்பு" என்று ஜீவா சொல்வது ஒரு உதாரணம்.
ஒவ்வொரு காட்சியையும் நாம் சினிமா பானியில் ஒரு மாதிரியாக ஊகிக்க ஆனால் ப்ராக்டிக்லாக அதை எடுத்திருப்பது தான் இந்த படத்தின் பெரிய ப்ளஸ். பஸ் ஸ்டாப்பில் பஸ் வராமல் சந்தியா காத்திருக்க, அங்கே வரும் ஜீவா ஒரு பஸ்ஸை நிறுத்துவதற்கு அதன் முன்னால் போய் பாய, இதை பார்த்து ஹீரோயினுக்கு காதல் வரும் என்று பார்த்தால், அவர் போய் ஜீவாவை அறைகிறார் "உன் ரிஸ்க்க எல்லாம் சினிமாவுல்ல வச்சிக்கோ", சரி பதிலுக்கு ஹீரோ அப்படியே போய் ஒரு சோக பாட்டு பாடுவார் என்று பார்த்தால் பதிலுக்கு ஜீவாவும் சந்தியாவை பளார் என்று ஒரு அறை "உன்ன இம்ப்ரெஸ் பன்ன எனக்கு இதுதான் தெரியும், மத்தவங்க மாதிரி இங்கிலிஷ் பேசி வாயில மவுத் ஆர்கன் வாசிக்க தெரியாது" என்று பொரிந்து தள்ள, என ஆங்காங்கே சர்ப்ரைஸ். characterisation திரைக்கதைக்கு நல்ல வலு சேர்க்கிறது.
காமெடிக்கு விவேக் வடிவேலுவிடம் எல்லாம் போகாமல், ஒரு குள்ளரை வைத்து காமெடி செய்திருப்பது புதுமை. என்னதான் குள்ளராக இருந்தாலும் அவரின் குள்ளத்தனத்தை வைத்து ஓவராக காமெடி செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அவர் கடன் வாங்கும் காரணத்தை சொல்லி நம்மை கலங்க வைக்கின்றனர். படத்தின் ஒரே குறை வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட பாடல்கள் தான், ஆனால் அதிலும் இரண்டு மூன்று பாடல் மாண்டேஜ் ஷாட்டுகளாக கதையை நகர்த்துவதால் போரடிக்கவில்லை. மொத்தத்தில் டிஷ்யூம், ஒரு யதார்த்தமான 'காதல்' படம் போல் இது நடைமுறை காதல் கதை.

Sunday, February 05, 2006
வரலாறு - I
பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு வரலாறு பாடத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. 'கடந்த காலத்தை தெரிவதனால் என்ன பயன்' என்று பலமுறை நான் கேட்டதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் எனக்கு வரலாறு மேல் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. முதலில் பள்ளி பருவத்தில் எனக்கு வரலாறு மேல் ஆர்வம் ஏற்படாதற்கு காரணம், நாம் படித்த எல்லா வரலாறு பாடங்களும் வரலாற்றின் பல சம்பவங்களின் தலைப்புச் செய்திகளின் கோர்வையாய் இருந்தது ஒரு காரணம். They merely give the highlights and statistics of a historical incident, மாறாக ஒரு சம்பவம் ஒரு நாட்டிலோ அல்லது சமுதாயத்திலோ எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படித்த வரலாறு சொல்லியதில்லை and not the importance and impacts of that history. உதாரணத்திற்கு ஒரு ப்ரெஞ்சு புரட்சியோ அல்லது ரஷ்ய புரட்சியோ எவ்வளவு பிரசத்தி பெற்றது, அந்த நாடுகளில் அந்த புரட்சிகள் எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படிக்கவில்லை, மாறாக ப்ரெஞ்சு புரட்சி ஏற்பட்ட வருடம், அந்த வருடத்தில் எந்த லூயி மன்னன் ஆண்டான் என்பது மட்டும் தான் படித்தோம். இந்திய சுதந்திர வரலாறும் அவ்வாறே. காந்தியடிகள் இந்த இந்த வருடத்தில் இந்த போராட்டங்களை துவங்கி வைத்தார், இந்த வருடத்தில் கைதானார், பிறகு மவுண்ட்பேட்டன் வந்தார் சுதந்திரம் கொடுத்தார்...இப்படித்தான் நாம் சுதந்திரம் வாங்கிய வரலாறையே படித்தோம். சிறுவயதில் நிறைய நாள் நான் இப்படித்தான் யோசித்திருக்கிறேன் "மவுண்ட்பேட்டன் வலிய வந்து கொடுத்த சுதந்திரத்தை நாம் ஏன் காந்தியடிகள் போராடி வாங்கி கொடுத்தார் என்று சொல்லுகிறோம்". காந்தியை பற்றி நான் ரிச்சர்ட் அட்டென்பொரோவின் காந்தி படம் பார்த்து தான் நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு மனிதராக காந்தி எத்தகையவர், எவ்வளவு தியாகங்களை செய்தார் அவரின் கொள்கைகள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இன்னும் உள்ளே சென்று விஸ்தாரமாக சொல்லியிருந்தார்களென்றால் நான் நம் மகாத்மாவை பற்றி பள்ளியிலே ஆழ்ந்த அறிவை பெற்றிருப்பேன். நம் பாடத்திட்டங்கள் ஒரு மணி நேரம் எழுதும் தேர்வை வைத்து வரையறுக்கப்படுவதால் வரும் நிலை இது. நல்லவேளை நாம் பள்ளியில் மாறுவேட போட்டியிலும், திரைப்படங்களிலும் கட்டபொம்மனையும், பாரதியையும் பார்த்ததினால், விடுதலை போராட்டத்தில் தமிழனின் பங்கை பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோம். நம் ஊரில் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு பாடங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்று அறிவை பெருக்குவதற்கு அவ்வளவு ஊக்கம் கொடுப்பதில்லை. நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான், ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். அப்போதும், என் அம்மா அங்கிருந்த ஆயிரம் ஆண்டு முன் எடுத்த ஒரு மீனின் எலும்புகளை ஆச்சர்யமாக காட்டிய அளவுக்கு, நான் அங்கிருந்த பல வரலாற்று சின்னங்களின் பற்றிய தகவலை படிக்க விடவில்லை. இன்னொரு சம்பவம் ஒருமுறை ஊட்டிக்கு சுற்றுலா போய் அங்கிருந்து திருப்பூருக்கு என் தந்தையின் நன்பரை பார்க்க சென்றோம். என்னிடம் திருப்பூரில் என்ன பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள், எனக்கு பாடத்தில் படித்த கொடி காத்த குமரனின் ஞாபகம் வந்தது, அவர் வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அவர்களோ அங்கிருந்து பழனிக்கும், பனியன் பேக்டரிக்கும் முன்னுரிமை கொடுத்து, திரும்பி சென்னைக்கு ரயிலேறும் முன் வழியில் ஒரு வீட்டை தூரத்தில் காட்டி "அதுதாம்ப்பா கொடி காத்த குமரன் வீடு...பாத்துக்கோ" என்று சொல்லி ரயிலேற்றினர்.
ஏன் நாம் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?...வரலாறு நாம் கடந்து வந்த பாதை மட்டும் இல்லை, இனிமேல் நாம் கடக்க வேண்டிய பாதையையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இந்தியை ஏன் நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை அறிவதற்கு நாம் திராவிட கழகங்களின் வரலாற்றை படித்தாக வேண்டும். அந்த வரலாறு தான் இன்றும் இந்தி நம் ஊரில் எட்டிப்பார்க்காதவாறு தடுக்கிறது. நம் வரலாறு பாடங்களில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், உலக வரலாறு சுத்தமாக புறக்கனிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் இருபதாம் நூற்றாண்டில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியது, ஆனால் ஜெர்மனியனோ, ஜப்பான்காரனோ இந்தியாவில் குண்டு போடவில்லை என்பதால் நமக்கு அதைப்பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் உன்மை என்னவென்றால், இரண்டாம் உலகப்போரிலும், முதல் உலகப்போரிலும் ஆங்கிலேயப் படையில் பனியாற்றி உயிரைவிட்ட இந்தியர்கள் பல லட்சம் பேர். ஆங்கிலேயப் படையில் பனியாற்றிய ஒரே காரணத்தினால் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் தியாகங்களை பதியவைக்க மறந்துவிட்டனர். இன்றும் சென்னையில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவிடம் இருக்கிறது அதை வருடா வருடம் பிரிட்டன் அரசு அதன் சொந்த செலவில் பராமரிக்கிறது.
(தொடரும்..)

Monday, January 30, 2006
நியுரம்பெர்க் (Nuremberg)
இன்று நியுரம்பெர்க் (Nuremberg) என்னும் ஆங்கில படம் பார்த்தேன். என்னுடைய war favouritesல் இந்த படத்தையும் சேர்க்கிறேன். என்ன ஒரு வித்தியாசம், இதில் ஒரு போர் காட்சி கூட கிடையாது. இரண்டாம் உலகப்போர் முடிந்து ஹிட்லரின் நாஸிப்படையின் உயர் அதிகாரிகள் பலரை சிறைப்பிடித்து, அவர்களை போர் நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி விசாரனை செய்வதே படத்தின் கதை. இரண்டாம் உலகப்போர் பற்றி பல விஷயங்களை நான் தெரிந்திருந்தாலும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான விடைதான் வெகு நாளாய் தெரியாமல் இருந்தது அது "யூதர்களுக்கு எதிராக இவ்வளவு கொலைகளையும் கொடுமைகளையும் செய்ய ஹிட்லருக்கும் அவன் ஆனைப்படி செய்த ஜெர்மானியர்களுக்கும் எப்படி மனது வந்தது, அவர்களின் மனசாட்சி எப்படி தொலைந்து போனது?"
இந்த கேள்விக்கான விடையை, இந்த படத்தில் வரும் அமேரிக்க உளவியல் நிபுனரின் கருத்தாய் வரும் வசனங்கள் எனக்கு விளக்கியது. அது:
1) ஜெர்மனியில் குடிமக்கள் தங்களுக்கு சொல்லப்படுவதை கேள்வியின்றி செய்வர் Germany is a country where the people do what they are told. நீ அப்படி தான் அங்கு வளர்வாய் You're raised from childhood not to question the authority. ஹிட்லர் இதை சாதகமாக்கி, ஒரு நாட்டையே தன் கட்டளைப்படி நடக்க செய்தான் He had an entire nation that believes it's perfectly natural to do whatever he says
2) இரண்டாவது தூஷ கொள்கை பரப்பு, யூதர்கள் மனிதர்கள் இல்லை, அவர்கள் மனித இனத்தின் சாபக்கேடு என்று anti-semitism கொள்கையை வேரூர பரப்பினான் Jews are not real human beings, they're a corruption of the race ஆக யூதர்களின் உரிமையை பறிப்பதிலும், அவர்களை கொல்வதிலும் தவறில்லை என்று எல்லோரையும் கண்மூடி நம்பும்படி செய்தான்.
இந்த வாதங்களை நிரூபிக்கும் வைகையில் இரு கதாபாத்திரங்களை படத்தில் காட்டுவர். ஒன்று concentration campன் பொறுப்பாளனின் குறுக்கு விசாரனை, அதில் அவன் எப்படி சக்தி வாய்ந்த விஷத்தை வைத்து அதிகம் பேரை சாகடிக்க முடியும் என்று தான் நிரூபித்து காட்டியதாக, முகத்தில் ஒரு சலனமும் குற்ற உனர்வும் இல்லாமல் சொல்வதிலும், பிறகு அந்த உளவியல் நிபுனர் "இப்படி செய்வதில் கொஞ்சமாவது வருத்தம் இருந்ததா" என்று கேட்க அவன் "இல்லவே இல்லை...நான் சொல்வதை செய்பவன்" என்று கூறுவான். இன்னொரு கதாபாத்திரம், ஹிட்லரின் இரண்டாம் நிலை தளபதி ஹெர்மன் கோரிங். படம் முழுவதும் நாஸிசத்தையும் ஹிட்லரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்ட்டில் வாதிடுவான், முடிவில் தான் அவன் மனைவி மூலம் அவனையும் ஹிட்லர் சுட்டுக்கொல்ல ஆனையிட, அதனால் அமேரிக்கரிடம் சரணடைந்தது விஷயம் நமக்கு தெரியும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, அமேரிக்க உளவியல் நிபுனரும், ஹெர்மன் கோரிங்க்கும் இடையே நடக்கும் சம்பாஷனை தான். உளவியல் நிபுனர் கோரிங்கிடம் "லட்சக்கனக்கான யூத அப்பாவிகளை கொல்வதை நீ எப்படி விளக்குவாய்" என்று கேட்க அதற்கு கோரிங் "நாங்கள் லட்சக்கனக்கான யூதர்களை கொன்றதை பற்றி பேசுகிறாயே, நீங்கள் ஹிரோஷிமாவில் அனுகுண்டை போட்டு லட்சக்கனக்கான ஜப்பானியர்களை கொன்றதை என்னவென்று சொல்வீர்கள். ஏன் அந்த குண்டை ஜெர்மனி மீது போட்டு ஜெர்மனியரை கொல்ல வேண்டியது தானே...நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் எனென்றால் ஒரு ஆசிய ஜப்பானியனை விட, ஐரோப்பா ஜெர்மனியன் உங்களுக்கு உசத்தியானவன். எங்கள் concentration campஐ பற்றி பேசுகிறீர்களே நீங்கள் போரின் போது உள்நாட்டிலே உள்ள உங்கள் நாட்டின் குடிமக்களான ஜப்பானியரை campல் அடைத்து கொடுமை படுத்தினீர்களே அதன் பேர் என்ன?....இனக் காழ்ப்புனர்ச்சி பற்றி பேசுகிறீர்களே, நீங்கள் கறுப்பர்களுக்கு செய்வதன் பெயர் என்ன, ஒரு கறுப்பனாவது உங்கள் நாட்டின் ரானுவத்தின் உயரதிகாரி ஆவானா?" என்று ஆவேசம் பொங்க கேட்பான். இதற்கு பதில் கூறமுடியாமல் அமேரிக்க நிபுனர் புன்னகை செய்வான். ஒரு கொடியவனின் சொல்லானாலும், அதில் உள்ள சில நியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். "வரலாறுகள் பதிவு செய்யப்படுவதில்லை, சிலரால் திருத்தி எழுதப்படுகிறது" என்று யாரோ சொன்னது.

Wednesday, January 25, 2006
Save earth for children
Just now saw the priya's blog on saving mother earth. Good to see this kind of initiatives to spread good messages. She has tagged me to convey and come up with 3 ideas. And here it goes:
1) Stay close to nature, Drink good: I've stopped drinking soft drinks since some time. We knew it's a junkie food and still we are some way addicted to it. Don't ask me to exclude the Diet's one in this list. Just by seeing the nutrition facts on those can's we know what all unheard chemicals we consume. Instead of this we can drink tender coconuts selling in streets. We can at least help a poor seller to have some business. Many times we see our people bargaining for those tender cocunuts and not to those cola junks they sell on shop. Also I would recommend drinking lots of water. Many medical theories prove drinking excess water is good for health.
2) Rain water harvesting: I am not a political analyzer to comment on ruling government policies. But definitely the rain water harvesting campaign brought by our CM is a commendable one. Let's save rain water and increase our ground water levels.
3)Teach nature: Agriculture is our country's backbone. We should start teaching our childrens the importance of agriculture and cultivate our young minds with nature deeds. We can start teaching the kids about gardening. Imagine encouraging our young minds to plant atleast one seed their life time and grow them. Then even more our population grows the more green and pasture our country would become.

Saturday, January 21, 2006
கனவு (சிறுகதை)
மெல்ல கண் திறந்தான் வாசு. பிரகாசமான வெளிச்சம் அவன் கண்களை கூசியது. சுற்றும் முற்றும் பார்க்க முயன்றான், அறையெல்லாம் வெளிச்சம் நிரப்பியது போல் இருந்தது. கண்களை மூடி திரும்பவும் திறந்தான். இப்போது வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தது. எதிரே ஒரு உருவம் மெல்ல தெரிந்தது.
"வாசு...நான் பேசறது கேக்கறதா" உருவம் முழுதும் தெரிவது முன் குரல் கேட்டது. வாசு தலையாட்டினான்.
"குட்...நான் யார்ன்னு தெரியுதா" பரிச்சயமான குரல், ஞாபகங்களை ஸ்கேன் செய்தான்.
"டாக்டர்" மெல்ல சொன்னான்
"வெரிகுட்...சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன?"
"கனவு டாக்டர் கனவு...கெட்ட..கெட்ட கனவு" இப்போது டாக்டரின் உருவம் முழுதும் தெரிந்தது.
"கனவு வருவது நார்மலான விஷயம் தானே...சமயத்தில எல்லோருக்கும் கெட்ட கனவு வரும்"
"இல்ல டாக்டர்...எனக்கு தினமும் வருது..கெட்ட...கெட்ட கனவா வருது"
"எப்போதிருந்து இது மாதிரி இருக்கு"
"ரொம்ப நாளா டாக்டர்...எப்ப ஆரம்பிச்சதுன்னு ஞாபகம் இல்ல..ஆனா ரொம்ப நாளா வருது" வாசு கண்களை மூடி திரும்பவும் ஞாபகங்களை தேடினான்...ம்ம்ம்..விடை வராதென்பது அவனுக்கு தெரியும். நிறைய நாட்கள் யோசித்து பார்த்துவிட்டான், எப்போதிருந்து கனவு கான ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை.
"வாசு...கனவுங்கிறது நம்மோட ஞாபகங்கள் தான். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான் நிகழ்ச்சியோ அல்லது மனச பாதிக்கிற விஷயமோ முடிவோ தீர்வோ இல்லாம நம்மோட ஞாபகங்கள்ல தேங்கிடும். அது தான் நாம தூங்கறப்போ கனவா ஒரு உருவம் கொடுத்து வரும். கம்ப்யூட்டர்ல எப்படி ஒரு ப்ரோக்ராம் மெமரில்ல ஏறி எக்ஸ்கியூட் ஆகி, கம்ப்யூட்டர் ஆ·ப் செஞ்சா கானாம போயிடுமோ....அது போல தான் நம்ம கனவும். தூங்கும் போது நம்ம மூளையென்னும் கம்ப்யூட்டர் நம்ம ஞாபகம் என்னும் மெமரியில இருந்து எடுத்து ஓட்டுற ஒரு ஸ்க்ரீன்சேவர் தான் கனவு. தூங்கி எழுந்தா..அது கானாம போயிடும். சில சமயம் ஒரு பகுதி மட்டும் ஞாபகம் இருக்கும்" வாசுவிற்கு புரியுமாறு டாக்டர் லெக்சர் கொடுத்தார்.
"டாக்டர்..என் கனவு எல்லாம் நிஜமா நடந்திருமோன்னு பயமா இருக்கு டாக்டர்"
"ஏன் அப்படி சொல்றீங்க.. சரி அப்படி என்ன கனவு கண்டீங்க..."
"அது எப்படி டாக்டர் சொல்ல முடியும்..நீங்கதான் கனவு கலைஞ்சிடும்ன்னு சொன்னீங்களே"
"இல்ல கலையாது...ஞாபகம் இருக்கும்...கண்ண மூடி யோசிங்க வாசு..."
"அப்ப தூக்கம் வருமா...எப்படி உங்க கூட பேசுவேன்"
"அதெல்லாம் பேசுவீங்க...மைல்டா செதட்டிவ் கொடுத்திருக்கேன்...தூக்கமும் வரும்..பேச்சும் வரும்"
வாசு கண்ணை மூடினான், டாக்டர் அவனை வருடிக்கொடுப்பது போல இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. எல்லாம் அமானுஷ்யமாக இருந்தது. கண்கள் இருந்தன எங்கோ போவது போல் இருந்தது ஆனால் உடம்பு மட்டும் நகரவில்லை. அது தெரிந்தது வாசுவிற்கு. திடீரென திரை விலகியது போல் இருந்தது.
"ஐயோ டாக்டர் அவன் தான் இது" வாசு அலறினான்.
"காம் டவுன்...யார் அது ?"
"அவன்தான் டாக்டர்... ரகு"
"யார் ரகு?"
"என் உயிர் நன்பன் டாக்டர்..சே...அப்படி சொல்றதுக்கே என் நாக்கு கூசுது...பாருங்க டாக்டர்..நன்பனின் மனைவின்னு கூட பாக்காம எப்படி பாக்கறான் பாருங்க என் மாலாவ"
"உங்க முன்னாடியே உங்க மனைவிய பார்க்கிறானா....நீங்க என்ன செய்யறீங்க... எங்க இருக்கீங்க"
"நான் திரும்பி தூங்கிகிட்டு இருக்கேன் டாக்டர்...அவன் எப்படி என் பெட் ரூம்ல வந்தான் டாக்டர்...மாலாவையே வெறிச்சி பாக்கிறானே..ஐயோ என் மாலாவ என்ன செய்ய போறானோ"
"எப்படி உங்க ரூமுக்கு வந்தான்...அவன் உங்க வீட்ல தான் தங்கியிருக்கானா"
"இல்ல டாக்டர்...பக்கத்து வீடு டாக்டர்...எப்படி வந்தான்னு தெரியல...ஒருவேல மாலாவே சாவி கொடுத்திருப்பாளோ"
"எப்படி சொல்றீங்க"
"அதான் எப்ப பார்த்தாலும் அவன் கூடவே இவ இளிச்சு இளிச்சு பேசுவாளே டாக்டர்...நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாளே"
"அப்ப உங்க மனைவிய சந்தேகப்படறீங்களா"
"இல்ல டாக்டர்...இல்ல...தப்பா சொல்லிட்டேன்...அவ பத்திரமாத்து தங்கம்...அவள நான் சந்தேகப்படக்கூடாது...இவன் கதவ உடச்சி வந்திருப்பான்"
"சரி நீங்க எழுந்திருச்சு அவன விரட்டுங்க"
"முடியல டாக்டர்...என்னால எழுந்திருக்க முடியல"
"முடியும்...இது உங்க கனவு... உங்களால முடியும்...உங்க மனைவிய காப்பாத்தனும் நினைச்சா உங்களால முடியும்"
"இல்ல டாக்டர்..என்னால முடியல..நான் மட்டும் எழுந்திருச்சா அவன நார் நாரா கிழிச்சு...ஐயோ அவன் கத்திய எடுக்கிறான் டாக்டர்...மாலா பக்கத்துல கொண்டுபோறான் டாக்டர்...அவள காப்பாத்துங்க...யாராவது காப்பாத்துங்க....மாலா...மாலா" வாசு பெரும் குரலெடுத்து அலறினான்.
"வாசு மிஸ்டர் வாசு" அவன் உடம்பு நகர்ந்தது. யாரோ குலுக்கியது போல இருந்தது. வாசு கண்களை திறந்தான். இப்போது பிரகாசமான வெளிச்சம் இல்லை..சற்று மங்கலான வெளிச்சமே. எதிரே டாக்டர் தெரிந்தார். முன்னைவிட கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார்.
"மிஸ்டர் வாசு உங்க மனைவி கொலை வழக்கு விசாரனை முடிவுக்கு வந்தாச்சு. உங்க மனைவி மாலாவ கோடூரமான முறையில கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கீங்க. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா" டாக்டரின் குரல் தான், ஆனால் வழக்கமான மருந்து வாசனை அடிக்கவில்லை. டாக்டர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார் என்பது வாசுவிற்கு புரிந்தது. ஒரு கணம் மவுனமாய் இருந்தான்.
"எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு யுவர் ஆனர்"

Wednesday, January 18, 2006
கொஞ்ச நேரம்
'அப்பாடா பொங்கல் படம் ஒன்று பார்த்தாச்சு" என்று சொல்லலாமென்று தான் நினைத்தேன், ஆனால் "ஐயயோ ஏண்டா பார்த்தோம்" என்று சொல்லும்படி ஆகிவிட்டது. நம்ம 'தல' அஜீத்தின் பரமசிவன் பார்த்தேன். சந்திரமுகி என்னும் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பி.வாசு, பாதியாய் எடை குறைத்த அஜீத் இவர்கள் கூட்டனியில் ஒரு கலக்கல் படம் கொடுத்திருப்பார்கள் என்று ஆர்வமாய் இருந்தேன், கடவுள் புன்னியத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யாமல் இதுவரை நாம் பார்த்து புளித்துப்போன கோலிவுட் கோமாளித்தனங்கள் எல்லாம் கொட்டி ஒரு சொதப்பலை கொடுத்திருக்கிறார்கள். 'சிறையில் இருக்கும் மரண் தண்டனை கைதி ஒருவனை வெளியில் கொண்டு வந்து, தீவரவாதிகளை தீர்த்துக்கட்டுவது' என்று சொன்னால் சுவாரஸ்யமாய் தோனும் கதை தான், ஆனால் அதை எப்படியெல்லாம் கொடுமையாய் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். முதலில் பி.வாசு அவர்களுக்கு, அரை செஞ்சுரி சினிமா எடுத்த நீங்கள் இன்னும் திரைக்கதை என்றால் என்ன என்பது தெரியாமல் இருப்பது அதிசயமே. முடிந்த வரையில் கதையை காட்சியாய் சொல்வது தான் திரைக்கதை, அதைவிட்டு கதாபாத்திரங்கள் எப்போதும் முழம் நீளத்துக்கு லெக்சர் கொடுப்பது ஏன். மேலும் உங்கள் சந்திரமுகி மெகா ஹிட்டாகி 200 நாள் கடந்து ஓடிவிட்டது, அதற்கு நீங்கள் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு விளம்பரபடுத்துவது ஏன். 'தல' அஜீத்... நந்தா, காக்க காக்க, கஜினி படங்களுக்கு உங்களை தான் முதலில் அனுகினார்கள் என்று படித்தேன், அதையெல்லாம் விட்டுவிட்டு இதில் நடிப்பதற்கு உங்களுக்கு அட்வைஸ் செய்த அந்த எதிரி யார் சார்?
ஆக்ஷன் படம் என்று நம்பி படம் பார்த்தால் ஒரே தமாஷாய் இருக்கிறது. வழக்கம் போல் ஒரு கேனச்சி வேடத்தில் லைலா வருகிறார். அமேரிக்க FBI ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ் போலீஸ் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நாட்டில் தலை போகிற விவகாரங்கள் பல இருக்க, தன் வீட்டில் வேலை செய்த ஒரு பாட்டியம்மாவின் பேரன் அஸ்தியை கண்டுபிடிக்க CBI ஆபிசராக ஜெயராம் துப்பு துலக்கி ஹீரோவையும் துரத்துகிறார். காமெடிக்கு விவேக் ம்ஹ¥ம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. இருக்கிற விஷயங்கள் போதாதென்று புதுசாக ITயை வேறு இழுக்கிறார்கள், தீவரவாதிகளுக்கு இவர்களே சொல்லி கொடுப்பார்கள் போலிருக்கு. அடிக்கடி கம்ப்யூட்டரை காட்டி, அசிங்கமான க்ராபிக்ஸ் சேர்த்தால் புதுமையான ஆக்ஷன் படம் தரலாமென்று நினைத்திருக்கிறார்கள். வாசு சார், மசாலா படத்தில எல்லாம் இருக்கனும்ங்கிறது வாஸ்தவம் தான், அதுக்காக டிவி சீரியல் எபிசோட் போல காட்சி விட்டு காட்சி காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் காமிக்கனும்னு அவசியம் இல்ல. நல்ல மசாலா படம் எடுக்கனும்னா போய் தரணி படம் பாருங்க. ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த படத்தில் ரசிக்கும்படியாய் இருக்கு அது க்ளைமாக்ஸில் அஜீத் போடும் ஸ்டண்ட். தான் ஒரு ரேஸ் வீரர் என்பதற்கு சாட்சியாய் தூப் போடாமல் நடித்திருக்கிறார். இதை பார்த்த பிறகு ஆதியை பார்க்க பீதியாய் இருக்கு.

Monday, January 16, 2006
சில நேரங்கள் சில ஞாபகங்கள் - அடி உதவுவது போல் I
அமெரிக்காவில் ஒரு நன்பருடன் அவர் அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்களின் மூன்று வயது மகனை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர்கள் ஒரு சம்பவம் சொன்னார்கள், ஒருமுறை அந்த சிறுவன் ஏதோ சேட்டை செய்திருக்கிறான், அவனை மிரட்ட அடிப்பதுபோல் கையை ஒங்கியிருக்கிறார்கள் அப்போது அந்தப் பையன் "அடிக்க வந்தால் 911 போன் செய்வேன்" என்று சொல்ல, அவர்கள் மிரண்டு விட்டார்கள்.
இதுபோல் நான் அந்த சிறுவன் வயதில் இப்படி "அடித்தால் போலீசுக்கு சொல்லிடுவேன்" என்று மிரட்டியிருக்க முடியாது. ஏனென்றால் நான் வளர்ந்ததே ஒரு காவலர் குடியிருப்பில்தான், அதுவும் ஒரு காவல் நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் குடியிருப்பில். நான் வளரும்போது வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அடி உதை என்பது மிகவும் பரிச்சயமான விஷயம். எங்கள் அப்பா என்னையும் அண்ணனையும் அடிப்பதற்க்கென்றே ஒரு லத்தி வைத்திருந்தார். நானும் அண்ணனும் எந்த விஷயத்தில் சன்டைப்போட்டாலும் அந்த லத்தியை மறைக்கும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருப்போம். பொதுவாகவே போலீஸ்காரர்கள் எப்படி குற்றவாளிகளை அடிப்பார்கள் என்று எனக்கு தெரியும். எங்கள் ப்ளாக்கின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், காவல் நிலையத்தில் குற்றவாளிகளை அடிப்பது நன்றாய் தெரியும். சினிமாவில் பார்ப்பது போல் குற்றவாளியை உட்கார வைத்து, மேலே ஹைவால்டேஜ் லைட் போட்டு அடிக்க மாட்டார்கள். அடி என்பது பல வைகைப்படும், முதலில் விசாரனைக்கு கூட்டி வந்து மேல் அதிகாரி விசாரனை செய்ய கான்ஸ்டபிள்கள் அடிப்பார்கள், அப்போது குற்றவாளி எல்லோர் மேலும் சத்தியம் செய்வது கேட்கும். இரண்டாவது வகை, லாக்கப்பில் இருக்கும் எல்லா கைதிகளையும் வெட்ட வெளியில் கூட்டி வந்து, கைகளை மேலே நீட்டச்சொல்லி ஒரு கட்டையை இடுக்கில் வைத்து சரமாரியாக அடிப்பது, இப்படி அடிக்கும்போது விசாரனையெல்லாம் இருக்காது, இது பொதுவான அடி. மூன்றாவது வகை, இரவில் சில பிரத்யேக குற்றவாளிகளை தலைகீழ் தொங்கவிட்டு அடிப்பார்கள், பொதுவாக இதை லாடம் கட்டுவது என்பார்கள். இதில் குற்றவாளியில் உள்ளங்காலில் மட்டும் அடிப்பார்கள். இப்படி அடித்தால் குற்றவாளியால் குறைந்தது ஆறு மாதத்திற்கு சரியாய் நடக்க முடியாது. இப்படியெல்லாம் அலுவலகத்தில் அடியுடன் பழகியவர்கள், வீட்டிற்கு வந்து பிள்ளைகள் தவறு செய்தால், கண்ணே மணியே என்று கொஞ்ச மாட்டார்கள், ஒரு கணம் தான் காவல் நிலையத்தில் அடித்த குற்றவாளியை பார்ப்பது போல் பிள்ளைகளை பார்ப்பார்கள், அதனால் இங்கேயும் பெரும்பாலும் லத்தியே பேசும். எங்கள் வீட்டில் நானும் அண்ணனும் தான் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறோம். தங்கையை அப்பாவோ, அம்மாவோ அடித்து ஞாபகம் இல்லை. ஒருவேளை அவள் பெரும்பாலும் சேட்டைகள் செய்யாமல், நாங்கள் செய்யும் சேட்டைக்கு சாட்சியாய் இருந்ததால் அடித்ததில்லையோ! நானாவது அப்பா அடிக்க கையை ஓங்குவதற்கு முன்னாலேயே, அடிப்பட்டதாய் அழுது, பெரும்பாலும் அடியிலிருந்தோ அல்லது குறைந்த அடியோடு தப்பித்திருக்கிறேன், அண்ணந்தான் எப்போது அப்பா அடித்தாலும், வெள்ளையனை எதிர்த்த தியாகிபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்று, தர்மடி வாங்குவான். இதுபோல் குழந்தைகளை தண்டிப்பதில் பலருக்கு இப்போது உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வளர்ந்த அந்த சூழ்நிலையில் இது போன்ற தண்டனைகள் தான் நாங்கள் ஒழுக்கத்துடன் வளர உதவின. இல்லையென்றால் நான் வேறுமாதிரி போயிருப்பேன், அதற்கான அத்தனை வழிகளும் காவலர் குடியிருப்பில் இருந்தன. நான் ஒருபோதும் அப்பாவை குறை சொல்ல மாட்டேன். இத்தனைக்கும், அங்கு இருந்த வீடுகளில் எங்கள் வீட்டில் தான் தண்டனைகள் சற்று குறைவாய் இருந்தன. மற்றவரெல்லாம் பல லத்திகளையும், பெல்ட்டுகளையும் தின்றவர்கள். எங்கள் வீட்டின் மேல் வீட்டில் ஒரு பையன் இருந்தான், என் அண்ணன் வயதுதான் இருக்கும் அவனுக்கு. இருமுறை வீட்டை விட்டு ஓடியவன். இரண்டாவது முறை ஊட்டிக்கு நன்பர்களுடன் சென்றவன், ஒரு மாதம் கழித்துதான் வந்தான். அவன் வந்த இருநாள் வீடு அமைதியாக இருந்தது. மூன்றாம் நாள் இரவு விடிய விடிய அவன் அலறல் அங்கிருந்த எல்லோர் தூக்கத்தையும் கெடுத்தது. என்ன நடந்தது என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. அதன்பிறகு அவன் முற்றிலும் மாறிப்போனான். யாரிடமும் கலக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நல்ல பிள்ளையாய் மாறிவிட்டான்.

Wednesday, January 04, 2006
ஆங்கில படம்
நான் முதன் முதலில் பார்த்த ஆங்கில பட அனுபவம் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக்கொண்டிருந்தேன், அப்பா தேவிபாரடைஸ் தியேட்டரில் ஒரு நல்ல ஆக்ஷன் படம் வந்திருப்பதாய் அறிந்து, முதலில் அதை தான் பார்த்து, 'குழந்தைகளை கூட்டிச் செல்லும் படம் தான்' என்பதை உறுதி செய்து எங்களையெல்லாம் கூட்டிச் சென்றார். நைட்ஷோ போனோம், முதல் முறையாய் லி·ப்டையும் அப்போது தான் பார்க்கிறேன். ஸீட்டில் போய் உட்கார்ந்ததும் எனக்கு குளிர் தொற்றிக்கொண்டது, உடம்பை இறுக்கி அனைத்தபடி பல்லில் தந்தியடித்தபடியே படத்தை பார்க்கிறேன். படம் பெயர் ஏதோ thunder என்று வரும், சரியாய் ஞாபகம் இல்லை. படத்தில் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டல்லோன் போல் தலையில் ரிப்பன் கட்டி, பெரிய பெரிய குழாய் துப்பாக்கிகள் வைத்து, செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல் தோளின் குறுக்கில் செறுகி வைத்த மூக்குப்பொடி டப்பாக்கள் போல புல்லட் பெல்ட் மாட்டி, புல்டோசர் போன்ற வாகனத்தில் வந்து எதிரிகளை வதம் செய்தார். ஏன் செய்தார் என்பது ஞாபகம் இல்லை, அடித்த குளிரில் நான் பாதி படத்தின் மேல் தூங்கிவிட்டேன். அதன் பிறகு நானும் அண்ணனும், அரையாண்டு, காலாண்டு லீவுக்கெல்லாம் அப்பாவை வீடியோ ப்ளேயர் வாடகைக்கு வாங்கி வரச்சொல்லி, snake in the monkey shadows, monkey in the eagle shadows..என்று எல்லா விலங்கினத்தின் பேரிலும் வரும் ஆங்கில-சைனா-குங்பூ படங்களை வாங்கி பார்ப்போம். இது போன்ற படங்கள் எல்லாவற்றிலும் கதை ஒரே மாதிரியே தான் இருக்கும். ஹீரோவின் குடும்பத்தை pantன் மேல் கருப்பு பாவாடை கட்டிய வில்லன் கொன்றுவிடுவான், ஹீரோ நேரே வெள்ளை பாவாடை கட்டிய மாஸ்டரிடம் "மாஷ்டர்..டீச் மீ..குங்பூ" என்று மூச்சு விடுவதை விட வேகமாய் பேசி, கஷ்டப்பட்டு குங்பூ கற்று, மீண்டும் கருப்பு பாவாடை கட்டிய வில்லனை அடித்து நொறுக்கி பழிவாங்குவான். அப்பாவின் நன்பர் ஒருவர் ஜாக்கிச்சான் பட ரசிகர். எந்த ஜாக்கிச்சான் படம் வந்தாலும் தன் இரு மகன்களையும் தியேட்டருக்கு கூட்டிச் சென்று படத்தை பார்த்துவிடுவார். என்ன தான் ஆக்ஷன் படமானாலும், ஜாக்கிச்சான் படங்களிலும் ஒன்றிரண்டு விவகார காட்சிகள் வரும், காமெடியாக தான், அதனால் அவர் எப்போதும் மகன்களை தன் இருபுறமும் உட்கார வைத்து, அவர்களின் தோளில் மேல் கைபோட்டுக்கொன்டே படம் பார்ப்பார். படத்தில் இசகுபிசகாக காட்சிகள் வந்தால் உடனே கைகளை தூக்கி மகன்களின் கண்களை மூடிவிடுவார்.
ஒருமுறை சாந்தம் தியேட்டரில் குழந்தைகள் விரும்பும் ஆங்கிலப்படம் ஒன்று ஓடுவதாக அப்பா கேள்விபட, அதை பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோவிற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தார். கடைசி நிமிஷத்தில் அப்பாவால் படத்திற்கு எங்களோடு வர முடியவில்லை, உடனே அம்மாவை எங்களையெல்லாம் அழைத்து போகச் சொன்னார். அம்மாவிற்கோ ஒரே பதற்றம், இதற்குமுன் எங்களை தனியாய் ஆங்கிலப் படத்திற்கு கூட்டி சென்றதே கிடையாது. சம்சாரம் அது மின்சாரம், மனதில் உறுதி வேண்டும் போன்ற நல்ல தமிழ் படத்திற்கு தான் கூட்டி சென்றிருக்கிறார். சத்யம் காம்ப்ளெக்ஸ் அடைந்ததும் அங்கிருந்த போஸ்டர்களை பார்த்தார், அப்படி ஒன்றும் வில்லங்கமான போஸ்டர்கள் அங்கு கானோம். அங்கு நின்றுகொண்டிருந்த நேரமெல்லாம் டென்ஷனாகவே இருந்தார் அம்மா. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணனிடம் "உள்ள போய் படம் போஸ்டர்ல எங்கேயாவது கேப்பிடல் ஏ சுத்தி சர்க்கிள் போட்டிருக்கான்னு பாத்துகிட்டு வா" என்று அவனை உள்ளே அனுப்பினார். அவன் திரும்பி வந்து
"அப்படி ஒன்னும் இல்லம்மா"
"நல்லா பாத்தியா"
"நல்லா பாத்துட்டேன்"
அம்மாவிற்கு இன்னும் பதற்றம் குறையவில்லை, திரும்பவும் அண்ணனை உள்ளே போய் பார்க்கச் சொன்னார். அண்ணன் இந்தமுறை முரண்டு பிடித்தான், வழக்கம் போல் அம்மா பார்வையால் அதட்டி அவனை போக வைத்தார். அண்ணன் வந்து
"நல்லா பாத்துட்டேன்மா...சத்யம் தியேட்டர்ல ஓடற படத்துல தான் அந்த மாதிரி போட்டிருக்கு" என்று போஸ்டரை கைகான்பித்தான். சத்யம் தியேட்டரில் அப்போது 'fly' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது, அதிலும் கூட மனிதர்களின் படங்கள் கானோம், ஒரு பெரிய ஈயின் படமே இருந்தது. இந்தமுறை அம்மா கையில் வைத்திருந்த டிக்கெட்டை அண்ணனிடம் கொடுத்து
"போய் அந்த டிக்கெட் கவுண்டர்ல...இந்த டிக்கெட்ட காமிச்சு, சாந்தம் தியேட்டர்லதான் நாம பாக்க வந்த படம் ஓடுதான்னு கேட்டுட்டு வா" என்று சொன்னார்.
அண்ணனிற்கு 'ஏன் தான் வந்தோம்' என ஆகிவிட்டது, கவுண்ட்டரில் போய் அம்மா சொன்னதை உறுதிபடுத்திக்கொண்டு திரும்பினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வழியாய் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். திரையில் அஸ்ஸாமின் ஆதிவாசி நடனமும், கூடவே பாரதப் பிரதமர் விஜயமும், கருப்பு வெள்ளையில் நியூஸ் ரீலாய் ஓடுக்கொண்டிருந்தது. அது முடிந்து வீக்கோ டருமெரிக் விளம்பரம் வந்தது. அப்போது அம்மா எங்களிடம் திரும்பி "நான் சொல்லும்போது கண்ண மூடிக்கனும்...புரியுதா" என்று எங்களுக்கு instructions கொடுத்தாள். நல்லவேளை பாக்யராஜ் படம் போல சில்லறை மாற்றி வைக்கவில்லை. படம் ஆரம்பித்து டைட்டில் முடிந்து ஒன்றிரண்டு காட்சிகள் வரையில் அம்மா டென்ஷனாகவே இருந்தார். பிறகு படத்தில் இன்வால்வ் ஆகி எங்களோடு மிகவும் ரசித்து பார்த்தார். படம் முடியும் வரையில் அம்மாவின் instructionsக்கு வேலையில்லாமல் போயிற்று. இப்படி அம்மாவுக்கு ஒரு பெரிய மிஷனாய் அமைந்த அந்த படத்தின் பெயரை நான் இன்னும் சொல்லவில்லையே, அது வேறொன்றும் இல்லை, மெக்காலே கல்க்கின் நடித்து வெளிவந்த 'ஹோம் அலோன்' பார்ட் ஒன் தான் அந்த படம்.

Tuesday, January 03, 2006
தமிழ் பேசுங்க
முதலில் இது ஏதோ தமிழைக் காப்பாற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கத்தின் பிரசார பதிவு என்று முடிவு கட்டாதீர்கள். அப்படி இருந்தால் 'தமிழில் மட்டும் பேசுங்க....இல்லையென்றால் துடைப்பம் பறக்கும்' என்று தலைப்பு வைத்திருப்பேன். சுமார் நான்கைந்து வருடம் முன்பு ஒரு நாள் என் நன்பன் ப்ரேமை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் நிறைய விருந்தினர்கள் இருந்தார்கள் அதனால் அவனை அழைத்து அவன் வீட்டின் மாடிக்கு சென்றேன் (இல்லையென்றாலும் மாடிக்கு தான் போவோம், அங்கு தான் எங்களுக்கு ஒரு privacy கிடைக்கும்). அப்போது மாடிக்கு அவன் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினரில் ஒரு சிறுவன், நல்ல வெளுப்பாய் புஷ்டியாய், பார்க்கும்போதே மம்மி, டாடி, ஆன்ட்டி என மற்றவரை விளிக்கும், நாம் அன்றாடம் பார்க்கும் சென்னை நகரத்து 'ஆரோக்யா பால்' சிறுவனைப் போலவே இருந்தான். அவனை பார்த்து ப்ரேம் "டேய் இங்க என்ன பன்ற" என்று இதே தோனியில் கேட்டான். அதற்கு அவன் "காற்று வேண்டிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா" என்றான். எனக்கு ஒரே ஆச்சர்யம், இவ்வளவு சுத்த தமிழை பேச்சு வழக்கில் நான் கேட்டதே இல்லை. என் ஆச்சர்யத்தை கவனித்த ப்ரேம் "மச்சி ஷாக் ஆவாத..இந்த பையன் srilankan..அதான் இப்படி பேசறான்...புரியறது கொஞ்சம் கஷ்டம்தான்" என்றான். எனக்கு இதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இப்படி சொன்னதற்கு ப்ரேம் மீது கடுப்பாய் இருந்தது, அந்த சிறுவன் மீது பொறாமையா இருந்தது. தமிழ்நாட்டில் பிறந்து, நல்ல தமிழ் பேசவேண்டுமானால் நான் ஸ்ரீலங்கா தான் போகவேண்டும் போல. சென்ற வருடம் விடுமுறைக்கு சென்னை சென்றபோது ஒரு சம்பவம். விசா ஸ்டாம்பிங்காக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க நுங்கம்பாக்கத்தில் உள்ள konica ஸ்டுடியோவிற்கு என் நன்பனுடன் சென்றேன். ரிசப்ஷனில் சோகையாய் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள் நான் அவரிடம் சென்று "யுஎஸ் விசாவுக்கு போட்டோ எடுக்கனும் (சாதாரனமாய் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்று சொல்ல முடியாது, யுஎஸ் விசாவுக்கென சில specifications உள்ளது) " என்று சொன்னேன். "அந்த கவுன்ட்டர்ல போய் வெயிட் பன்னுங்க" அருகே இருந்த கவுன்ட்டரை கை கான்பித்தாள். நான் அங்கிருந்து நகர்ந்து அவள் காட்டிய இடத்தில் நன்பனுடன் போய் நின்றேன். சிறுது நேரம் கழித்து அந்தப்பெண்ணே என் எதிரில் வந்து "sir we have various packages for passports, do you like the photo to be copied in the CD...." என்று இல்லாத ஒரு accentல் சிரமப்பட்டு ஆங்கிலம் பேசினாள். எனக்கு ஒரே குழப்பம், என்னடா இது, சற்று நேரம் முன்புதான் இவளிடம் தமிழில் பேசினோம், பதிலுக்கு தமிழிலே பதில் சொன்னாள், ஏன் இந்த இடத்தில் இப்படி பேசுகிறாள். பிறகு நானும் ஆங்கிலத்திலே பேசி அவளிடம் ஆர்டர் கொடுத்தேன். திரும்பியவுடன் இதையெல்லாம் கவனித்த என் நன்பன் "என்னடா அங்க தமிழ்ல பேசினா...இங்க இப்படி பீட்டர் விடறா" நான் உடனே "தெரியலடா ஒரு வேள american bodyய கரெக்ட் பன்றாளோ" (சும்மா ஒரு டைமிங்கிற்கு விவேக்கின் பிட்டை எடுத்து விட்டேன் ஹி..ஹி).இது மாதிரி மற்றொரு நாள் சில டாக்குமெண்ட்டுகளை மும்பைக்கு கூரியர் அனுப்ப DHL சென்றேன், அங்கும் இதே போல் ஒரு அம்மனி நல்ல சேலை கட்டி, சடை பின்னி, மல்லிகை வைத்து, பார்க்க nativityயுடன் இருக்க, நான் நேரே சென்று "பாம்பேக்கு ஒரு கூரியர் அனுப்பனுங்க" என்று தமிழில் கேட்க அவர் "sir it will reach only by friday sir" என்று சொன்னாள். சரி அவருக்கு உன்மையிலே தமிழ் தெரியாதோ என்று நினைத்த நான் "can it be received sooner by any chance" என்று கேட்க அந்த அம்மனி one minute please என்று சொல்லி திரும்பி அருகில் இருப்பவரிடம் "பெருமாள் சார்...பாம்பேக்கு ரெண்டு நாள்ல முன்னடி கூரியர் போகுமா" என்று கேட்டாள். பெருமாள் போகாது என்று சொல்ல, no sir என்று அனாவசியத்திற்கு அதை மொழிபெயர்த்தாள். கோனிக்காவிற்கு வந்த அதே நன்பனிடம் "என்னடா இது எங்கேயும் இப்படிதானா" என்று நான் வருத்தப்பட, அவன் "மச்சான் இப்ப பெட்டிக்கடைக்கு போனா கூட இப்படித்தான் இங்கிலிஷ்ல அலட்றாய்ங்க" என்று அவன் ஆதங்கப்பட்டான்.
நான் கேட்பதெல்லாம் இதுதான், தமிழ் என்று தெரிந்தபின் கூட ஏன் தமிழில் பேச தயங்குகிறார்கள். நான் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, official communication எல்லாமே ஆங்கிலத்தில் தான் நடக்கும். அதற்கு சில நியாங்கள் உள்ளன, அது ஒரு பன்னாட்டு நிறுவனம், ஐடி கம்பெனி அதனால் உள்ளே meeting, conference எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள எல்லா ஐடி நிறுவனங்களிலும் இப்படி தான் உள்ளன. நன்பரிடமும், தெரிந்தவர்களிடமும் unofficialஆக பேசும்போது தமிழில் தான் பேசுவோம். அதே நபருடன் வேலை சம்பந்தமாக பேசும்போது strictly english. ஆனால் இது சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் தானா என்று நினைக்கிறேன். ஒரு சமயம் எங்கள் நிறுவனத்தில் ஒரு training எடுப்பதற்காக புனே சென்றேன். ட்ரெயினிங் ரூமில், என்னை அறிமுகப்படுத்தும்போதே, எனக்கு ஹிந்தி தெரியாது என்று அழுத்தமாய் சொல்லி ட்ரெயினிங் நடத்தினேன். நடு நடுவே சிலர் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னிடம் ஹிந்தியிலே கேள்வி கேட்டனர். எனக்கு எரிச்சலாகிவிட்டது. அப்போது தான் கவனித்தேன், அங்கு எப்போதும், எல்லோரும் ஹிந்தியிலே பேசினார்கள். அவ்வப்போது தான் ஆங்கிலம் எட்டிப்பார்த்தது. ஆனால் சென்னையில் இப்போதெல்லாம் அவ்வப்போதும் தமிழ் தலை கான்பதில்லை. முக்கியமாய் பெண்கள்தான் அதிகமாய் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து அளக்கிறார்கள் என்று நான் சொன்னால், மகளிர் அணி யாரும் என்மீது கோபப்படக்கூடாது. இது நானே பல தடவை சென்னையில் பார்த்த உன்மை. ஒரு சமயம் மதிய உணவு சாப்பிட நான் போய்க்கொண்டிருந்தேன் அப்போது ஒரு பெண் மற்றொருவரிடம் "Hey come...yaar..stomach ஒரே பசியிங்yaar" என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஒன்று "வாடி சாப்பிட போகலாம் பசிக்குது" என்று தமிழில் கூப்பிட்டிருக்கலாம், இல்லை முற்றிலுமாய் ஆங்கிலத்திலே கூப்பிட்டு இருக்கலாம். இவர்கள் ஏன் புதுசாய் ஒரு மொழியை கண்டுபிடிக்கிறார்களோ. இதை ஒருவன் எங்கள் intranetல் இருக்கும் discussion forumத்தில் போட, அதற்கு குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பை போல பல மடங்கு மகளிர் அணியினர் அவனைக் கிழித்து தோரனம் கட்டிவிட்டனர். ஒரு முரண்பாட்டை மட்டும் இவர்களை போன்றவர்களிடம் பார்க்கிறேன், அங்கு இப்படி ஆங்கிலம் அல்லது தமிங்கிலம் பேசுபவர்கள், இங்கு வந்தால் மட்டும் முடிந்தவரையில் தமிழில் பேசுகின்றனர். ஒருவேளை அந்நியர் காதில் கேட்காதவாறு ஒரு cryptographic privacyஐ உருவாக்குகிறார்களோ.. என்னவோ.

Wednesday, December 28, 2005
யாருடன் (சிறுகதை)
(சுஜாதாவின் இடது ஓரத்தில் என்ற கதையை படித்து inspire ஆகி எழுதியது. இதில் என்ன சூட்சுமம் கையாள முயற்சி செய்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால், அவருக்கு சுக்கிர திசை ஆரம்பமாகும், நாலாம் இடத்தில் 'சூரியன்' அமர்ந்து, ஐந்தாம் இடத்தில் 'நாட்டாமை' நல்ல தீர்ப்பு சொல்வார்)
புருஷோத்தமன் கன்னத்தில் கைவத்தபடி வலது பக்கம் திரும்பி உற்று பார்த்துக்கொண்டிருந்தான், அவன் முன் அகிலாவின் முகம் தெரிந்தது. அவன் அவளை கவனித்ததாய் தெரியவில்லை.
டாக்டர் திவாகர் அங்கு நிலவிய நிசப்தத்தை கலைத்தார்.
"மிஸ்டர் புருஷோத்தமன், நீங்க படிச்சவர், பெரிய எழுத்தாளரும் கூட, உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்ல, உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கே தெரியும்"
"பிரச்சினைன்னு நீங்க தான் சொல்றீங்க டாக்டர், அப்படியே அது உன்மையா இருந்தாலும், அது எனக்கு ஒரு பிரச்சினையாவே தெரியலயே...அகிலாவுக்கும் தெரியல"
"புருஷோத்தமன் first thing உங்க மனைவிக்கு அது பிரச்சினையா இருக்கு...second thing திரும்பவும் சொல்றன் அகிலான்னு யாரும் இல்ல அது வெறும் hallucinations"
"இல்ல டாக்டர், அகிலா இதோ பக்கத்துல தான் உட்கார்ந்திருக்கா....என்ன...என்னது...இரு டாக்டர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்ல" தனக்கு அருகில் இருந்த சேரைப்பார்த்து பேசினான்.
திவாகர் தன் கண்ணாடியை கழற்றி, சேரை நகர்த்தி கொஞ்சம் முன்னே வந்தார், தலையை சற்று தாழ்த்தி புருஷோத்தமனை நேருக்கு நேர் பார்த்து பேசினார்.
"look...look here புருஷோத்தமன்...என்ன பாருங்க" புருஷோத்தமன் திரும்பி திவாகரை பார்த்தான்
"அகிலாங்கிறது யாரு?"
"அகிலா என் தோழி..இல்ல அதுக்கும் மேல..இதோ இருக்கா டாக்டர்...இங்க பாருங்க டாக்டர், இதோ சிரிக்கிறா பாருங்க.."
"அகிலாவ முதன் முதல்ல எங்க பார்த்தீங்க புருஷோத்தமன்"
"முதன் முதல்ல என் கதையில படிச்சேன் டாக்டர்"
"படிக்கில புருஷோத்தமன், படைத்து இருக்கீங்க...உங்க கதையில வருகிற ஒரு கேரக்டர் அவங்க...ஏதோ சில காரணங்கள் அந்த கேரக்டர் உங்கள ரொம்பவே பாதிச்சிருக்கு...அந்த பாதிப்புகள் அகிலாவுக்கு உருவம் கொடுத்திருக்கு அது தான் பிம்பமா உங்கள தொடருது"
புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை, வெறுமை மிஞ்சிய அவண் கண்கள் திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தன. திவாகர் தொடர்ந்தார்
"Whatever you having now are episodes of schizophrenia psychosis. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் பல விஷயத்துல கருத்து வேறுபாடு. நீங்க எழுதுறது அவங்களுக்கு பிடிக்கல, நீங்க எதிர்பார்த்த அளவு உங்க சுக துக்கத்துல அவங்க பங்கு எடுத்துக்கல..ஆனா நீங்க உருவாக்கின அகிலா இதுக்கு நேரெதிர். கனவனுக்கு அனுசரனையா, தோழியா, நிறைய அன்பா இருக்கிற இலக்கிய ரசனை கொண்ட ஒரு கேரக்டர். Infact உங்க மனைவி எப்படியெல்லாம் இருக்கனும்னு நீங்க எதிர்பார்த்தீங்களோ அதுதான் அகிலா" புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தான். திவாகர் ஒரு பெருமூச்சு விட்டார் mental illness with creative intellectualness...a tough job மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
"ஓகே புருஷோத்தமன்....அகிலாவ தவிர வேற யாராவது உங்க கூட பேசறாங்களா...வேற யாரையாவது பார்க்கிறீங்களா" திவாகரின் கேள்விக்கு புருஷோத்தமன் டாக்டர் சேரின் பின்னே தெரியும் கதவை பார்த்தான், கதவின் நடுவில் சதுரமாய் ஒரு கண்ணாடி பதிந்திருக்க அதற்குப் பின்னால்....
"பாருங்க டாக்டர் நான் சொல்லும்போது நீங்க நம்பலையே...இப்ப பாருங்க" நர்ஸ் ரோஸ்மேரி சீ·ப் டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் சொன்னாள். ரங்கபாஷ்யத்திற்கு தான் பார்த்துக்கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை.
"ஏதோ schizophrenia பற்றி பிஹெடி செய்யப்போறதா சொன்னதாலதான் வெறும் schizophrenic பேஷண்ட்ஸ் மட்டும் டயாக்னோசிஸ் பன்ன அனுமதிச்சேன்...அதுக்கு இவ்வளவு பெரிய சைட் எ·பெக்டா....ஓ மை காட்..தனியா அங்க யார் கூட பேசிகிட்டு இருக்கான்" ரங்கபாஷ்யம் குரலில் கவலை தெரிந்தது.
"என்ன அங்கயே பார்க்கறீங்க" அருகே அகிலாவின் குரல் கேட்டது.
"என்ன ஆச்சு இந்த டாக்டருக்கு !! தனியா அங்க நின்னுகிட்டு யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கார், உள்ள அப்படி என்ன பார்க்கிறாரு...சரியான இடத்துக்கு தான் வந்திருக்கோமா" புருஷோத்தமன் கேட்டான்.

