Total Pageviews

Sunday, September 18, 2005

சில நேரங்கள் சில ஞாபகங்கள்

நான் சில நேரம் என் சிறு வயது ஞாபகங்களை நினைத்து பார்ப்பதுண்டு. பல வேடிக்கைகள், வேதனைகள், சில்மிஷகங்கள் மற்றும் சிந்தனைகள். இவற்றை சுவாரஸ்யமாக ஒரு 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' போல என்னால் தொகுக்க முடியும்.
இதோ என்னால் மறக்க முடியாத என் பள்ளி பருவ நிகழ்ச்சிகளின் சில பதிவுகள். இப்படி சொல்வதன் மூலம் இது ஏதோ என் காதல் சோகங்கள் பாடும் முராரியாகவும், என் தோல்விகளை சொல்லி அழுதிடும் ஒப்பாரியாகவும் நினைத்திட வேண்டாம். முடிந்த மட்டும் சுவாரஸ்யமாக தொகுக்க முயற்சி செய்கிறேன்.

No comments: