இன்று நியுரம்பெர்க் (Nuremberg) என்னும் ஆங்கில படம் பார்த்தேன். என்னுடைய war favouritesல் இந்த படத்தையும் சேர்க்கிறேன். என்ன ஒரு வித்தியாசம், இதில் ஒரு போர் காட்சி கூட கிடையாது. இரண்டாம் உலகப்போர் முடிந்து ஹிட்லரின் நாஸிப்படையின் உயர் அதிகாரிகள் பலரை சிறைப்பிடித்து, அவர்களை போர் நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி விசாரனை செய்வதே படத்தின் கதை. இரண்டாம் உலகப்போர் பற்றி பல விஷயங்களை நான் தெரிந்திருந்தாலும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான விடைதான் வெகு நாளாய் தெரியாமல் இருந்தது அது "யூதர்களுக்கு எதிராக இவ்வளவு கொலைகளையும் கொடுமைகளையும் செய்ய ஹிட்லருக்கும் அவன் ஆனைப்படி செய்த ஜெர்மானியர்களுக்கும் எப்படி மனது வந்தது, அவர்களின் மனசாட்சி எப்படி தொலைந்து போனது?"
இந்த கேள்விக்கான விடையை, இந்த படத்தில் வரும் அமேரிக்க உளவியல் நிபுனரின் கருத்தாய் வரும் வசனங்கள் எனக்கு விளக்கியது. அது:
1) ஜெர்மனியில் குடிமக்கள் தங்களுக்கு சொல்லப்படுவதை கேள்வியின்றி செய்வர் Germany is a country where the people do what they are told. நீ அப்படி தான் அங்கு வளர்வாய் You're raised from childhood not to question the authority. ஹிட்லர் இதை சாதகமாக்கி, ஒரு நாட்டையே தன் கட்டளைப்படி நடக்க செய்தான் He had an entire nation that believes it's perfectly natural to do whatever he says
2) இரண்டாவது தூஷ கொள்கை பரப்பு, யூதர்கள் மனிதர்கள் இல்லை, அவர்கள் மனித இனத்தின் சாபக்கேடு என்று anti-semitism கொள்கையை வேரூர பரப்பினான் Jews are not real human beings, they're a corruption of the race ஆக யூதர்களின் உரிமையை பறிப்பதிலும், அவர்களை கொல்வதிலும் தவறில்லை என்று எல்லோரையும் கண்மூடி நம்பும்படி செய்தான்.
இந்த வாதங்களை நிரூபிக்கும் வைகையில் இரு கதாபாத்திரங்களை படத்தில் காட்டுவர். ஒன்று concentration campன் பொறுப்பாளனின் குறுக்கு விசாரனை, அதில் அவன் எப்படி சக்தி வாய்ந்த விஷத்தை வைத்து அதிகம் பேரை சாகடிக்க முடியும் என்று தான் நிரூபித்து காட்டியதாக, முகத்தில் ஒரு சலனமும் குற்ற உனர்வும் இல்லாமல் சொல்வதிலும், பிறகு அந்த உளவியல் நிபுனர் "இப்படி செய்வதில் கொஞ்சமாவது வருத்தம் இருந்ததா" என்று கேட்க அவன் "இல்லவே இல்லை...நான் சொல்வதை செய்பவன்" என்று கூறுவான். இன்னொரு கதாபாத்திரம், ஹிட்லரின் இரண்டாம் நிலை தளபதி ஹெர்மன் கோரிங். படம் முழுவதும் நாஸிசத்தையும் ஹிட்லரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்ட்டில் வாதிடுவான், முடிவில் தான் அவன் மனைவி மூலம் அவனையும் ஹிட்லர் சுட்டுக்கொல்ல ஆனையிட, அதனால் அமேரிக்கரிடம் சரணடைந்தது விஷயம் நமக்கு தெரியும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, அமேரிக்க உளவியல் நிபுனரும், ஹெர்மன் கோரிங்க்கும் இடையே நடக்கும் சம்பாஷனை தான். உளவியல் நிபுனர் கோரிங்கிடம் "லட்சக்கனக்கான யூத அப்பாவிகளை கொல்வதை நீ எப்படி விளக்குவாய்" என்று கேட்க அதற்கு கோரிங் "நாங்கள் லட்சக்கனக்கான யூதர்களை கொன்றதை பற்றி பேசுகிறாயே, நீங்கள் ஹிரோஷிமாவில் அனுகுண்டை போட்டு லட்சக்கனக்கான ஜப்பானியர்களை கொன்றதை என்னவென்று சொல்வீர்கள். ஏன் அந்த குண்டை ஜெர்மனி மீது போட்டு ஜெர்மனியரை கொல்ல வேண்டியது தானே...நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் எனென்றால் ஒரு ஆசிய ஜப்பானியனை விட, ஐரோப்பா ஜெர்மனியன் உங்களுக்கு உசத்தியானவன். எங்கள் concentration campஐ பற்றி பேசுகிறீர்களே நீங்கள் போரின் போது உள்நாட்டிலே உள்ள உங்கள் நாட்டின் குடிமக்களான ஜப்பானியரை campல் அடைத்து கொடுமை படுத்தினீர்களே அதன் பேர் என்ன?....இனக் காழ்ப்புனர்ச்சி பற்றி பேசுகிறீர்களே, நீங்கள் கறுப்பர்களுக்கு செய்வதன் பெயர் என்ன, ஒரு கறுப்பனாவது உங்கள் நாட்டின் ரானுவத்தின் உயரதிகாரி ஆவானா?" என்று ஆவேசம் பொங்க கேட்பான். இதற்கு பதில் கூறமுடியாமல் அமேரிக்க நிபுனர் புன்னகை செய்வான். ஒரு கொடியவனின் சொல்லானாலும், அதில் உள்ள சில நியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். "வரலாறுகள் பதிவு செய்யப்படுவதில்லை, சிலரால் திருத்தி எழுதப்படுகிறது" என்று யாரோ சொன்னது.
Total Pageviews
Monday, January 30, 2006
Wednesday, January 25, 2006
Save earth for children
Just now saw the priya's blog on saving mother earth. Good to see this kind of initiatives to spread good messages. She has tagged me to convey and come up with 3 ideas. And here it goes:
1) Stay close to nature, Drink good: I've stopped drinking soft drinks since some time. We knew it's a junkie food and still we are some way addicted to it. Don't ask me to exclude the Diet's one in this list. Just by seeing the nutrition facts on those can's we know what all unheard chemicals we consume. Instead of this we can drink tender coconuts selling in streets. We can at least help a poor seller to have some business. Many times we see our people bargaining for those tender cocunuts and not to those cola junks they sell on shop. Also I would recommend drinking lots of water. Many medical theories prove drinking excess water is good for health.
2) Rain water harvesting: I am not a political analyzer to comment on ruling government policies. But definitely the rain water harvesting campaign brought by our CM is a commendable one. Let's save rain water and increase our ground water levels.
3)Teach nature: Agriculture is our country's backbone. We should start teaching our childrens the importance of agriculture and cultivate our young minds with nature deeds. We can start teaching the kids about gardening. Imagine encouraging our young minds to plant atleast one seed their life time and grow them. Then even more our population grows the more green and pasture our country would become.

Saturday, January 21, 2006
கனவு (சிறுகதை)
மெல்ல கண் திறந்தான் வாசு. பிரகாசமான வெளிச்சம் அவன் கண்களை கூசியது. சுற்றும் முற்றும் பார்க்க முயன்றான், அறையெல்லாம் வெளிச்சம் நிரப்பியது போல் இருந்தது. கண்களை மூடி திரும்பவும் திறந்தான். இப்போது வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தது. எதிரே ஒரு உருவம் மெல்ல தெரிந்தது.
"வாசு...நான் பேசறது கேக்கறதா" உருவம் முழுதும் தெரிவது முன் குரல் கேட்டது. வாசு தலையாட்டினான்.
"குட்...நான் யார்ன்னு தெரியுதா" பரிச்சயமான குரல், ஞாபகங்களை ஸ்கேன் செய்தான்.
"டாக்டர்" மெல்ல சொன்னான்
"வெரிகுட்...சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன?"
"கனவு டாக்டர் கனவு...கெட்ட..கெட்ட கனவு" இப்போது டாக்டரின் உருவம் முழுதும் தெரிந்தது.
"கனவு வருவது நார்மலான விஷயம் தானே...சமயத்தில எல்லோருக்கும் கெட்ட கனவு வரும்"
"இல்ல டாக்டர்...எனக்கு தினமும் வருது..கெட்ட...கெட்ட கனவா வருது"
"எப்போதிருந்து இது மாதிரி இருக்கு"
"ரொம்ப நாளா டாக்டர்...எப்ப ஆரம்பிச்சதுன்னு ஞாபகம் இல்ல..ஆனா ரொம்ப நாளா வருது" வாசு கண்களை மூடி திரும்பவும் ஞாபகங்களை தேடினான்...ம்ம்ம்..விடை வராதென்பது அவனுக்கு தெரியும். நிறைய நாட்கள் யோசித்து பார்த்துவிட்டான், எப்போதிருந்து கனவு கான ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை.
"வாசு...கனவுங்கிறது நம்மோட ஞாபகங்கள் தான். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான் நிகழ்ச்சியோ அல்லது மனச பாதிக்கிற விஷயமோ முடிவோ தீர்வோ இல்லாம நம்மோட ஞாபகங்கள்ல தேங்கிடும். அது தான் நாம தூங்கறப்போ கனவா ஒரு உருவம் கொடுத்து வரும். கம்ப்யூட்டர்ல எப்படி ஒரு ப்ரோக்ராம் மெமரில்ல ஏறி எக்ஸ்கியூட் ஆகி, கம்ப்யூட்டர் ஆ·ப் செஞ்சா கானாம போயிடுமோ....அது போல தான் நம்ம கனவும். தூங்கும் போது நம்ம மூளையென்னும் கம்ப்யூட்டர் நம்ம ஞாபகம் என்னும் மெமரியில இருந்து எடுத்து ஓட்டுற ஒரு ஸ்க்ரீன்சேவர் தான் கனவு. தூங்கி எழுந்தா..அது கானாம போயிடும். சில சமயம் ஒரு பகுதி மட்டும் ஞாபகம் இருக்கும்" வாசுவிற்கு புரியுமாறு டாக்டர் லெக்சர் கொடுத்தார்.
"டாக்டர்..என் கனவு எல்லாம் நிஜமா நடந்திருமோன்னு பயமா இருக்கு டாக்டர்"
"ஏன் அப்படி சொல்றீங்க.. சரி அப்படி என்ன கனவு கண்டீங்க..."
"அது எப்படி டாக்டர் சொல்ல முடியும்..நீங்கதான் கனவு கலைஞ்சிடும்ன்னு சொன்னீங்களே"
"இல்ல கலையாது...ஞாபகம் இருக்கும்...கண்ண மூடி யோசிங்க வாசு..."
