"உலகமே ஒரு நாடக மேடை - அதில்
நாமெல்லாம் நடிகர்கள்" - ஆங்கில அமர கவி ஷேக்ஸ்பியரின் அற்புதமான் வார்த்தைகள். உலகம் என்னும் நாடக மேடையில் நடிப்பது இயல்பு தான், ஆனால் நாடக மேடை என்னும் உலகத்தில் நடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம். நான் எங்கு முதலில் மேடையில் தோன்றினேன்? யோசித்து பார்க்கிறேன், அட நான் தோன்றிய மேடை அனுபவங்களும் கொஞ்சம் சுவையாகவே இருக்கிறதே...
நாடக மேடை என்றவுடன், எனக்கு சென்ற வருடம் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. சென்ற வருடம் என் மேலாளர் மற்றும் நெருங்கிய நன்பரான ஜெய் மற்றும் அவர் மனைவியுடன் (நான் அண்ணி என்று அழைப்பேன்) நயாகரா அருவிக்கு என் வீட்டிலிருந்து காரினில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வெகு தூரம் ஒட்டும் பயண களைப்பு மறக்க கொஞ்சம் "பாட்டுக்கு பாட்டு" நடத்தலாமே என்று எனக்கு தோன்றியது. "யாராவது பாடுங்களேன்" என்று நான் ஜெய்யிடம் கேட்டேன். அவர் "உங்க அண்ணிய பாட சொல்லு, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எல்லாம் நிறைய பாடியிருக்கா" என்றார், நான் உடனே ஆச்சர்யமாக அண்ணியிடம் "அப்படியா அண்ணி...கல்ச்சுரல்ஸ் எல்லாம் பாடியிருக்கீங்களா..எப்படி stage fear இல்லாம் பாடினீங்க" உடனே அண்ணி அலட்டாமல் "சே..சே..மேடையில யாரோ பாடுவாங்க ரஞ்சித்...
நான் கீழே பாடிக்கிட்டு இருப்பேன்" என்றாரே பார்க்கலாம். இப்பவும் அதை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
நான் முதன் முதலில் மேடை ஏறியது என் ஆறாம் வகுப்பில். பள்ளியில் கிறிஸ்த்துமஸ் விழா, அதற்கு இயேசு பிரான் வாழ்க்கையில் நடந்த சில பகுதியை நாடகமாக்கினார்கள். என்னை நடிப்பதற்கு கூப்பிட்டார்கள். எனக்கு எப்படியும் இயேசு கிறிஸ்து வேடம் தரமாட்டார்கள், atleast ஒரு சீடன், இல்லை மன்னர் வேடமாவது தருவார்கள் என்ற
ஆசையில் ஒத்திகைக்கு சென்றேன். ஒரு காட்சியில், ஒரு செல்வந்தன் ஏழைகளை இம்சித்து பணம் பறிப்பான், ஏழைகள் அழுவார்கள், அவ்வழியே வரும் இயேசு அந்த செல்வந்தனை திறுத்துவார், இந்த காட்சியை விளக்கினார்கள். பரவாயில்லை, வில்லத்தனத்திற்கு scope இருக்கும் ஒரு செல்வந்தன் வேடமாவது கிடைக்கிறதே என்று என்னை நானே தேற்றினேன். ஆனால் அங்கேயும் 'அல்வா'... எனக்கு அவர்கள் கொடுத்ததோ, செல்வந்தனிடம் அடிப்பட்டு அழுகின்ற ஏழைகளில் ஒருவன். நல்ல வேடம் தருவார்கள்,நன்பர்களிடம் எல்லாம் சொல்லி பிரமாதப்படுத்தலாம் என என்னியிருந்தேன்...கடைசியில் என்னை atmosphere artist ஆக்கிவிட்டார்கள். சரி தொலைகிறது என்று ஒத்திகைக்கு சென்றேன், நாடகத்திற்கு முதல் நாள் எல்லோருக்கும் ஆடை உடுத்தி ஒத்திகை பார்த்தார்கள், எங்களை (ஏழைகள்) தவிர. நாங்கள் என்ன உடுத்துவது என்று டீச்சரிடம் கேட்டோம், டீச்சர் "நீங்க சும்மா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு வாங்கப்பா" என்றார். நான் உடனே "இல்ல டீச்சர், இயேசு காலத்துல பேண்ட் ஷர்ட் எல்லாம் இல்ல"
"சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற"
"பேசாம வேஷ்டி,சட்டை போட்டுகிட்டு, தலையில துண்டு போட்டு, அத ரிப்பன் போட்டு தலைய சுத்தி கட்டினா, அரேபியர் மாதிரி இருக்கும் டீச்சர்...கொஞ்சம் நெச்சுரலா இருக்கும் டீச்சர்" என்றேன்...டீச்சருக்கு இந்த idea ரொம்ப பிடித்து விட்டது, அப்படியே வர சொன்னார், எனக்கு கொஞ்சம் பெருமை...ஆனால் நாடகத்தின் அன்று, அந்த காஸ்ட்யூமுடன் எங்களுக்கு முகத்தில் ரோஸ் பவுடரை அப்பிவிட்டனர்...கொஞ்சம் பனக்கார, அரேபிய, ஏழையாக கண்ணை கசக்கி அழுது தொலைத்துவிட்டு வந்தேன்..
(தொடரும்)
No comments:
Post a Comment