Friday, December 23, 2005
கொஞ்ச நேரம்...
இந்த வாரம் ஹாலிவுட் வீடியோ சென்று traffic, wall street, and justice for all என்ற மூன்று படங்களை எடுத்தேன். எதை வைத்து இந்த மூன்றையும் எடுத்தேன் என்பது மறந்து போயிற்று. இந்த மூன்று படங்களை பார்த்து முடித்த போதுதான் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமையை கவனித்தேன். இந்த மூன்று படங்களுமே ஒரு atmosphereஐ முன்னிறுத்தி அதன் திரைமறைவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசுகிறது. Traffic அமெரிக்காவின் போதை கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கை பற்றியது, wall street அமெரிக்காவின் பங்கு சந்தை பின்னால் நடக்கும் சூட்சமங்களை பற்றி சொல்லும் படம், ..and justice for all அமெரிக்காவின் ஜூடிஷியல் சிஸ்டத்தின் அவலங்களை சொல்லும் படம். நான் மிகவும் ரசித்த படம் and justice for all. Alpacino இந்த படத்திற்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார். Traffic படத்தின் narration வித்தியாசமாக இருந்தது. படத்தில் பல கதாபாத்திரங்கள், எல்லோருக்கும் சில நிகழ்வுகள், அந்த நிகழ்வுக்குள் ஒரு தொடர்பு. அவை நடப்பதும் வெவ்வேறு இடத்தில், ஒளிப்பதிவும் வெவ்வேறு toneல். இது போன்ற ஒரு screenplay treatment பல ஆங்கில படங்களில் கையாளப்பட்டு இருக்கின்றன. எனக்கு தெரிந்து இவ்வகையில் நான் பார்த்த முதல் படம் magnolia. சமீபத்தில் கூட crash என்ற ஒரு படம் இவ்வகை screenplay சார்ந்தே இருக்கும். தமிழில் தேடினால் எனக்கு இரண்டு படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது, best example பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்', மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' முழுமையாக இவ்வகை என்று சொல்லமுடியாது but close to என்று சொல்லலாம். ஏனெனில் ஆயுத எழுத்தில் பாதி படத்திற்கு மேல் ஒரு கதாபாத்திரத்தின் நிகழ்வு மற்றொன்றை சார்ந்து இருக்கும். ஒரு வீடு இரு வாசலில் இரண்டாவது கதையின் நாயகன், முதல் கதையில் நாயகனை சந்திப்பான், அவ்வளவு தான், ஒரு சின்ன தொடர்பு இருக்குமே தவிர, ஒரு கதாபாத்திரத்தின் கதை மற்றொரு கதையை மாற்றாது.
நாமும் இதுபோல் சிறுகதையில் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு கதையில் protoganist character நாலைந்து supportive charcters, like ஒருவன் அடிப்பட்ட ஒருவனை அழைத்து மருத்துவமனை செல்கிறான், அங்கே பலரின் அலட்சியத்தால் (ex: ஒரு டாக்டர், நர்ஸ், இன்னொரு நோயாளி) அடிப்பட்டவன் இறந்து போகிறான். இது ஒரு கதை, இப்போது டாக்டர், நர்ஸ், அடிப்பட்டவன், நோயாளி என்று சப்போர்டிவ் கேரக்டர்ஸ் வருகிறது, இந்த சப்போர்டிவ் கேரக்டர்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லலாம். ஏன் இவர்களால் அந்த அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒவ்வொருவர் பார்வையில் ஒரு சிறுகதையாக சொல்லலாம். நம் வலைப்பதிப்பிலே இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.

Wednesday, December 21, 2005
சென்னையில் ஒரு எதிர்காலம் (சிறுகதை)

(சுஜாதா என்னுடைய ஆதர்ச எழுத்தாளர். அவருடைய பன்முகத்தன்மை கொண்ட எழுத்துகள் என்னை மிகவும் ஈர்க்கும். எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் sci-fi எழுதிய எழுத்தாளர் அவர் தான். எல்லோருக்கும் ஒரு காலத்தில் டிடியில் வந்த 'என் இனிய இயந்திரா' ஞாபகம் இருக்கும். அவரை போல நானும் ஒரு sci-fi எழுத வேண்டும் என்ற விபரீத ஆசையின் வெளிப்பாடு தான் இந்த சிறுகதை.)
சென்னை - 2115
'எழில்' கட்டடத்தின் 105ஆவது மாடியில் இருந்தது மூவா உணவகம். நிதி வெளியே பார்த்தாள், விசாலமான வானம், தூரத்தில் சென்னையில் உயரமான 'அரசு' கட்டிடம், மொத்தமாக 333 மாடி, யாரோ ஒரு அரசியல்வாதி தன் ராசி எண் 3 வருமாறு அந்த கட்டடத்தை கட்டியதாக கேள்வி. ஒரே கட்டிடத்தில் சட்டசபை, செயலகம் என எல்லா அரசு சார்ந்த துறைகளும் இயங்கி வருகிறது. நிதியின் பார்வையை சலனம் செய்து பறந்தது ஒரு எரோ, அப்போது தான் சற்று கீழே பார்த்தாள், வித்தியாசமான கலர்களில் ஏரோக்கள் பறந்துக் கொண்டிருந்தன, அவள் இருந்த உயரத்தில் ட்ரா·பிக் கொஞ்சம் கம்மி தான். இவையெல்லாம் ஒரு காலத்தில் கார் என்ற பெயரில் தரையில் சென்றதாக அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, 'ஒரு தடவை ம்யூசியம் சென்று பார்க்க வேண்டும்' தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். இன்னும் யாரையும் கானோம், அவள் வந்து இரண்டு நிமிடம் ஆயிற்று. இந்நேரம் பல வேலைகள் செய்திருக்கலாம். நிதி தன் எதிரே இருந்த சுவரை பார்த்தாள், டிஜிட்டல் பிரேமில் எழில் கட்டடத்தின் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் "மூவா உணவகம்: எல்லோருக்கும் ஒரே சேவை" என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தது, வார்த்தைகள் முடிவில் ஒருவனின் பிம்பங்கள் பல தோளில் கைபோட்டு சிரித்து கொண்டிருந்தனர். நிதி அப்போது தான் தன் முன்னே இருக்கும் டேபிளை பார்த்தாள் வழித்து சீவிய தலையுடன் தெரோ கோட் சூட் அனிந்த ஒருவன் ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்தான், அவளை நோக்கி மற்றொருவன் வந்தான், அச்சு அசலாய் ஆர்டர் எடுப்பவனை வார்த்தது போலவே இருந்தான். "மாலை வணக்கம் நிதி அவர்களே...எங்கள் உணவகத்தின் உங்கள் முதல் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய ஷ்பெஷல் வைட்டோ வேகா, ப்ரொட்டீன் மோஷா..." அவன் அடுக்கிக் கொண்டே போனான். "எனக்கு குடிக்க கார்போ ஒரு கோப்பை, மற்றவை சிறிது நேரம் கழித்து சொல்கிறேன்" நிதி அவனை நிறுத்தினாள். அவன் புன்னகை செய்து அங்கிருந்து நகர்ந்தான். அப்போது தான் அவன் காதருகே சிகப்பாய் மின்னும் அந்த சில்லை கவனித்தாள். திரும்பவும் எதிரே இருக்கும் டிஜிட்டல் ·ப்ரேமை பார்த்தாள் "மூவா உணவகம்: எல்லோருக்கும் ஒரே சேவை" அதன் பின் தெரிந்த படங்களில் முதலில் தோன்றியவனை தவிர மற்ற எல்லோருக்கும் காதருகே அந்த சிகப்பு சில் இருந்தது.
நிதி திரும்பவும் மணி பார்த்தாள், அவள் வந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. இதற்கு மேல் உலகத்தோடு தொடர்பு அறுந்து போய் இருக்க அவள் விரும்பவில்லை. தன் கைப்பையை திறந்து அவளின் மினினியை எடுத்தாள் 6x6 இன்ச்சில் ஒரு கண்ணாடி துண்டு போல் இருந்தது வலது ஒரத்தின் கீழே ஒரு சின்ன சிலிக்கான் சிப் இருந்தது. நிதி அதில் தன் விரலை வைத்து அழுத்தினாள், நொடியில் உயிர் பெற்றது அவளின் மினினி. குட்டி குட்டி ஐகான்கள் தொன்றின.
"என் அருமை தோழி நிதிக்கு வந்தனம். நீங்கள் இப்போது இருப்பது எழில் கட்டடத்தின் மூவா.." அதற்கு மேல் அதைப் பேச விடாமல் உலக படம் போன்றதொரு ஐகானில் மேல் விரல் வைத்தாள்.
"தேர்ந்தெடுங்கள் நிதி, உலகச் செய்தியா? உள்ளூர் செய்தியா?"
"உலகச் செய்தி"
"தலைப்புச்செய்தி: ஸ்பெரிக்கல் கேலக்ஸியிலிருந்து பூமி அனுப்பிய ரேடியோ அலைக்கு பதில் அலை வந்துள்ளது, உலக வின்வெளி மையம் முழு வீச்சுடன் அதை ஆராய்ச்சி செய்கிறது. இது பற்றி இந்திய விஞ்ஞானி பாலா கருத்து தெரிவிக்கையில்.."
"உள்ளூர் செய்தி" நிதி உள்ளூரிற்கு தாவினாள்.
"தலைப்புச்செய்தி: தமிழகத்தின் தென்கோடியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய நகர் கண்டுப்பிடிப்பு. இது சுனாமியால் மூழ்கிய இராமேசுவரமாய் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்" அப்போது மினினியின் ஒரு மூலையிருந்த ஐகான் உயிர்ப்பெற்று பெரிதானது.
"தோழி நிதி, தங்கள் தோழி சிமி அருகாமையில் இருக்கிறார்"
"ஹாய் நிதி" சுமியின் குரல் கேட்டு நிதி திரும்பினாள். மைக்ரோசில்க் சூட்டில் சிமி நளினமாக எதிரே வந்து உட்கார்ந்தாள்.
"ஏன் லேட், அஞ்சு நிமிஷமா காத்துகிட்டு இருக்கேன்"
"சாரிடி என் ஏரோ ஆல்ட்ல கொஞ்சம் ட்ரா·பிக் ஜாம், ஆல்ட் மாற்ற அனுமதி கிடைக்க கொஞ்சம் டைம் ஆச்சு. சரி சிவா சேரா ரெண்டு பேரும் இன்னும் வரலியா?"
"சிவா காலையில வீடியோ மெயில் அனுப்பி இருந்தான், பிரயான களைப்பு, அதனால கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னான். இந்த சேரா எப்ப வருவான்னு தெரியல, அவன் தான் இப்ப நூறு வருஷம் பின்னாடி இருக்கானே"
"சரி அவங்க வரதுக்குள்ள நான் girls only விஷயம் சொல்லிடறன்"
"என்னடி"
"அனுமதி கிடைச்சாச்சு"
"எதுக்கு?"
"நான் தாய் ஆவதற்கு" சிமியின் முகத்தில் குதூகலம்.
"ஹே கங்க்ராட்ஸ் எப்ப"
"காலையில தான். உடனே நானும் மைத்ரேயனும் 'ஜீனோ மேட்ச்'க்கு போய் வேண்டிய குணாதிசியங்கள தேர்வு செஞ்சிட்டோம். பியூட்டி, காம்ப்ளக்ஷன், டோன் எல்லாம் என் சாய்ஸ். அறிவு சம்பத்தப்பட்ட இத்யாதிகள் மட்டும் மைத்ரேயனோட சாய்ஸ். பிரெயின் அவன மாதிரி வேண்டுமாம்... பெரிய்ய ஐன்ஸ்டீன் எள்ளு பேரன்னு நினைப்பு" இருவரும் சிரித்தனர்.
"எனிவே, அது ப்ரொசஸ் ஆகி ரெண்டு நாள்ல மேட்ரிக்சுக்கு அனுப்பிடுவாங்க. அப்புறம் கொறஞ்சது மூனு மாசத்துல ஏஞ்சல் மாதிரி ஒரு பாப்பா வீட்டுக்கு வந்திடும்" சிமி நிதியின் கைகளை பற்றி சிரித்தாள்.
"ஏஞ்சலுக்கு பேர் வச்சாச்சா" சிவா அவர்களை நோக்கி வந்தான்.
"வாப்பா the man from mars...எப்படி இருந்தது செவ்வாய்..உன் திருவாய் திறந்து சொல்லு" சிமி ஆரம்பித்தாள்
"oh...that was great.. மனிதன் உருவாக்கி கொண்டிருக்கும் ஒரு செயற்கை சொர்க்கம் அது. வெயில் கொஞ்சம் கம்மி தான். நிறைய பில்டிங், ஸ்பேஸ்போர்ட்ன்னு நிறைய கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். என்னோட விவசாய ஆராய்ச்சி எல்லாம் வெற்றிகரமா நடந்தது... இன்னும் கொஞ்சம் நாள்ல விவசாயம் மொத்தத்தையும் அங்க திருப்பிடுவோம்"
"ஸ்பேஸ்பிளேன் எப்படி இருந்தது"
"அத ஏன் கேக்கிற, நம்மூர்ல தான் ஸ்பேஸ்போர்ட் இல்லையே அதனால பீஜிங் போய் அங்கேயிருந்து ஸ்பேஸ்ப்ளேனல போனேன். உள்ள போன உடனே எனர்ஜி மாத்திரை கொடுத்து தூங்க வச்சிடுவாங்க, அப்புறம் வின்வெளி போய் தான் முழிச்சோம். நாலு வார பயணம்"
"நாடு முன்னேறுது, முன்னேறுதுன்னு வாய் கிழிய சொல்றாங்க, ஆனா இன்னும் இங்க ஒரு ஸ்பேஸ்போர்ட் இல்ல. கேட்டா இப்ப வருது அப்ப வருதுன்னு" நிதி எரிச்சலாக சொன்னாள்.
"நம்ம ஊரு முன்னேறவே முன்னேறாது" சிமி ஆமோதித்தாள்.
"சரி விடுப்பா, அப்புறம் சிவா உன் கல்யாண விஷயம் எந்த அளவுல இருக்கு" நிதி கேட்டாள்
"அதுவா, இப்ப எல்லாம் என் அம்மாவுக்கு என் டிஎன்ஏ பொருத்தம் பாக்கிறதே முழு நேர வேலையாயிடுச்சு. ..எங்க டிஎன்ஏ பொருத்தம்ன்னு சொல்லி ஏதாவது சப்ப மூக்கு சைனாக்காரிய கட்டி வெச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு"
"ஏன் அதனால என்ன ஒரு க்ரோமோ ·பிக்ஸிங் செய்தா சரியாப்போச்சு"
"ஹே அதெல்லாம் சுத்த வேஸ்ட்டுப்பா காஸ்ட்லியும் கூட...மேலும் எனக்கு கொஞ்சம் எல்லாமே இயற்கையா இருக்கனும்னு எதிர்பார்க்கிறேன்"
"இப்படியெல்லாம் நீ யோசிச்சா..நீ இந்த நூற்றாண்டு மனுஷனே இல்ல" என்றாள் சிமி
"இவன் போன நூற்றாண்டு மனுஷனும் இல்ல" அவர்களை நோக்கி கேட்டது பரிச்சயமான குரல்
"ஹே சேரா வெல்கம்" நிதி சேராவை வரவேற்றாள். அவன் நேரே ஜோதியில் ஐக்கியமானான்.
"வாடா வரலாற்று மனிதா, 'சென்னை நூறு வருடம்" ஆராய்ச்சி செய்ய போனியே..எனிதிங் இன்ட்ரஸ்டிங்" சிவா அவனை கேட்டான்.
"நிறைய விஷயம் இருக்கு, சொல்றன் கேளு...நம்ம மினினி, சினினிக்கெல்லாம் தாத்தாவான கனினி சமாசாரம் நூறு வருஷத்துக்கு கொஞ்சம் முன்னேதான் நம்ம ஊருக்கு வந்திருக்கு, மொத்த சிட்டிக்குள்ளயும் நாலே நாலு ·ப்ளை ஓவர் தான். பாண்டிச்சேரியெல்லாம் அப்ப ரொம்பவே அவுட் ஆ·ப் சிட்டி, முதன் முதல்ல நம்ம ஊர்ல சுனாமி நூறு வருஷத்துக்கு முன்னாடி தான் வந்திருக்கு, இப்ப மாதிரி சுனாமி ஷோ எல்லாம் இல்ல, மக்கள் ரொம்பவே பாதிச்சியிருக்காங்க"
"வாவ்...இன்ட்ரஸ்டிங்" சிமி ஆச்சர்யத்துடன் சொன்னாள்.
"அப்புறம் ஒரு தடவ கற்ப பத்தி ஒரு நடிகை..."
"வெயிட்..வெயிட்..கற்பா..அப்படின்னா என்ன" நிதி குழப்பமானாள்
"அதுவா..அது ஒரு விவகாரமான விஷயம், புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம், அப்பவே மக்களுக்கு புரிஞ்சுதாங்கிறது சந்தேகம்தான்...அதப்பத்தி அப்புறம் பேசுவோம். உனக்கு சே·ப் செக்ஸ்ன்னா என்னன்னு தெரியும்ல"
"அதான் அஞ்சாவதிலே படிச்சோமே" சிவா சொன்னான்
"அதேதான்... அது ரொம்ப அவசியம்ன்னு அந்த நடிகை கருத்து சொல்லியிருக்காங்க, அதுக்கு உடனே மக்கள் எல்லாம் செருப்பு துடைப்பம் எல்லாம் எடுத்து போராட்டம் அது இதுன்னு ரொம்ப டார்ச்சர் செஞ்சிருக்காங்க"
"செருப்பு ஒகே... துடைப்பம்னா...அது என்ன ஆயுதம்" சிமி கேட்டாள்
"ஆயுதம்மெல்லாம் இல்ல அது ஒரு வாக்ளீன் மாதிரி வெச்சுக்கோயேன்"
"நம்ம முன்னோர்களா அப்படி செஞ்சிருக்காங்க...நம்பவே முடியலே" சிவா சொன்னான்.
"நம்ம முன்னோர்களே தான்... இரு கொஞ்சம் போட்டோஸ் கலெக்ஷன் வெச்சிருக்கேன்.." சேரா தன்னுடைய மினினியை எடுத்து உயிர் கொடுத்தான். பூட் ஆனதும் திரையில் ஒரு புகைப்படம் தோன்றியது. அதில் சேராவின் பெற்றோர்களுடன் சேரா நின்று கொண்டிருந்தான் அவர்கள் பின்னே சுவற்றில் தொங்கியபடி சட்டம் செய்யப்பட்ட ஒரு வயதானவரின் புகைப்படம் இருந்தது, புகைப்படத்தின் கிழே இந்த வாசகங்கள் "ரஞ்சித் காளிதாசன்: தோற்றம் 01/05/1979 மறைவு...." ஆஹா...அதற்குள் அந்த படம் மினினியில் மறைந்து போயிற்று.
Friday, December 16, 2005
நொடியில் உறைந்த கவிதை
சமீபத்தில் டைம் இதழில், போன வருடத்தின் சிறந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்கள். பல படங்கள் பார்க்கும் சமயம் பல உணர்ச்சிகளை கொட்டியிருந்தாலும், என்னை மிகவும் பாதித்தது கீழே இருக்கும் இந்த இரண்டு படங்கள் தான்.