"அப்ப தூக்கம் வருமா...எப்படி உங்க கூட பேசுவேன்"
"அதெல்லாம் பேசுவீங்க...மைல்டா செதட்டிவ் கொடுத்திருக்கேன்...தூக்கமும் வரும்..பேச்சும் வரும்"
வாசு கண்ணை மூடினான், டாக்டர் அவனை வருடிக்கொடுப்பது போல இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. எல்லாம் அமானுஷ்யமாக இருந்தது. கண்கள் இருந்தன எங்கோ போவது போல் இருந்தது ஆனால் உடம்பு மட்டும் நகரவில்லை. அது தெரிந்தது வாசுவிற்கு. திடீரென திரை விலகியது போல் இருந்தது.
"ஐயோ டாக்டர் அவன் தான் இது" வாசு அலறினான்.
"காம் டவுன்...யார் அது ?"
"அவன்தான் டாக்டர்... ரகு"
"யார் ரகு?"
"என் உயிர் நன்பன் டாக்டர்..சே...அப்படி சொல்றதுக்கே என் நாக்கு கூசுது...பாருங்க டாக்டர்..நன்பனின் மனைவின்னு கூட பாக்காம எப்படி பாக்கறான் பாருங்க என் மாலாவ"
"உங்க முன்னாடியே உங்க மனைவிய பார்க்கிறானா....நீங்க என்ன செய்யறீங்க... எங்க இருக்கீங்க"
"நான் திரும்பி தூங்கிகிட்டு இருக்கேன் டாக்டர்...அவன் எப்படி என் பெட் ரூம்ல வந்தான் டாக்டர்...மாலாவையே வெறிச்சி பாக்கிறானே..ஐயோ என் மாலாவ என்ன செய்ய போறானோ"
"எப்படி உங்க ரூமுக்கு வந்தான்...அவன் உங்க வீட்ல தான் தங்கியிருக்கானா"
"இல்ல டாக்டர்...பக்கத்து வீடு டாக்டர்...எப்படி வந்தான்னு தெரியல...ஒருவேல மாலாவே சாவி கொடுத்திருப்பாளோ"
"எப்படி சொல்றீங்க"
"அதான் எப்ப பார்த்தாலும் அவன் கூடவே இவ இளிச்சு இளிச்சு பேசுவாளே டாக்டர்...நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாளே"
"அப்ப உங்க மனைவிய சந்தேகப்படறீங்களா"
"இல்ல டாக்டர்...இல்ல...தப்பா சொல்லிட்டேன்...அவ பத்திரமாத்து தங்கம்...அவள நான் சந்தேகப்படக்கூடாது...இவன் கதவ உடச்சி வந்திருப்பான்"
"சரி நீங்க எழுந்திருச்சு அவன விரட்டுங்க"
"முடியல டாக்டர்...என்னால எழுந்திருக்க முடியல"
"முடியும்...இது உங்க கனவு... உங்களால முடியும்...உங்க மனைவிய காப்பாத்தனும் நினைச்சா உங்களால முடியும்"
"இல்ல டாக்டர்..என்னால முடியல..நான் மட்டும் எழுந்திருச்சா அவன நார் நாரா கிழிச்சு...ஐயோ அவன் கத்திய எடுக்கிறான் டாக்டர்...மாலா பக்கத்துல கொண்டுபோறான் டாக்டர்...அவள காப்பாத்துங்க...யாராவது காப்பாத்துங்க....மாலா...மாலா" வாசு பெரும் குரலெடுத்து அலறினான்.
"வாசு மிஸ்டர் வாசு" அவன் உடம்பு நகர்ந்தது. யாரோ குலுக்கியது போல இருந்தது. வாசு கண்களை திறந்தான். இப்போது பிரகாசமான வெளிச்சம் இல்லை..சற்று மங்கலான வெளிச்சமே. எதிரே டாக்டர் தெரிந்தார். முன்னைவிட கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார்.
"மிஸ்டர் வாசு உங்க மனைவி கொலை வழக்கு விசாரனை முடிவுக்கு வந்தாச்சு. உங்க மனைவி மாலாவ கோடூரமான முறையில கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கீங்க. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா" டாக்டரின் குரல் தான், ஆனால் வழக்கமான மருந்து வாசனை அடிக்கவில்லை. டாக்டர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார் என்பது வாசுவிற்கு புரிந்தது. ஒரு கணம் மவுனமாய் இருந்தான்.
"எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு யுவர் ஆனர்"

Wednesday, January 18, 2006
கொஞ்ச நேரம்
'அப்பாடா பொங்கல் படம் ஒன்று பார்த்தாச்சு" என்று சொல்லலாமென்று தான் நினைத்தேன், ஆனால் "ஐயயோ ஏண்டா பார்த்தோம்" என்று சொல்லும்படி ஆகிவிட்டது. நம்ம 'தல' அஜீத்தின் பரமசிவன் பார்த்தேன். சந்திரமுகி என்னும் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பி.வாசு, பாதியாய் எடை குறைத்த அஜீத் இவர்கள் கூட்டனியில் ஒரு கலக்கல் படம் கொடுத்திருப்பார்கள் என்று ஆர்வமாய் இருந்தேன், கடவுள் புன்னியத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யாமல் இதுவரை நாம் பார்த்து புளித்துப்போன கோலிவுட் கோமாளித்தனங்கள் எல்லாம் கொட்டி ஒரு சொதப்பலை கொடுத்திருக்கிறார்கள். 'சிறையில் இருக்கும் மரண் தண்டனை கைதி ஒருவனை வெளியில் கொண்டு வந்து, தீவரவாதிகளை தீர்த்துக்கட்டுவது' என்று சொன்னால் சுவாரஸ்யமாய் தோனும் கதை தான், ஆனால் அதை எப்படியெல்லாம் கொடுமையாய் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். முதலில் பி.வாசு அவர்களுக்கு, அரை செஞ்சுரி சினிமா எடுத்த நீங்கள் இன்னும் திரைக்கதை என்றால் என்ன என்பது தெரியாமல் இருப்பது அதிசயமே. முடிந்த வரையில் கதையை காட்சியாய் சொல்வது தான் திரைக்கதை, அதைவிட்டு கதாபாத்திரங்கள் எப்போதும் முழம் நீளத்துக்கு லெக்சர் கொடுப்பது ஏன். மேலும் உங்கள் சந்திரமுகி மெகா ஹிட்டாகி 200 நாள் கடந்து ஓடிவிட்டது, அதற்கு நீங்கள் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு விளம்பரபடுத்துவது ஏன். 'தல' அஜீத்... நந்தா, காக்க காக்க, கஜினி படங்களுக்கு உங்களை தான் முதலில் அனுகினார்கள் என்று படித்தேன், அதையெல்லாம் விட்டுவிட்டு இதில் நடிப்பதற்கு உங்களுக்கு அட்வைஸ் செய்த அந்த எதிரி யார் சார்?
