சமீபத்தில் என் தோழி நளினா, அவள் தோழி ஒருவர் சோகமாய் இருக்கும்போது ஒரு கவிதை எழுதியதாக என்னிடம் ஒரு கவிதை கொடுத்தாள். அவள் கொடுத்த
கவிதையை அவள் அனுமதியுடன் பாடல் வடிவில் இங்கே கொடுத்திருக்கிறேன்.
பல்லவி
------
சிரித்திடும் போது சிரி
அழுதிடும் போது அழு
வாழ்க்கை ஒரு பயணம் தோழா
காலம் என்னும் கப்பல் மேலே
வாழ்க்கை ஒரு பயணம் தோழா
சரணம்
-------
கடந்து போன நிமிடம் நினைத்து
இந்த நொடி தான் இழக்கின்றோம்
கடந்து வந்த பாதை மட்டும்
காண என்றும் மறுக்கின்றோம்
நெடுந்தூரப் பயணம் இது
தொடங்குமிடம் தெரியும்
முடியுமிடமும் புரியும்
பாதை என்ன, பயணம் என்ன
யாருக்கிங்கே தெரியும்
பயணம் நெடுவே
பயணிகள் பலரே
பயணம் சுமையை குறைப்பார்
பாதை திசையை
பயணம் விசையை
யார் இங்கே திரிப்பார்
காலத்தை வென்று
திசையை மாற்ற முயல்கின்றோம் - ஆனால்
அடிக்கும் புயலில்
சிக்கிய சருகாய் தவிக்கின்றோம்
புயலை எதிர்கொள்ள
புறப்படு தோழா - இல்லை
சிக்கிய புயலில்
சிரித்திடு தோழா
No comments:
Post a Comment