"நமக்கும் கீழே... மாண்டவர் கோடி"

"எனக்கும்தானடா புரியவில்லை..
இந்த ஆட்டம்"
பல விஷயங்கள் சொல்லும் இந்த இரண்டு புகைப்படத்திற்கு இரண்டு வரியில் யாரேனும் கவிதை எழுதி commentsல் post செய்யலாம்.

Friday, December 09, 2005
தவமாய் தவமிருந்து

இந்த வாரம் இந்த கலை படைப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தவமாய் தவமிருந்து சேரன் செதுக்கி இருப்பது ஒரு சினிமாவை அல்ல, யதார்த்தத்தின் பிம்பங்களை. சென்ற முறை ஒரு காதலனின் ஆட்டோகிரா·பை நமக்கு கான்பித்தவர் இந்த முறை பெற்ற பிள்ளைகளுக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் செய்யும், நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது சில சமயம் பார்க்க மறக்கும் ஒரு தகப்பனின் பையோகிரா·பியை நமக்கு காட்டுகிறார். இது வரை நாம் பார்த்த மிகைப்படுத்தபட்ட சினிமாத்தனம் துளிக்கூட இல்லாமல் இயல்பான வாழ்க்கையை கேம்கார்டரில் படம் பிடித்து கான்பிப்பது போல் (ஒளிப்பதிவு HD technology கொண்டு செய்யப்பட்டு இருக்கிறது) பயனிக்கிறது கதை. கதையுடன் கச்சிதமாய் பொருந்தும் பாத்திரத்தேர்வு யதார்த்தத்தை மேலும் மெருகூட்டுகிறது. ராஜ்கிரன் கிராமத்தில் வாழும் நடுத்தர தகப்பனாய் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாய் ஒரு தேசிய விருதுக்கு அங்கீகரிக்கபட வேண்டிய நடிப்பு. தன் மகன் ஓடிப்போய் திருமணம் செய்து குழந்தைப்பெற்று கஷ்டப்படும்போது, அவனை பார்க்க வந்து வீட்டில் தரையை பார்த்து, உணர்ச்சியற்று ஒரு பார்வை பார்க்கிறாரே...வாவ்...என் கண்ணில் ஈரம் முட்டி நின்றது. இந்த படத்தில் உள்ள பல காட்சிகளை என் வாழ்வில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
1) ராஜ்கிரன் தன் குழந்தைகளுக்கு தீபாவளி சாமான்கள் வாங்க காசில்லாமல் தினறும்போதும் மகன் கேட்ட பட்டாசுகளை கடையில் பார்க்கும்போதும், என் தந்தை என்னையும் என் அண்ணனையும் அழைத்து பாரீஸ் கார்னரில் பட்டாசுகள் வாங்கி அதை எங்களுக்காக தோளில் சுமந்து வந்தது மற்றும் ஒரு தீபாவளியில் முதல் நாள் இரவு வரை எங்களுக்கு துனி வாங்க காசு இல்லாமல் நடுராத்திரியில் எங்கேயோ கடன் வாங்கி எனக்கும் என் அண்ணனுக்கும் நாவல்டி ரெடிமேட்சில் துணி வாங்கியது.
2) ராஜ்கிரன் மூத்த மருமகள் தன் பெண் குழந்தைக்கு மாமனார் வைத்த தெய்வானை என்னும் பெயரை மாற்றி குஷ்பு என்று மாற்றும் போது, என் அம்மா என் தாத்தா எனக்கு துரைராசு என்று வைத்த பெயரை மாடர்னாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் குமார் என மாற்றியது.
3) ராஜ்கிரன் தன் மூத்த மகனை பாலிடெக்னிக் சேர்க்க வட்டி கடைகாரரிடம் கூனி குறுகி நின்ற போது, நான் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு, சாந்தோம் பள்ளியில் என் அப்பா என்னை சேர்க்க பிரின்ஸிபாலிடம் கூட்டி செல்ல, அவர் what is your father? என்று கேட்ட கேள்வியை புரியாமல் நான் தவறாய் என் அப்பாவை கை காட்ட, அதனால் எரிச்சலைடைந்த அந்த பிரின்ஸிபால் டொனேஷன் தொகையை ஏற்ற என் தந்தையின் முகத்தில் தோன்றிய கவலை ஞாபகத்திற்கு வருகிறது.
4) ராஜ்கிரன் சேரனை இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்க பணத்தை வைத்து கொண்டு அலையும் போது, என்னை பாலிடெக்னிக் சேர்க்க நானும் என் தந்தையும் நேர்முகத் தேர்விற்கு காத்திருக்க, பக்கத்தில் கிராமத்திலிருந்து வந்த ஒரு அப்பா பையனுக்கு ·பீஸ் கட்ட வைத்து இருந்த பணத்தில் 100 ரூபாயை தொலைத்து அதை கவலையோடு அதை தேடியது ஞாபகத்திற்கு வருகிறது.
பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தொலைக்கும் தகப்பன்கள், அவர்களுக்கு பிள்ளைகள் காட்டும் நன்றி என்று இன்றைய வாழ்வில் நடக்கும் நிஜங்களை காட்டியது நம்மை அறையவைக்கிறது. இந்த படத்தின் மற்ற குறைகளை கூற தேவையில்லை, உன்மை என்னவென்றால் நான் அந்த அளவுக்கு படத்தின் குறைகளை கவனிக்கவில்லை, கவனிக்க முடியாதபடி படத்தோடு ஒன்றி விட்டேன். ஆறு பாட்டு, நாலு சண்டை, அதீத ஹீரொயிசம், வின்னிங் ·பார்முலா என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே சிக்கிக் கொண்டி¢ருக்கும் தமிழ் சினிமாவில், இந்த மாதிரி ஒரு படம் வருடத்திற்கு ஒரு முறையாவது வந்தால், தமிழ் சினிமாவின் நாடித் துடிப்பு சாகாமல் இருக்கும்.
இந்த மாதிரி ஒரு பெற்றவர்களை நாம் கவனிக்க மறந்தால் அல்லது மறுத்தால், நாம் வேரோடு வெகுதூரம் விலகி வந்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
Wednesday, November 30, 2005
கொஞ்ச நேரம்...
இன்று ABCD என்று சமீபத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். எப்படி இந்த டைட்டிலை தமிழ் காப்பாற்றும், துடைப்பமும் செருப்பும் எடுப்பவர்கள் விட்டு வைத்தார்களோ. எப்படியோ நீண்ட நாளைக்கு பிறகு எழுபதுகளில் வெளியான பாலச்சந்தர் படத்தை கலரில் பார்த்தது போல் இருந்தது (store outline பாலச்சந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தை ஞாபகம் படுத்துகிறது). A for anand வேலைத் தேடும் ஒரு ரொம்பவே நல்ல ஹீரோ. B for bharathi 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதாவை போல் நடுத்தர குடும்பத்துகாகவே பாடுபடும் ரொம்பவே ஆக்ரஷமான ஹீரோயின் நம்பர் 1. C for chandra வக்கிர புத்தி கொண்ட, கனவனை இழந்த ஒரு விதவை, ஹீரோயின் நம்பர் 2. D for Daisy அனாதை + churchஇல் வளர்ந்த யதார்த்தமான பெண், ஹீரோயின் நம்பர் 3. இவர்கள் நால்வரை சுற்றி நகர்கிறது கதை. எல்லோரும் யூகித்தபடியே மூன்று ஹீரோயின்களும் கதாநாயகன் ஆனந்தை காதலிக்கிறார்கள். வழக்கமான தமிழ் படத்தில் வரும் கண்டதும் காதல் போல் இல்லாமல், எல்லோரும் காதல் வசப்படும் சந்தர்ப்பத்தை விவரிக்கும் யதார்த்தமான காட்சியமைப்புக்கு ஒரு ஜே. இந்த நால்வரின் பின்னனியும் கதாபாத்திரத்தையும் விளக்கி இந்த கதாபாத்திரங்களின் குணாதிசியங்களை வைத்து காட்சி அமைத்தது நல்லதொரு screenplay முயற்சி. மூன்று பேரில் முடிவில் ஹீரோ யாரை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. முடிவு நாம் நினைப்பது போல் இருந்தாலும், அதை சொல்லிய விதமும் அருமை. எல்லோரும் அவரவர் சொந்த குரலில் பேசியது, யதார்த்த தன்மைக்கு மேலும் வளம் சேர்க்கிறது. இவ்வளவு நல்லது இருந்தும் படத்திற்கு ஒரே திருஷ்டி, படத்தின் இசை. இயல்பாகவே பின்னனி இசைக்கு scope உள்ள திரைக்கதை, ஆனால் இசை அமைக்க தினறியிருக்கிறார் இசையமைப்பாளர். ராஜாவிடம் கொடுத்து இருந்தால் பிய்த்து உதறியிருப்பார். படத்தின் நடுவே தேவை இல்லாமல் தினிக்கப்படும் பாடல்கள் ஆவ்... 'மஞ்சள் முகம்' என்னும் பாடல் தேவலாம். படத்தோடு ஒட்டாமல் இருந்தாலும் வடிவேலுவின் காமெடி ட்ராக் கலக்கல். வர வர வைகைப்புயல் graph ஏறிக்கொண்டே போகிறது. அதிரடி மசாலா படங்களின் ஆக்ரமிப்பில் இப்படியொரு படம் பூப்பது அதிசயமே.
சன் டிவியின் ஸ்டைலில் சொன்னால் "ABCD, கண்டிப்பாய் வாசிக்கலாம்".