ஆக்ஷன் படம் என்று நம்பி படம் பார்த்தால் ஒரே தமாஷாய் இருக்கிறது. வழக்கம் போல் ஒரு கேனச்சி வேடத்தில் லைலா வருகிறார். அமேரிக்க FBI ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ் போலீஸ் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நாட்டில் தலை போகிற விவகாரங்கள் பல இருக்க, தன் வீட்டில் வேலை செய்த ஒரு பாட்டியம்மாவின் பேரன் அஸ்தியை கண்டுபிடிக்க CBI ஆபிசராக ஜெயராம் துப்பு துலக்கி ஹீரோவையும் துரத்துகிறார். காமெடிக்கு விவேக் ம்ஹ¥ம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. இருக்கிற விஷயங்கள் போதாதென்று புதுசாக ITயை வேறு இழுக்கிறார்கள், தீவரவாதிகளுக்கு இவர்களே சொல்லி கொடுப்பார்கள் போலிருக்கு. அடிக்கடி கம்ப்யூட்டரை காட்டி, அசிங்கமான க்ராபிக்ஸ் சேர்த்தால் புதுமையான ஆக்ஷன் படம் தரலாமென்று நினைத்திருக்கிறார்கள். வாசு சார், மசாலா படத்தில எல்லாம் இருக்கனும்ங்கிறது வாஸ்தவம் தான், அதுக்காக டிவி சீரியல் எபிசோட் போல காட்சி விட்டு காட்சி காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் காமிக்கனும்னு அவசியம் இல்ல. நல்ல மசாலா படம் எடுக்கனும்னா போய் தரணி படம் பாருங்க. ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த படத்தில் ரசிக்கும்படியாய் இருக்கு அது க்ளைமாக்ஸில் அஜீத் போடும் ஸ்டண்ட். தான் ஒரு ரேஸ் வீரர் என்பதற்கு சாட்சியாய் தூப் போடாமல் நடித்திருக்கிறார். இதை பார்த்த பிறகு ஆதியை பார்க்க பீதியாய் இருக்கு.

Monday, January 16, 2006
சில நேரங்கள் சில ஞாபகங்கள் - அடி உதவுவது போல் I
அமெரிக்காவில் ஒரு நன்பருடன் அவர் அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்களின் மூன்று வயது மகனை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர்கள் ஒரு சம்பவம் சொன்னார்கள், ஒருமுறை அந்த சிறுவன் ஏதோ சேட்டை செய்திருக்கிறான், அவனை மிரட்ட அடிப்பதுபோல் கையை ஒங்கியிருக்கிறார்கள் அப்போது அந்தப் பையன் "அடிக்க வந்தால் 911 போன் செய்வேன்" என்று சொல்ல, அவர்கள் மிரண்டு விட்டார்கள்.
