"பொன்னியின் செல்வன்... பொன்னியின் செல்வன்.. படித்துவிட்டீர்களா பொன்னியின் செல்வன்..பொன்னியின் செல்வன் படிக்கவில்லையா! நீங்கள் தமிழ் வாசகராக இருப்பதற்கே லாயக்கில்லாதவர்கள்" இப்படி தான் எல்லாரும் பொன்னியின் செல்வனை பற்றி சிலாகிக்கிறார்கள். கண்டிப்பாய் அது சிறந்த வரலாற்று புனிதங்களில் ஒன்று. அதை மறுப்புதற்கில்லை, ஆனால் அது மட்டும் தான் தமிழில் வந்த வரலாற்று நாவல்களிலே சிறந்தது என்று சொல்வது தான் கொஞ்சம் மிகையாக படுகிறது.
எனக்கு பொன்னியின் செல்வனை பற்றி முதலில் சொன்னது என் அம்மா தான். ஆனால் சிறு வயதில் அதை படிப்பதற்கு தான் வழியில்லாமல் இருந்தது. அப்பாவிற்கு நாங்கள் சிறுவயதில் தமிழ் புத்தகங்கள் படிப்பது அவ்வளவாய் பிடிக்காது. ஆங்கில அறிவை வளர்க்க வேண்டுமென்று வீட்டில் தினமும் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாதம் ஒரு முறை
ரீடர்ஸ் டைஜஸ்ட் இது போக அலமாரியெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் GK புத்தகங்கள் தான். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு lending library இருந்தது, மாதம் பத்து ருபாயோ இருபது ரூபாயோ தான், ஆனால் நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அம்மா அங்கு சேர பணம் கொடுக்கவில்லை. ஒருவழியாய் நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதே லைப்ரரியில் மெம்பராய் சேர்ந்து பொன்னியின் செல்வன் மட்டும் எடுத்து படித்தேன். ஒருவேளை பொன்னியின் செல்வன் நான் படித்த முதல் வரலாறு நாவலாக இருந்தால் எனக்கு ரொம்ப பிடித்திருக்குமோ என்னவோ, நான் முதலில் படித்தது சாண்டில்யனின் கடல்புறா. எப்பவோ அப்பாவிடம் கடல்புறா மூன்று பாகங்கள் கிடைக்க, அதை வீட்டிற்கு எடுத்து வந்தார். அப்போது எனக்கு 8ஆம் வகுப்பு காலாண்டு பரிட்சை விடுமுறை, வெளியே எங்கும் ஊர் சுற்றாமல் ஒரு பத்து பதினைந்து நாளில் மொத்த கதையையும் படித்து முடித்தேன், மொத்தம் 5400 மேல் பக்கங்கள். கடல்புறாவும் பொன்னியின் செல்வனை போலவே சோழர் காலத்தில் நடக்கும் கதை, ராஜேந்திர சோழன் அரியனையில் அமரும் சமயம் நடக்கும் கதை. கதை முழுவதும் சோழர்களின் கடல் கடந்த ராஜ்ஜியங்கள், கடல் போர்கள் பற்றி இருக்கும். வந்தியத்தேவனை போல இதில் இளையபல்லவன். ஷங்கர் படம் போல சாண்டில்யனின் வரிகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கும், கடலின் பிரம்மாண்டத்தை நம் மனக்கண்ணில் ஒட விடுவார். கடல், மரக்களம், சீனர்கள், அரேபியர்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாய் சொல்லியிருப்பார். என்ன ஒன்றே ஒன்று, கதாநாயகி மட்டும் கதைக்குள் வந்தாள் என்றால் நாம் தாராளமாக ஒரு இரண்டு மூன்று பக்கம் திருப்பி கதையை தொடரலாம், அவ்வளவு விரிவாய் கதாநாயகிகளை விவரித்திருப்பார்.
பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஒன்றுமே வெற்றியடையவில்லை. எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க திரைக்கதை எல்லாம் எழுத சொன்னாராம். வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரையும் இருவேடமேற்று நடிக்க என்னியிருந்தாராம், எங்கயோ படித்த ஞாபகம். பிற்காலத்தில் கமல் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டு சுஜாதாவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதலாம் என்று உட்கார பிறகு எப்படியோ மருதநாயகத்திற்கு தாவிவிட்டார். அதன் பிறகு பொன்னியின் செல்வனை எடுத்தே தீர்வது என்று மணிரத்னம் தன் பென்சிலால் முழு திரைக்கதையும் எழுதி முடிக்க அதற்குள் கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கி விட்டனர். இரு கோஷ்டிகள் அதை டிவி தொடராக எடுப்பது என்று கிளம்ப, மணிரத்னம் தன் முயற்சியை கைவிட்டார். அந்த டிவி தொடர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
ஒருவேளை பொன்னியின் செல்வன் சினிமாவாக வந்தால் இன்றைய தேதியில் அதன் perfect casting என்னவாக இருக்கும்? என்னை பொருத்தவரை வந்தியத்தேவனாக சூர்யா, அருள்மொழிவர்மனாக விக்ரம், நந்தினியாக அசின் அல்லது சிம்ரன் (ஒல்லியாக இருக்கும் பட்சத்தில்), குந்தவைக்கு perfect fit செளந்தர்யா ஆனால் அவர் இல்லாதலால் பத்மப்ரியா, சுந்தர சோழராக சிவக்குமார், மணிமேகலையாக த்ரிஷா, பெரியபழுவேட்டரையராக பெரியகருப்புத்தேவர் (அதான் விருமாண்டியில் பூசாரி), சின்ன பழுவேட்டரையராக வினுச்சக்ரவர்த்தி, ஆழ்வார்க்கடியனாக வெண்ணிறாடை மூர்த்தி (என் நன்பன் ராஜ்குமாருக்கு ஆழ்வார்க்கடியனுக்கு செந்தில் தான் மிகப்பொருத்தம் என்பான், அது ஒரு வைனவ கேரக்டராக இருப்பதால் எனக்கென்னவோ நம்ம மூர்த்தி தான் சரியாய் இருப்பார் என்று படுகிறது, provided அவர் கனைக்காமல் இருந்தால்) இவர்கள் மிக முக்கியமான பாத்திரத்துக்கு சரியாய் பொருந்துவார்கள். சரி அப்ப கடல் புறாவிற்கு? ம்ம்ம்..கடல் புறா பிரும்மாண்டத்திற்கு படம் எடுக்க நம் தமிழில் பட்ஜெட் இல்லை, மனது வைத்தால் பீட்டர் ஜாக்ஸன் எடுக்கலாம், அவர் எங்க இனிமே தமிழ் படிச்சு, புரிஞ்சி... அதெல்லாம் நடக்காத காரியம்.
2 comments:
ranjith..
indha posta munnadeye padechen.. but comment vidalai..ippo thirumbi padichen..
ennnoda choice solren kelunga
nandhini-mayankkum character so.. ramya krishnan
kundhavai-thelivaana person..so nanditha das/ simran /olli kushboo
vaanathi-bayantha subhavam..so soundarya or sneha
arulmozhi- great and giving/listenin to akka- surya
vandhiyathevan - good at talking..never getting yielded - vijay
aadithyakarikaalar-vikram
manimegalai - kadhal sandhya
kandhamaaran- friendly/emotional -
bharath
aarvarkadiyan- sendhil dhaan thonudhu..but innum seriousaa yosicha yugi sethu/ve murthy.
periyapazhu- vinu chakravarthy
chinnapazhu- naaser
sundarasozhar-sivakumar
priya,
vandhiyathevanaaga vijayaa...vandiyathenva "ennangnaa" solli tamil pesuvadai nenaichaa siripaa varudhu...
avarellaam punch dialogues ethirpaarpaar "en pinaadi cholar padaiye irukku"nnu sodakki pesanumnu adam pidipaar...
but bharath and yugi sethu seems to be a better choice than mine.
Post a Comment