Friday, November 25, 2005
நீ பெரியவனா ஆனா...(சிறுகதை)
ரகுபதி - வயது 6 மணி நேரம்..
ரகுபதி பிறந்து அழுத களைப்பில் சுவாமிநாதன் கையில் கிடந்தான். சோர்வு இருந்தாலும், கண்ணில்
ஈன்ற பெருமை தெரிய அருகில் மீனாட்சி. டாக்சியில் ஏறியவுடன் மீண்டும் ரகுபதியின் பிஞ்சு முகத்தை ஒருமுறை பார்த்தான் சுவாமிநாதன்.
"என் ராசா....நான் தவங்கிடந்து பெத்து எடுத்த தங்கமே....எங்க அப்பன போலவே ராஜகள...நீ வேனாம்
பாரேன் மீனாட்சி என் மவன் பெரியவனா ஆனதும் இந்த சீமையே கட்டி ஆளப் போறான்"
உடனே ஒரு வறட்சியான சிரிப்பு சத்தம் முன்னிருந்து கேட்டது. சுவாமிநாதனும் மீனாட்சியும் நிமிர்ந்து பார்க்க ரியர் வியூ மிரரில் டாக்சி ட்ரைவர் இவர்களை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏம்பா சிரிக்கிற" சுவாமிநாதன் குழப்பத்துடன் கேட்டான்
ரகுபதி - வயது 2
"கூ.. கூ..." ரயில்வே ஸ்டேஷனில் ரகுபதி. தூரத்தில் வரும் புகைவண்டி கரி என்ஜினைப் பார்த்து, வாயில் கட்டை விரலை வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான்.
"ஏங்க கேளுங்க... நேத்து அவன் அப்பத்தாக்கிட்ட கூட சொன்னாங்க.."
சுவாமிநாதன் வயர் கூடையை பிடித்தபடி தன் பேரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துக் கேட்டான்
"நெசமா தானா"
"ஆமால சாமிநாதா...என் கையை நாடி பாக்கிறா மாதிரி புடிச்சிகிட்டே சொன்னாங்கிறன்...'நான் டாக்டராவேன் அப்பத்தா'ன்னு நெசமாத்தான் சொன்னான்"
"என் தங்கமே" சுவாமிநாதன் ரகுபதயை அள்ளி வாரி முத்தம் மழை பொழிந்தான். ரகுபதியின் கவனமெல்லாம் அவன் அருகே வந்து கொண்டிருக்கும் ரயில் என்ஜின்னிடமே இருந்தது.
"என் ராசா... எங்க சொல்லு நீ பெரியவனா ஆனதும் என்னவா வருவே"
"கூ...கூ..." ரகுபதி சுவாமிநாதனை கவனித்தாற் மாதிரி தெரியவில்லை.
"சொல்லுப்பா... என் தங்கம் இல்ல...என் செல்லம் இல்ல..சொல்லுப்பா"
"நான் பெரிவனா ஆனா..ஆங்..ஆங் வந்து...வந்து..."
"ம்ம் சொல்லுப்பா"
"நான் அதோ அந்த என்ஜின் ஓட்ட போறேன்..."
ரகுபதி - வயது 10
"உங்க ஒவ்வொருத்தருக்கும் நீங்க என்னவா ஆகப்போறீங்கன்னு ஒரு ஆசை இருக்கும்...அந்த ஆசைய அடைய நீங்களே ஒரு லட்ச்சியத்த வளத்துக்கனும்.. கல்விக்கூடங்கிறது அந்த லட்சியத்த நீங்க அடைய உங்கள நீங்களே தயார் செஞ்சுக்கிறதுக்கான ஒரு பயிற்சி களம்" ஆறாம் வகுப்பின் தமிழ் டீச்சரின் முதல் நாள் வகுப்பு.
"எங்க சொல்லுங்க நீங்க ஒவ்வொருத்தரும் பெரியவனா ஆனா என்னவா ஆகபோறீங்க"
"டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஸயின்டிஸ்ட்" சொல்லி வைத்தாற் போல் எல்லா மாணவர்களும் முறை மாற்றி சொன்னனர். ஒரு மாணவன் "எங்க தலைவர போல பெரிய ஸ்டார் ஆவேன் டீச்சர்" என்று சொல்ல டீச்சரிடம் ஒரு முறைப்பு வந்தது. ரகுபதியின் முறை வந்தது
"நான் மிலிட்டிரியில சேரப் போறேன் டீச்சர்..சேர்ந்து நம்ம நாட்டு எதிரிய எல்லாம் சுட்டு தள்ளப்போறேன்" சதீஷ் ஆச்சர்யமாக தன் நன்பன் ரகுபதியை பார்த்தான்.
"என்னடா நேத்து வரைக்கும் பெரிய என்ஜினியராக போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு என்னடா ஆச்சு"
"நேத்து ஒரு இங்கிலிஷ் படம் பாத்தேண்டா.. ஸ்டலோன்னு மிலிட்டரியில சேர்ந்து என்னமா சன்ட போட்டார் தெரியுமா...இவ்வளவு பெரிய கன்னு, எதிரிங்க பாம்
போடறாங்க, ப்ளைட்ல இருந்து சுடறாங்க, ஆனா நம்ம ஸ்டலோன்னு ஒரு குண்டு கூட படாம அவங்க எல்லாரையும் சுட்டாரு பாரு சூப்பர்டா...மிலிட்டரியில சேரலாம்டா..அப்பதான் கன்னு, பாம் எல்லாம் தருவாங்க" கண்கள் படபடக்க ரகுபதி விவரித்தான்.
ரகுபதி - வயது 15
"ரகுபதி...congrats..கிரிக்கெட்டுல உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு..இந்த மாதிரியே நல்லா விளையாடனும்.. நீ தான் அடுத்த டெண்டுல்கர்" கிரிக்கெட் கோச் சொன்ன
வார்த்தைகள் ரகுபதியால் நம்ப முடியவில்லை. வெற்றிக்களிப்புடன் கோப்பையை வாங்கி வீட்டிற்கு வந்தான். ரகுபதி ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் கிரிக்கெட் மட்டையுடனும் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே சுவாமிநாதன் கண்ணில் கோபம் தெறிக்க ரகுபதியை பார்த்தான், அவன் கையில் ரகுபதியின் ப்ரொக்ரஸ் கார்ட்.
"ஏண்டா காடு கரைய வித்து உன்னைய படிக்க வச்சா...என்னடா மார்க் வாங்கியிருக்குற"
"இல்லப்பா...அடுத்த தடவ கண்டிப்பா..."
"எலெ நிறுத்துடா...இதயேதாண்டா போன தடவையும் சொன்னே...இந்த முறையும் அஞ்சு சப்ஜெக்டலையும் பெயிலாயி இருக்குற.....இந்த வருஷம் SSLC தெரியும்ல..."
ரகுபதி தலையசைத்தான்
"உன்னெடுத்த பசங்க எல்லாம் ஒழுங்கு மருவாதையா வீடே கெதின்னு படிக்கிறானுவோ..நீ என்னடான்னா ஊர் சுத்திகிட்டு திரியுறவ...அது என்னடா கையில"
"கிரிக்கெட்டுல இன்னைக்கு நான்தாம்பா man of the match"
"உன்னைய படிக்க சொன்னா... என்னடா கிரிக்கெட் வேண்டி கெடக்குது...நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டே...இரு உன்னைய..." ரகுபதி கயில் இருந்த கோப்பைய
வாங்கி தூர எறிந்தான், அவன் மட்டையை பிடுங்கி ரகுபதியை அடிக்க கை ஓங்கினான். ரகுபதி இரு கைகளாலும் அழுதவாறே தன் தகப்பனை அடிக்க விடாமல் தடுத்தான். இரண்டு அடி அடித்தும் கோபம் தீராதவனாய் சுவாமிநாதன் கிரிக்கெட் மட்டையை ஒங்கி தூணில் போட்டு உடைத்தான். மீனாட்சி ரகுபதியை அனைத்து அவனை
தேற்றிக்கொண்டிருந்தாள்.
ரகுபதி - வயது 17
ரகுபதி திரும்பத் திரும்ப நன்றாய் தேடிப் பார்த்தான். ம்ஹ¥ம்..அவன் நம்பர் தெரிந்தபாடில்லை. அவன் நன்பர்களெல்லாம் தங்கள் நம்பரை பார்த்த சந்தோஷத்தில் வீட்டிற்கு
விரைந்து கொண்டிருந்தனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. இது ரகுபதிக்கு ஒன்றும் ஆச்சர்யம் தரவில்லை. இருந்தாலும் வீட்டிற்கு போனால் இந்த அப்பனை எப்படி
சமாளிப்பது. தீவிர யோசனைக்கு பிறகு தன் திருட்டு சிகரெட்டை அனைத்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் ஒரு ஐம்பது அடி வந்து கொண்டிருக்கும் போது, சுவாமிநாதன் குரல் தெருவெங்கும் கேட்டது, கூடவே மீனாட்சியின் அழுகுரல்.
"இன்னைக்கும் வரட்டும் அவன்... புள்ளையாடி பெத்து இருக்க புள்ள... ஒன்னுத்துக்கும் உருப்படாத பய"
"எம்புள்ளைய ஒன்னும் செய்யாதீங்க"
சுருட்டிய தினத்தந்தியுடன் வீட்டினுள் நுழைந்தான் ரகுபதி.
"வாங்க தொர... என்ன ஜில்லாவில்லே மொத மார்க்காமே..." நக்கல் + கோபத்துடன் சுவாமிநாதன்.
"அப்பா...கோபப்படாதீங்க... நான் தான் எனக்கு படிப்பு வரல..படிப்பு வரலன்னு சொன்னேனே...இப்ப நீங்க டென்ஷனாகி என்ன ஆகப்போவது"
"டேய் படிக்காம என்னடா பன்ன போற"
"ஏதாவது செய்யறன்... உலகத்துல பொழைக்க வழியா இல்ல"
ரகுபதி - வயது 25
அந்த தனியார் மருத்துவமனையின் வாசலில் அந்த வெள்ளை அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின் கண்ணாடியில் மஞ்சள் நிறத்தில் "raghu cabs" என்று ஸ்டிக்கர் மின்னிக்கொண்டிருந்தது. மெல்ல அந்த தம்பதியினர் அம்பாசிடர் கார் கதவை திறந்து உள்ளே கைக்குழந்தையுடன் உட்கார்ந்தனர்.
"ட்ரைவர் போகலாம்பா"
"சரி சார்" சிக்னல் போட்டு ரகுபதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
"ஜ்ஜூக்குட்டி...செல்லக்குட்டி....மங்கலம் நாம ஆசப்பட்ட மாதிரியே சிங்கக்குட்டி பொறந்திருக்கான்டி.....என்னால தான் ஆக முடியல...இவனை எப்படியாவது ஒரு கலெக்டரா ஆக்கி காமிக்கிறேன்"
ரகுபதி சிரித்தான், தம்பதியினர் நிமிர்ந்து பார்த்தனர்.