இதுபோல் நான் அந்த சிறுவன் வயதில் இப்படி "அடித்தால் போலீசுக்கு சொல்லிடுவேன்" என்று மிரட்டியிருக்க முடியாது. ஏனென்றால் நான் வளர்ந்ததே ஒரு காவலர் குடியிருப்பில்தான், அதுவும் ஒரு காவல் நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் குடியிருப்பில். நான் வளரும்போது வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அடி உதை என்பது மிகவும் பரிச்சயமான விஷயம். எங்கள் அப்பா என்னையும் அண்ணனையும் அடிப்பதற்க்கென்றே ஒரு லத்தி வைத்திருந்தார். நானும் அண்ணனும் எந்த விஷயத்தில் சன்டைப்போட்டாலும் அந்த லத்தியை மறைக்கும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருப்போம். பொதுவாகவே போலீஸ்காரர்கள் எப்படி குற்றவாளிகளை அடிப்பார்கள் என்று எனக்கு தெரியும். எங்கள் ப்ளாக்கின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், காவல் நிலையத்தில் குற்றவாளிகளை அடிப்பது நன்றாய் தெரியும். சினிமாவில் பார்ப்பது போல் குற்றவாளியை உட்கார வைத்து, மேலே ஹைவால்டேஜ் லைட் போட்டு அடிக்க மாட்டார்கள். அடி என்பது பல வைகைப்படும், முதலில் விசாரனைக்கு கூட்டி வந்து மேல் அதிகாரி விசாரனை செய்ய கான்ஸ்டபிள்கள் அடிப்பார்கள், அப்போது குற்றவாளி எல்லோர் மேலும் சத்தியம் செய்வது கேட்கும். இரண்டாவது வகை, லாக்கப்பில் இருக்கும் எல்லா கைதிகளையும் வெட்ட வெளியில் கூட்டி வந்து, கைகளை மேலே நீட்டச்சொல்லி ஒரு கட்டையை இடுக்கில் வைத்து சரமாரியாக அடிப்பது, இப்படி அடிக்கும்போது விசாரனையெல்லாம் இருக்காது, இது பொதுவான அடி. மூன்றாவது வகை, இரவில் சில பிரத்யேக குற்றவாளிகளை தலைகீழ் தொங்கவிட்டு அடிப்பார்கள், பொதுவாக இதை லாடம் கட்டுவது என்பார்கள். இதில் குற்றவாளியில் உள்ளங்காலில் மட்டும் அடிப்பார்கள். இப்படி அடித்தால் குற்றவாளியால் குறைந்தது ஆறு மாதத்திற்கு சரியாய் நடக்க முடியாது. இப்படியெல்லாம் அலுவலகத்தில் அடியுடன் பழகியவர்கள், வீட்டிற்கு வந்து பிள்ளைகள் தவறு செய்தால், கண்ணே மணியே என்று கொஞ்ச மாட்டார்கள், ஒரு கணம் தான் காவல் நிலையத்தில் அடித்த குற்றவாளியை பார்ப்பது போல் பிள்ளைகளை பார்ப்பார்கள், அதனால் இங்கேயும் பெரும்பாலும் லத்தியே பேசும். எங்கள் வீட்டில் நானும் அண்ணனும் தான் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறோம். தங்கையை அப்பாவோ, அம்மாவோ அடித்து ஞாபகம் இல்லை. ஒருவேளை அவள் பெரும்பாலும் சேட்டைகள் செய்யாமல், நாங்கள் செய்யும் சேட்டைக்கு சாட்சியாய் இருந்ததால் அடித்ததில்லையோ! நானாவது அப்பா அடிக்க கையை ஓங்குவதற்கு முன்னாலேயே, அடிப்பட்டதாய் அழுது, பெரும்பாலும் அடியிலிருந்தோ அல்லது குறைந்த அடியோடு தப்பித்திருக்கிறேன், அண்ணந்தான் எப்போது அப்பா அடித்தாலும், வெள்ளையனை எதிர்த்த தியாகிபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்று, தர்மடி வாங்குவான். இதுபோல் குழந்தைகளை தண்டிப்பதில் பலருக்கு இப்போது உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வளர்ந்த அந்த சூழ்நிலையில் இது போன்ற தண்டனைகள் தான் நாங்கள் ஒழுக்கத்துடன் வளர உதவின. இல்லையென்றால் நான் வேறுமாதிரி போயிருப்பேன், அதற்கான அத்தனை வழிகளும் காவலர் குடியிருப்பில் இருந்தன. நான் ஒருபோதும் அப்பாவை குறை சொல்ல மாட்டேன். இத்தனைக்கும், அங்கு இருந்த வீடுகளில் எங்கள் வீட்டில் தான் தண்டனைகள் சற்று குறைவாய் இருந்தன. மற்றவரெல்லாம் பல லத்திகளையும், பெல்ட்டுகளையும் தின்றவர்கள். எங்கள் வீட்டின் மேல் வீட்டில் ஒரு பையன் இருந்தான், என் அண்ணன் வயதுதான் இருக்கும் அவனுக்கு. இருமுறை வீட்டை விட்டு ஓடியவன். இரண்டாவது முறை ஊட்டிக்கு நன்பர்களுடன் சென்றவன், ஒரு மாதம் கழித்துதான் வந்தான். அவன் வந்த இருநாள் வீடு அமைதியாக இருந்தது. மூன்றாம் நாள் இரவு விடிய விடிய அவன் அலறல் அங்கிருந்த எல்லோர் தூக்கத்தையும் கெடுத்தது. என்ன நடந்தது என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. அதன்பிறகு அவன் முற்றிலும் மாறிப்போனான். யாரிடமும் கலக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நல்ல பிள்ளையாய் மாறிவிட்டான்.

Wednesday, January 04, 2006
ஆங்கில படம்
நான் முதன் முதலில் பார்த்த ஆங்கில பட அனுபவம் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக்கொண்டிருந்தேன், அப்பா தேவிபாரடைஸ் தியேட்டரில் ஒரு நல்ல ஆக்ஷன் படம் வந்திருப்பதாய் அறிந்து, முதலில் அதை தான் பார்த்து, 'குழந்தைகளை கூட்டிச் செல்லும் படம் தான்' என்பதை உறுதி செய்து எங்களையெல்லாம் கூட்டிச் சென்றார். நைட்ஷோ போனோம், முதல் முறையாய் லி·ப்டையும் அப்போது தான் பார்க்கிறேன். ஸீட்டில் போய் உட்கார்ந்ததும் எனக்கு குளிர் தொற்றிக்கொண்டது, உடம்பை இறுக்கி அனைத்தபடி பல்லில் தந்தியடித்தபடியே படத்தை பார்க்கிறேன். படம் பெயர் ஏதோ thunder என்று வரும், சரியாய் ஞாபகம் இல்லை. படத்தில் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டல்லோன் போல் தலையில் ரிப்பன் கட்டி, பெரிய பெரிய குழாய் துப்பாக்கிகள் வைத்து, செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல் தோளின் குறுக்கில் செறுகி வைத்த மூக்குப்பொடி டப்பாக்கள் போல புல்லட் பெல்ட் மாட்டி, புல்டோசர் போன்ற வாகனத்தில் வந்து எதிரிகளை வதம் செய்தார். ஏன் செய்தார் என்பது ஞாபகம் இல்லை, அடித்த குளிரில் நான் பாதி படத்தின் மேல் தூங்கிவிட்டேன். அதன் பிறகு நானும் அண்ணனும், அரையாண்டு, காலாண்டு லீவுக்கெல்லாம் அப்பாவை வீடியோ ப்ளேயர் வாடகைக்கு வாங்கி வரச்சொல்லி, snake in the monkey shadows, monkey in the eagle shadows..என்று எல்லா விலங்கினத்தின் பேரிலும் வரும் ஆங்கில-சைனா-குங்பூ படங்களை வாங்கி பார்ப்போம். இது போன்ற படங்கள் எல்லாவற்றிலும் கதை ஒரே மாதிரியே தான் இருக்கும். ஹீரோவின் குடும்பத்தை pantன் மேல் கருப்பு பாவாடை கட்டிய வில்லன் கொன்றுவிடுவான், ஹீரோ நேரே வெள்ளை பாவாடை கட்டிய மாஸ்டரிடம் "மாஷ்டர்..டீச் மீ..குங்பூ" என்று மூச்சு விடுவதை விட வேகமாய் பேசி, கஷ்டப்பட்டு குங்பூ கற்று, மீண்டும் கருப்பு பாவாடை கட்டிய வில்லனை அடித்து நொறுக்கி பழிவாங்குவான். அப்பாவின் நன்பர் ஒருவர் ஜாக்கிச்சான் பட ரசிகர். எந்த ஜாக்கிச்சான் படம் வந்தாலும் தன் இரு மகன்களையும் தியேட்டருக்கு கூட்டிச் சென்று படத்தை பார்த்துவிடுவார். என்ன தான் ஆக்ஷன் படமானாலும், ஜாக்கிச்சான் படங்களிலும் ஒன்றிரண்டு விவகார காட்சிகள் வரும், காமெடியாக தான், அதனால் அவர் எப்போதும் மகன்களை தன் இருபுறமும் உட்கார வைத்து, அவர்களின் தோளில் மேல் கைபோட்டுக்கொன்டே படம் பார்ப்பார். படத்தில் இசகுபிசகாக காட்சிகள் வந்தால் உடனே கைகளை தூக்கி மகன்களின் கண்களை மூடிவிடுவார்.
ஒருமுறை சாந்தம் தியேட்டரில் குழந்தைகள் விரும்பும் ஆங்கிலப்படம் ஒன்று ஓடுவதாக அப்பா கேள்விபட, அதை பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோவிற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தார். கடைசி நிமிஷத்தில் அப்பாவால் படத்திற்கு எங்களோடு வர முடியவில்லை, உடனே அம்மாவை எங்களையெல்லாம் அழைத்து போகச் சொன்னார். அம்மாவிற்கோ ஒரே பதற்றம், இதற்குமுன் எங்களை தனியாய் ஆங்கிலப் படத்திற்கு கூட்டி சென்றதே கிடையாது. சம்சாரம் அது மின்சாரம், மனதில் உறுதி வேண்டும் போன்ற நல்ல தமிழ் படத்திற்கு தான் கூட்டி சென்றிருக்கிறார். சத்யம் காம்ப்ளெக்ஸ் அடைந்ததும் அங்கிருந்த போஸ்டர்களை பார்த்தார், அப்படி ஒன்றும் வில்லங்கமான போஸ்டர்கள் அங்கு கானோம். அங்கு நின்றுகொண்டிருந்த நேரமெல்லாம் டென்ஷனாகவே இருந்தார் அம்மா. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணனிடம் "உள்ள போய் படம் போஸ்டர்ல எங்கேயாவது கேப்பிடல் ஏ சுத்தி சர்க்கிள் போட்டிருக்கான்னு பாத்துகிட்டு வா" என்று அவனை உள்ளே அனுப்பினார். அவன் திரும்பி வந்து
"அப்படி ஒன்னும் இல்லம்மா"
"நல்லா பாத்தியா"
"நல்லா பாத்துட்டேன்"
அம்மாவிற்கு இன்னும் பதற்றம் குறையவில்லை, திரும்பவும் அண்ணனை உள்ளே போய் பார்க்கச் சொன்னார். அண்ணன் இந்தமுறை முரண்டு பிடித்தான், வழக்கம் போல் அம்மா பார்வையால் அதட்டி அவனை போக வைத்தார். அண்ணன் வந்து
"நல்லா பாத்துட்டேன்மா...சத்யம் தியேட்டர்ல ஓடற படத்துல தான் அந்த மாதிரி போட்டிருக்கு" என்று போஸ்டரை கைகான்பித்தான். சத்யம் தியேட்டரில் அப்போது 'fly' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது, அதிலும் கூட மனிதர்களின் படங்கள் கானோம், ஒரு பெரிய ஈயின் படமே இருந்தது. இந்தமுறை அம்மா கையில் வைத்திருந்த டிக்கெட்டை அண்ணனிடம் கொடுத்து
"போய் அந்த டிக்கெட் கவுண்டர்ல...இந்த டிக்கெட்ட காமிச்சு, சாந்தம் தியேட்டர்லதான் நாம பாக்க வந்த படம் ஓடுதான்னு கேட்டுட்டு வா" என்று சொன்னார்.