Sunday, November 20, 2005
பெண்ணாய் பிறந்ததாலே..(சிறுகதை)
(இன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு...)
மணி இரவு பதினொன்றை நெருங்கும் நேரம், அந்த ஆட்டோ கொட்டும் மழையையும் பொருட்டாது தார் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. உள்ளே நிறைமாத கர்ப்பினி சுகந்தி வலி பொறுக்க முடியாமல் துடிக்கிறாள், காசிக்கு கண்ணில் பயம் கொஞ்சம் இயலாமை கொஞ்சம், சுகந்தியை தோளோடு தழுவி வெளியே பார்த்தான். கண்ணுக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரியும் தெரிவதாய் இல்லை. "ஏம்பா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்"
"இன்னும் கொஞ்சம் தொலவு போகனும் சார்.....ஒரு அரை மணி நேரமாவது ஆகும்.... அடிக்கிற மழையில வண்டி ஓட்டறது வேற கஷ்டமா இருக்குது"
"சரி பக்கத்துல எங்கயாவது சின்ன ஆஸ்பத்திரி இருக்கா"
"இந்த ஊருக்குல்ல போனா ஒரு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு சார்... வேனும்னா அங்க வண்டிய திருப்பத்துமா"
"சரிப்பா...இவ ரொம்ப துடிக்கிறா.. அங்கேயே போவோம்" அரை மனதுடன் காசி சொன்னான். பேருக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவை போக சொன்னாலும், அங்கே ஆகும் செலவை நினைத்து பாதி வழியிலே கவலைப்பட ஆரம்பித்தான். கையில் ஆட்டோவிற்கே பணம் இருப்பதாய் தெரியவில்லை. தன் வாரிசை இப்படியெல்லாம் பெறப்போகிறோம் என்று சில வருடம் முன்பு அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான். தன் பரம்பரை வசதிக்கும், பாரம்பரியத்திற்கும் இந்நேரம் ஆஸ்பத்திரியே அவன் அரண்மனை வீட்டிற்கு வந்திருக்கும். இதெல்லாம் ஏன் நடக்கவில்லை! எல்லாம் இந்த பாழாய்போன காதலால் வந்த வினை. பக்கத்து ஊர் பழைய ஜமீன்தார் பெண்ணை தனக்காக தன் தாய் நாச்சியார் பார்த்து வைத்திருக்க, காசியோ திடுப்பென தன் காதலைப் பற்றி தாயிடம் வாய் திறந்தான். பிறகு என்ன, காதலா பரம்பரை சொத்தா என்று வந்தவுடன், காசி காதலே ஜெயம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த நேரத்திற்கு நன்பர்களின் துணை இருந்தது, அவர்களின் ஆதரவோடு சுகந்தியின் கரம் பிடித்தான். வாழ்க்கை இனித்தது நம்பிக்கை என்னும் மூலதனத்தை வைத்து வாழ்க்கையைத் தொடங்கினான். எல்லாம் கொஞ்சம் காலம் தான். உலகம் காசிக்கு மெல்ல புரிந்தது, பணத்தின் அருமை புரிந்தது, வாழ்க்கை மெல்ல வலித்தது.
"சார்..ஆஸ்பத்திர் வந்தாச்சு. அம்மாவ மெல்ல இறக்குங்க"
ஆட்டோ ட்ரைவரின் குரல் காசியின் நினைவை தற்காலத்திற்கு கொண்டு வந்தது. சுகந்தியை கைதாங்கலாய் உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தான். சுகந்தியின் அருகே இரண்டு மூன்று பெண்கள் பிரசுவிக்க தயாராய் இருந்தனர்.
"ஆம்பளைங்க எல்லாம் வெளியே போங்க" நர்ஸ் ஒருத்தியின் குரல் அதட்டியது
"டாக்டர் எப்ப வருவாங்க" காசி நர்ஸிடம் கேட்டான்
"எல்லாம் சொல்லியிருக்கு வருவாங்க...அப்படியே வர்லேன்னாலும் என்ன...பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி...ஏன் நாங்க பிரசவம் பாத்தா உனக்கு ஆகாதா"
இதற்கு மேல் அரசாங்க சுகாதார நிலையத்தில் கவனிப்பை எதிர்பார்ப்பது தவறு. காசி வெளியே வந்தான். அப்போது தான் ஆட்டோ அங்கே இருப்பதை பார்த்தான்.
"சாரிப்பா...நீ இருக்கிறதை மறந்துட்டேன்... எவ்வளவு ஆச்சு" சட்டை பையை துலாவியபடியே கேட்டான்
"பரவாயில்ல சார்... என் ஆட்டோ பிரசவத்துக்கெல்லாம் இலவசம் சார்...அம்மா எப்படி இருக்காங்கன்னு கேக்க தான் சார் நின்னுகிட்டு இருந்தேன்....கவல படாதீங்க சார் எல்லாம் நல்லபடியா நடக்கும்" ஆட்டோ திரும்பி சென்றது. காசி அப்போது தான் கவனித்தான் "பிரசவத்திற்கு இலவசம்" என்று எழுதியிருப்பதை.
"சே என்ன இது... எப்படியாவது ஒரு அம்பது ரூபாவது கொடுத்திருக்கனும்" சட்டைப் பையை பிரித்து பார்த்தான், உள்ளே கசங்கிய இரண்டு ஐந்து ருபாய் நோட்டும் ஒரு இன்லாந்து லெட்டரும் தெரிந்தது, காசியின் கண்ணீர் மழையில் கரைந்தது.
காசி திரும்பவும் அந்த இன்லாந்து லெட்டரை பார்த்தான், இரண்டு நாட்களுக்கு முன் வந்த கடிதம், தன் மாமா எழுதிய கடிதம். தன் தாய் சுகமில்லாமல் இருப்பதாகவும், மெல்ல மெல்ல காசியின் மேல் உள்ள கோபம் கரைவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் கடைசியில் அவர் எழுதி இருந்தது தான் காசிக்கு கவலையை அதிகரித்தது
"..மேலும் சுகந்தி முழுகாமல் இருப்பதாய் செய்தி வந்தது, நாச்சியாளுக்கு சந்தோஷம். பரம்பரை குலம் காக்க உனக்கும் தலைப்பிள்ளை ஆணாக பிறப்பான் என்று
குலதெய்வத்திற்கு வேண்டிக் கொள்கிறாள். நீயும் அவ்வாறே வேண்டிக்கொள் எனென்றால் உனக்கு பிறக்கும் ஆண்பிள்ளைக்கு தான் பரம்பரை சொத்து முழுவதும் சேரும் என்றும், அப்போது தான் அதை அனுபவிக்கும் பாக்கியதை உனக்கு இருக்கும் என்றும் ஏற்கனவே வக்கீல் வைத்து உயில் எழுதி வைத்து விட்டாள். நீ வேண்டுமானால் சொத்து வேண்டாம் என்று வீட்டை விட்டு போயிருக்கலாம், ஆனால் உனக்கு மூத்த குழந்தை ஆணாக பிறக்கும் பட்சத்தில் அவன் தான் இந்த சொத்துக்கெல்லாம் அதிபதி"
சுகந்தியை கைப்பிடித்த பொழுதில் இந்த மாதிரி ஒரு கடிதத்தைப்பார்த்தால் அதை அப்போதே கிழித்து எறிந்திருப்பான். ஆனால் காதல் வாழ்க்கையின் நிஜம் இப்போது
காசியை வேறு விதமாக யோசிக்க வைத்தது. "உன்ன ராணிய போல வச்சிருப்பேன்..." காதலிக்கும்போது காசியின் வசீகர வார்த்தைகள்..."பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி" சற்று முன் கேட்ட யதார்த்த வார்த்தைகள்.
"முடியாது...என்னால் முடியாது.....இனிமேல் இந்த வாழ்க்கை வாழ என்னால் முடியாது... எனக்கு என் சொத்து வேண்டும்.. நமக்கு பணம் வேண்டும்... சுகந்தி எப்படியாவது ஒரு ஆண் வாரிசை கொடுத்துவிடு" சுகந்தியோடு சேர்த்து கடவுளையும் வேண்டினான்.
மழை சற்று விட்டிருந்தது, காசி அப்போது தான் தன்னை சுற்றி இருப்பவற்றை பார்த்தான். ஆரம்ப சுகாதர நிலையத்தின் தின்னையின் ஒரு ஓரத்தில் ஒருவன் மிக
வித்தியாசமாய் காட்சியளித்தான். வாய் நிறைய வெற்றிலையை குதைத்தபடியே கிழே தரையில் படுத்திருந்த ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தான். அடிக்கடி வெற்றிலை
எச்சியை துப்பியபடியே இருந்தான். அவன் அருகில் படுத்திருப்பவளுக்கு நடுத்திர வயது இருக்கும், பக்கத்தில் சில ஆண்கள் இருந்தும், அவள் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் தன் முந்தானையை தரையில் விரித்து படுத்திருந்ததை பார்த்தபோது காசிக்கு என்னவோ போல் இருந்தது. எண்ணெய் படாத தலை, அழுக்கான துனியென ஏழைத்தனம்
அவர்களிடம் தாண்டவமாடியது.
"அடுத்த வேளை சோத்துக்கே வழி இருப்பதாய் தெரியவில்லை.. இவங்க எல்லாம் புள்ள பெத்துக்கலன்னு எவன் அழுதான்" காசி தனக்குள்ளே முனகி கொண்டிருந்தான்.
பின்னர் தன் நிலையை உணர்ந்து, தான் அப்படி அவர்கள் பற்றி யோசித்ததற்கு தன்னைத்தானே நொந்துகொண்டான்.
நேரம் நடுநிசியை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது, களைப்பாய் இருந்த காசி சற்று கண் அயர்ந்தவனாய் தூங்கிக்கொண்டு இருந்தான். சில நேரம் கழித்து, குழந்தை அழும் சத்தம் அவனை எழுப்பியது. உள்ளேயிருந்து அந்த நர்ஸ் வெளியே வந்தாள்.
"சுகந்தி புருஷன் நீயா...போ உள்ள போயி உன் குழந்தைய பாரு...எங்க அந்த காத்தாயி புருஷன்... அதாம்பா இங்க உக்காந்து இருந்தானே"
காசி அந்த எழை ஜீவன்கள் இருந்த இடத்தை பார்த்தான், ஒரு பழைய மஞ்சள் பை மட்டும் அவர்கள் அங்கே இருந்ததற்கு அத்தாட்சியாய் இருந்தது. அவர்களை கானோம். காசி அதை பொருட்படுத்தாமல் உள்ளே சுகந்தியை பார்க்க சென்றான். உள்ளே சுகந்தி மயக்க நிலையில் இருந்தால், பக்கத்தில் வெள்ளைதுணி போர்த்தியிருக்க ஒரு பிஞ்சு. காசி மெல்ல சென்று, தன் மகராணிக்கு நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்
"சுகந்தி, நம்ம கஷ்டமெல்லாம் போக போகுது...உன்ன நிஜமாகவே ராணி போல வச்சிருக்க போறேன்" அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான். திரும்பி தன் குழந்தையை
பார்த்தான், அந்த நொடியில் தன்னையே மறந்தான், கண்ணில் நீர் முட்டியது.
"என் ராஜகுமாரா...என் செல்லம்" தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி குழந்தையை தூக்கினான். மெல்ல குழந்தையின் துணியை விலக்கிப்பார்த்தான். வெளியே ஒரு மின்னல் வெட்டு, அதன் வெளிச்சம் காசியின் மேல் பட்டு தெறிக்க, அதிர்ச்சியில் காசி நின்றுகொண்டிருந்தான். ஆம், காசியின் இஷ்ட தெய்வத்தின் வரம் வேறாய் இருந்தது. காசியின் கையில் பால்வன்னம் மாறாத அழகான பெண் தேவதை. மீண்டும் ஒண்டி குடுத்தனம், ரேஷன் க்யூ, வாடகை கட்ட முடியாமல் வீட்டுக்காரனின் ஏச்சு. காசியின் முன்
ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. சற்றுமுன் அவன் கட்டிய கனவு கோட்டை சிதறிக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் கவனித்தான், சுகந்தியின் பக்கத்தில் காத்தாயி, அவள் அருகில் அழகான ஆண் குழந்தை. காத்தாயி சுகந்தி போலவே மயக்க நிலையில் இருந்தாள். காசிக்கு இப்போது என்ன செய்வது என்று புரிந்துவிட்டது,
நல்லது கெட்டது அவன் யோசிக்கவில்லை, சுகந்தியை பற்றியும் அவன் யோசிக்கவில்லை. தன் குழந்தையை சுகந்தி அருகே வைத்து திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். வெளியே அந்த நர்ஸ் எங்கயோ போய்க்கொண்டிருந்தாள், உள்ளே இருந்த இன்னொரு நர்சும் இப்போது இல்லை. கன நேரத்தில் காசி அந்த காரியத்தை செய்தான், அவன் பெண் குழந்தை இப்போது காத்தாயி பக்கத்தில், இப்போது கண்ணை திறந்து காசியை பார்த்தது, அதை பார்க்க கூட திரானியற்றவனாய் காசி
திரும்பி கொண்டான். சுகந்திக்கு நினைவு வந்தது, தன் குழந்தையை பார்த்தாள், அருகில் இருந்த காசியை பார்த்து லேசாய் சிரித்தாள் அவள் கண்ணில் நீர்.
நேரம் விடியலை நெருங்கி கொண்டிருந்தது. காசி வெளியே உட்கார்ந்திருந்தான். உள்ளேயிருந்து நேற்று அவன் பார்த்த அந்த ஏழை ஜீவனில் ஒருத்தி காத்தாயியை கைத்தாங்கலாய் வெளியே நடத்தி கொண்டு வந்திருந்தாள், அவர்கள் பின்னே அந்த வெற்றிலை மனிதன் குழந்தையை ஏந்தி வந்தான். அவன் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி. காசிக்கு கடைசியாய் தன் குழந்தையை பார்க்கும் ஆசை வந்தது.
"ஐயா ஒரு நிமிஷம்"
வெற்றிலை மனிதன் நின்றான், காசி அவன் அருகே வந்து குழந்தையை வாங்கினான். குழந்தை தூங்கிகொண்டிருந்தது
"என்ன மன்னிச்சிடுமா... நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப...நீ கண்டிப்பா நல்லா வருவ....பெரிய படிப்பெல்லாம் படிப்ப.." காசியின் மனசாட்சி குழந்தையிடம் பேசியது. குழந்தையை அவனிடம் கொடுத்து தன் சட்டைபையில் கைவிட்டு பார்த்தான், நேற்று இருந்த இருபது ருபாயும் சுகந்தியின் மருந்திற்கு செலவானதை மறந்தவனாய். அவனிடம் இருந்தது அவன் மாமா எழுதிய அந்த கடிதம் மட்டுமே, அது வேறு அவன் மனதை மேலும் கிழித்தது.
"ஆண்டவா...." தன் கழுத்தை தொட்டான், கையில் அவன் சிறுவயதிலிருந்து போட்டு கொண்டிருக்கும் தங்க செயின் பட்டது. அதை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டான்.
"ஐயோ சாமி.. என்ன சாமி இதெல்லாம்... வேண்டாம் சாமி"
"இல்லைங்க... பரவாயில்ல என் குழந்தை பிறந்த நேரம் பிறந்திருக்கா..அந்த ஞாபகத்துக்கு இருக்கட்டும்... இதான் உங்க முதல் குழந்தையா"
"ஆமா சாமி... இது என் ரெண்டாவது சம்சாரத்துக்கு பொறந்தது...அதோ என் சம்சாரத்த கூட்டிக்கிட்டு போறாளே அவதான் என் மொத சம்சாரம்...அவளுக்கு கொழந்த இல்லாததால....நான் தவமா தவம் கிடந்து பெத்ததுங்க இது"
"முதல் குழந்தயா.. ஆம்பிள்ளையா இருந்தா நல்லா இருந்திருக்கும்"
"ஐயோ என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க... எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
காசி பேச்சற்றவனாய் நின்றான்...குழந்தையுடன் தூரத்தில் காத்தாயியும் அவர்களும் போய்க்கொன்டிருந்தனர்.
"எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
அவன் கடைசியாய் சொன்ன அந்த வார்த்தைகள் காசியின் வாழ்நாள் முழுவதும் வலித்தது.

Wednesday, November 09, 2005
கொஞ்ச நேரம்...
வலைப் பதிவித்து பல நாள் ஆகிவிட்டது. முதற் காரணம் வேலைச் சுமை, இரண்டாவது காரணம் தீபாவளிக்கு வந்த தமிழ் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்த்தாக வேண்டிய கடமை. சிவகாசி, மஜா, அது ஒரு கனாக் காலம் எல்லாம் பார்த்தாகி விட்டது. நான் மிகவும் எதிர்ப் பார்த்த தவமாய் தவமிருந்து வராதது கொஞ்சம் ஏமாற்றமே. பார்த்த படங்களில் என்னைக் கேட்டால் வர்த்தக ரீதியாக சிவகாசி தான் ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. வழக்கமான விஜய் மார்க் மசாலா தான் ஆனால் போர் அடிக்கவில்லை. அதிக பஞ்ச் டயலாக்குகள் இல்லாதது படத்திற்கு பலம். கஜினியைப் போலவே இதிலும் அசின் அடிக்கும் லூட்டிகள் 'ஜொள்ள'ப்பட வேண்டியவை. அந்நியனுக்கு பிறகு மஜாவாக விக்ரமை பார்க்க உட்கார்ந்தால், கொஞ்சம் எமாற்றமே. மலையாளப் படத்தை, மலையாளப் படமாகவே எடுத்திருக்கிறார்கள். அசின் வந்து போகிறார். "ஐயார் எட்டு நாட்டுக்கட்டை..." என்னும் குட்டுப்பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. பார்த்த மூன்று படங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம். தனுஷ், ப்ரியாமணியிடம் யதார்த்த நடிப்பை அழகாய் வாங்கியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் எங்கேயோ ஒரு வலையத்தின் விமர்சனத்தில், இந்தப் படம் ஏற்கனவே பாலு மகேந்திரா எடுத்த யாத்ரா என்னும் மலையாளப் படத்தின் அச்சு அசல் copy என்று படித்தேன். அதில் மோகன்லால் மற்றும் ஷோபா நடித்தார்களாம். இந்த யாத்ராவைப் பற்றி மெலும் அறிய (google) கூகிலிடும் போது, கமல் & மோகன்லாலின் நடிப்பை பற்றி, சென்னையில் வளர்ந்த மலையாள மற்றும் தமிழ் படம் பார்க்கும் ஒருத்தர் எழுதிய rediff article ஒன்றை படித்தேன். அதில் கமல் மோகன்லால் இவர்களின் முத்தான முன்று படங்களாய் (அனைத்தும் அவர்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம்) மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், கிரீடம், பரதம், வானப்ரஸ்தம் இவற்றை சொல்லியிருந்தார். இதில் ஒரு சோறு பதமாய் நாயகனில் மகனின் சடலத்தை பார்த்து கமல் அழுவதும், பரதம் படத்தில் தன் அண்ணனின் சடலத்தை பார்த்து மோகன்லால் அழுவதையும் compare செய்து, அவர்களின் நடிப்பை பிரமித்து எழுதியிருக்கிறார். இதை படித்தலிருந்து மோகன்லாலின் அந்த படங்களை பார்க்க ஆவலாய் இருக்கிறது.
Friday, October 28, 2005
Subscribe to:
Posts (Atom)