அண்ணனிற்கு 'ஏன் தான் வந்தோம்' என ஆகிவிட்டது, கவுண்ட்டரில் போய் அம்மா சொன்னதை உறுதிபடுத்திக்கொண்டு திரும்பினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வழியாய் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். திரையில் அஸ்ஸாமின் ஆதிவாசி நடனமும், கூடவே பாரதப் பிரதமர் விஜயமும், கருப்பு வெள்ளையில் நியூஸ் ரீலாய் ஓடுக்கொண்டிருந்தது. அது முடிந்து வீக்கோ டருமெரிக் விளம்பரம் வந்தது. அப்போது அம்மா எங்களிடம் திரும்பி "நான் சொல்லும்போது கண்ண மூடிக்கனும்...புரியுதா" என்று எங்களுக்கு instructions கொடுத்தாள். நல்லவேளை பாக்யராஜ் படம் போல சில்லறை மாற்றி வைக்கவில்லை. படம் ஆரம்பித்து டைட்டில் முடிந்து ஒன்றிரண்டு காட்சிகள் வரையில் அம்மா டென்ஷனாகவே இருந்தார். பிறகு படத்தில் இன்வால்வ் ஆகி எங்களோடு மிகவும் ரசித்து பார்த்தார். படம் முடியும் வரையில் அம்மாவின் instructionsக்கு வேலையில்லாமல் போயிற்று. இப்படி அம்மாவுக்கு ஒரு பெரிய மிஷனாய் அமைந்த அந்த படத்தின் பெயரை நான் இன்னும் சொல்லவில்லையே, அது வேறொன்றும் இல்லை, மெக்காலே கல்க்கின் நடித்து வெளிவந்த 'ஹோம் அலோன்' பார்ட் ஒன் தான் அந்த படம்.

Tuesday, January 03, 2006
தமிழ் பேசுங்க
முதலில் இது ஏதோ தமிழைக் காப்பாற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கத்தின் பிரசார பதிவு என்று முடிவு கட்டாதீர்கள். அப்படி இருந்தால் 'தமிழில் மட்டும் பேசுங்க....இல்லையென்றால் துடைப்பம் பறக்கும்' என்று தலைப்பு வைத்திருப்பேன். சுமார் நான்கைந்து வருடம் முன்பு ஒரு நாள் என் நன்பன் ப்ரேமை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் நிறைய விருந்தினர்கள் இருந்தார்கள் அதனால் அவனை அழைத்து அவன் வீட்டின் மாடிக்கு சென்றேன் (இல்லையென்றாலும் மாடிக்கு தான் போவோம், அங்கு தான் எங்களுக்கு ஒரு privacy கிடைக்கும்). அப்போது மாடிக்கு அவன் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினரில் ஒரு சிறுவன், நல்ல வெளுப்பாய் புஷ்டியாய், பார்க்கும்போதே மம்மி, டாடி, ஆன்ட்டி என மற்றவரை விளிக்கும், நாம் அன்றாடம் பார்க்கும் சென்னை நகரத்து 'ஆரோக்யா பால்' சிறுவனைப் போலவே இருந்தான். அவனை பார்த்து ப்ரேம் "டேய் இங்க என்ன பன்ற" என்று இதே தோனியில் கேட்டான். அதற்கு அவன் "காற்று வேண்டிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா" என்றான். எனக்கு ஒரே ஆச்சர்யம், இவ்வளவு சுத்த தமிழை பேச்சு வழக்கில் நான் கேட்டதே இல்லை. என் ஆச்சர்யத்தை கவனித்த ப்ரேம் "மச்சி ஷாக் ஆவாத..இந்த பையன் srilankan..அதான் இப்படி பேசறான்...புரியறது கொஞ்சம் கஷ்டம்தான்" என்றான். எனக்கு இதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இப்படி சொன்னதற்கு ப்ரேம் மீது கடுப்பாய் இருந்தது, அந்த சிறுவன் மீது பொறாமையா இருந்தது. தமிழ்நாட்டில் பிறந்து, நல்ல தமிழ் பேசவேண்டுமானால் நான் ஸ்ரீலங்கா தான் போகவேண்டும் போல. சென்ற வருடம் விடுமுறைக்கு சென்னை சென்றபோது ஒரு சம்பவம். விசா ஸ்டாம்பிங்காக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க நுங்கம்பாக்கத்தில் உள்ள konica ஸ்டுடியோவிற்கு என் நன்பனுடன் சென்றேன். ரிசப்ஷனில் சோகையாய் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள் நான் அவரிடம் சென்று "யுஎஸ் விசாவுக்கு போட்டோ எடுக்கனும் (சாதாரனமாய் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்று சொல்ல முடியாது, யுஎஸ் விசாவுக்கென சில specifications உள்ளது) " என்று சொன்னேன். "அந்த கவுன்ட்டர்ல போய் வெயிட் பன்னுங்க" அருகே இருந்த கவுன்ட்டரை கை கான்பித்தாள். நான் அங்கிருந்து நகர்ந்து அவள் காட்டிய இடத்தில் நன்பனுடன் போய் நின்றேன். சிறுது நேரம் கழித்து அந்தப்பெண்ணே என் எதிரில் வந்து "sir we have various packages for passports, do you like the photo to be copied in the CD...." என்று இல்லாத ஒரு accentல் சிரமப்பட்டு ஆங்கிலம் பேசினாள். எனக்கு ஒரே குழப்பம், என்னடா இது, சற்று நேரம் முன்புதான் இவளிடம் தமிழில் பேசினோம், பதிலுக்கு தமிழிலே பதில் சொன்னாள், ஏன் இந்த இடத்தில் இப்படி பேசுகிறாள். பிறகு நானும் ஆங்கிலத்திலே பேசி அவளிடம் ஆர்டர் கொடுத்தேன். திரும்பியவுடன் இதையெல்லாம் கவனித்த என் நன்பன் "என்னடா அங்க தமிழ்ல பேசினா...இங்க இப்படி பீட்டர் விடறா" நான் உடனே "தெரியலடா ஒரு வேள american bodyய கரெக்ட் பன்றாளோ" (சும்மா ஒரு டைமிங்கிற்கு விவேக்கின் பிட்டை எடுத்து விட்டேன் ஹி..ஹி).இது மாதிரி மற்றொரு நாள் சில டாக்குமெண்ட்டுகளை மும்பைக்கு கூரியர் அனுப்ப DHL சென்றேன், அங்கும் இதே போல் ஒரு அம்மனி நல்ல சேலை கட்டி, சடை பின்னி, மல்லிகை வைத்து, பார்க்க nativityயுடன் இருக்க, நான் நேரே சென்று "பாம்பேக்கு ஒரு கூரியர் அனுப்பனுங்க" என்று தமிழில் கேட்க அவர் "sir it will reach only by friday sir" என்று சொன்னாள். சரி அவருக்கு உன்மையிலே தமிழ் தெரியாதோ என்று நினைத்த நான் "can it be received sooner by any chance" என்று கேட்க அந்த அம்மனி one minute please என்று சொல்லி திரும்பி அருகில் இருப்பவரிடம் "பெருமாள் சார்...பாம்பேக்கு ரெண்டு நாள்ல முன்னடி கூரியர் போகுமா" என்று கேட்டாள். பெருமாள் போகாது என்று சொல்ல, no sir என்று அனாவசியத்திற்கு அதை மொழிபெயர்த்தாள். கோனிக்காவிற்கு வந்த அதே நன்பனிடம் "என்னடா இது எங்கேயும் இப்படிதானா" என்று நான் வருத்தப்பட, அவன் "மச்சான் இப்ப பெட்டிக்கடைக்கு போனா கூட இப்படித்தான் இங்கிலிஷ்ல அலட்றாய்ங்க" என்று அவன் ஆதங்கப்பட்டான்.
நான் கேட்பதெல்லாம் இதுதான், தமிழ் என்று தெரிந்தபின் கூட ஏன் தமிழில் பேச தயங்குகிறார்கள். நான் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, official communication எல்லாமே ஆங்கிலத்தில் தான் நடக்கும். அதற்கு சில நியாங்கள் உள்ளன, அது ஒரு பன்னாட்டு நிறுவனம், ஐடி கம்பெனி அதனால் உள்ளே meeting, conference எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள எல்லா ஐடி நிறுவனங்களிலும் இப்படி தான் உள்ளன. நன்பரிடமும், தெரிந்தவர்களிடமும் unofficialஆக பேசும்போது தமிழில் தான் பேசுவோம். அதே நபருடன் வேலை சம்பந்தமாக பேசும்போது strictly english. ஆனால் இது சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் தானா என்று நினைக்கிறேன். ஒரு சமயம் எங்கள் நிறுவனத்தில் ஒரு training எடுப்பதற்காக புனே சென்றேன். ட்ரெயினிங் ரூமில், என்னை அறிமுகப்படுத்தும்போதே, எனக்கு ஹிந்தி தெரியாது என்று அழுத்தமாய் சொல்லி ட்ரெயினிங் நடத்தினேன். நடு நடுவே சிலர் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னிடம் ஹிந்தியிலே கேள்வி கேட்டனர். எனக்கு எரிச்சலாகிவிட்டது. அப்போது தான் கவனித்தேன், அங்கு எப்போதும், எல்லோரும் ஹிந்தியிலே பேசினார்கள். அவ்வப்போது தான் ஆங்கிலம் எட்டிப்பார்த்தது. ஆனால் சென்னையில் இப்போதெல்லாம் அவ்வப்போதும் தமிழ் தலை கான்பதில்லை. முக்கியமாய் பெண்கள்தான் அதிகமாய் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து அளக்கிறார்கள் என்று நான் சொன்னால், மகளிர் அணி யாரும் என்மீது கோபப்படக்கூடாது. இது நானே பல தடவை சென்னையில் பார்த்த உன்மை. ஒரு சமயம் மதிய உணவு சாப்பிட நான் போய்க்கொண்டிருந்தேன் அப்போது ஒரு பெண் மற்றொருவரிடம் "Hey come...yaar..stomach ஒரே பசியிங்yaar" என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஒன்று "வாடி சாப்பிட போகலாம் பசிக்குது" என்று தமிழில் கூப்பிட்டிருக்கலாம், இல்லை முற்றிலுமாய் ஆங்கிலத்திலே கூப்பிட்டு இருக்கலாம். இவர்கள் ஏன் புதுசாய் ஒரு மொழியை கண்டுபிடிக்கிறார்களோ. இதை ஒருவன் எங்கள் intranetல் இருக்கும் discussion forumத்தில் போட, அதற்கு குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பை போல பல மடங்கு மகளிர் அணியினர் அவனைக் கிழித்து தோரனம் கட்டிவிட்டனர். ஒரு முரண்பாட்டை மட்டும் இவர்களை போன்றவர்களிடம் பார்க்கிறேன், அங்கு இப்படி ஆங்கிலம் அல்லது தமிங்கிலம் பேசுபவர்கள், இங்கு வந்தால் மட்டும் முடிந்தவரையில் தமிழில் பேசுகின்றனர். ஒருவேளை அந்நியர் காதில் கேட்காதவாறு ஒரு cryptographic privacyஐ உருவாக்குகிறார்களோ.. என்னவோ.

Subscribe to:
Posts (Atom)