சில வருடங்களுக்கு முன், ஒரு சத்யராஜ் படத்தில் நம் கவுண்டர் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ஒரு டயலாக் விடுவார் "டேய் என்னை பத்தி சாதாரனமா நெனக்காத... நான் பார்ட் டைமா ஒரு ரௌடிடா".. நான் மிகவும் ரசித்த ஒரு காமெடி சீன். இன்று நிறைய திரைப்படத்தில் (முக்கால்வாசி ஆங்கில படத்தில்) பள்ளி மற்றும் கல்லூரிகளில் இரண்டு கோஷ்டிகள் அடித்து கொள்வதுபோல், ஒரு பையன் சண்டித்தனம் செய்வது போலவும் நிறைய காட்சிகள் காண்கிறேன். இவற்றை பார்க்கும்போது, எனக்கு சில
ஞாபகங்கள், நான் பள்ளியில் அது போல ஏதேனும் வீரதீர சாகஸம் ஏதேனும் செய்துள்ளேனா? நான் சத்தியமாக பள்ளிக்கு படிக்க தான் சென்றேன். இருந்தாலும் ஒரு சம்பவத்தை நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்வேன்.
நான் எழாவது படிக்கும்போது, என் வகுப்பில் கங்கை அமரன் படித்தான். இந்த கங்கை அமரனை இரு விஷயங்களுக்காக என்னால் மறக்க முடியாது, ஒன்று இந்த சம்பவம் மற்றொன்று, அவன் தான் எனக்கு ஆங்கிலத்தில் உலகம் எல்லாம் உச்சரிக்கப்படும் அந்த நாலு எழுத்து கெட்ட வார்த்தையை அறிமுகப்படுத்தியவன். நான் என் பள்ளி வகுப்பில் எல்லாம், முதல் பென்ஞ்சில் தான் உட்காருவேன். உயரம் ஒரு காரணம், இன்னொரு காரணம், பின் பென்ஞ்சில் எல்லாம் சற்றே உயரமான "ரௌடி" பையன்களும், படிக்கவே படிக்காத மேதைகளும் உட்காருவார்கள். எனக்கு சற்றும் லாயக்குபடாதவர்கள். ஒரு சமயம் எங்கள் வகுப்பு முதன்மை ஆசிரியர் (class teacher) நான் எதோ குறும்பு செய்த காரணத்தால் என்னை கடைசி
பென்ஞ்சில் சில நாட்கள் உட்காரச் சொன்னார், அங்கே கங்கை அமரன். நான் ஒரு தர்மசங்கடத்துடனே அங்கே போனேன். கங்கை அமரன் என்னை சற்று நேரம் முறைத்து
பார்த்தான் கூடவே அவனது மூன்று அடிபொடிகளும் (பெயர் மறந்து விட்டது). "நீ எங்க gangல சேர்ரியா?" அவண் என்னிடம் கேட்ட முதல் கேள்வி,
"என்ன gang? அதுல என்ன செய்வீங்க?"
"எல்லாம் அடிதடி தான், நம்ம பசங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம்னா நாம போய் பசங்கள ரெண்டு தட்டு தட்டனும். உனக்கு ஏதாவது பிரச்சனைனா கூட நாங்க வருவோம்"
நான் சற்று யோசித்தேன், அவன் சொன்னது எனக்கு கொஞ்சம் interestingஆ தான் இருந்தது, இருந்தாலும் டீச்சருக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன்.
அவன் என் அருகில் வந்து "வெளியே நீ என் ஆளுன்னு சொன்னா ஒரு பய உன்ன தொட மாட்டான்"
நான் உடனே சரியென்றேன், ஒரு மாறுதலுக்கு படிப்பதுபதில் அடிக்கலாமே...
உடனே அவனும் மற்றவர்களும் நானும் கை குலுக்கிக்கொண்டோம். "திடீர்ன்னு வேல வரும், எப்போதும் ரெடியா இரு" சினிமா தாதாவை மிஞ்சும் அளவு அவன் சொன்னான்.
இது நடந்து ஒரு இரண்டு நாள் இருக்கும், மதிய இடைவெளியில் வழக்கம் போல் என் அம்மா கட்டி தந்த இட்லி பொடியை, வழக்கம் போல் வாழ்க்கையை நொந்து
சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன், அப்போ என்னை யாரோ முதுகில் தட்டியதுபோல் இருந்தது, திரும்பினால் கங்கை அமரன், கூட அவன் அடிபொடிகள் இரண்டு பேர்.
"கிளம்பி வா, ஒருத்தன அடிக்கனும்"
எனக்கு ஒரே பரபரப்பாய் இருந்தது, முதன் முதலாய் ஒருத்தனை அட்களோடு சேர்ந்து அடிக்கபோகிறோம், அனேகமாய் அது மற்ற செக்ஷனில் படிக்கும் பயன்களாய் இருக்க வேண்டும், இல்லையேல் ஏதாவது ஒரு நோஞ்சான் சீனியராய் இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நாளைக்கு பள்ளி முழுவதும் இது தலைப்புச் செய்தியாக போகிறது.
நல்ல வேளையாய் கையில் ஆயுதம் ஏதும் எடுக்காமல் சென்றோம். அப்போது என் பள்ளியில், ஒரு உள் விளையாட்டு அரங்கம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த பக்கம் கங்கை அமரன் சென்றான். நிறைய பையன்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எங்களை போல் தோன்றும் பையன்களை பார்த்து "இவனா...இல்லை இவனா" என ஆள் பார்த்துக்கொண்டே கங்கை அமரனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தேன்.
"அதோ அங்க இருக்கான்" திடீரென கங்கை அமரன் ஒரு பக்கம் பார்த்து சொன்னான். அங்கே எங்களை போல யாரும் இல்லை. யாரை சொல்கிறான், எனக்கு ஒரே குழப்பம். அவனை பின்னே சென்று கொண்டிருந்தேன், அங்கே நாலாவது படிக்கும் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். எங்களை பார்த்தடும் இரண்டு பேரும் ஒட்டம் பிடித்தனர். அதில் ஒருவனை எங்கள் "gang leader" விரட்டிப்பிடித்தான்.
"ஏண்டா ஜான்சன் தம்பிய அடிச்ச"
அவன் அழுதுகொண்டே "விடு என்ன, நான் டீச்சர் கிட்ட சொல்லுவேன்"
அவன் கன்னத்தில் லேசாய் கங்கை அமரன் அடித்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"ரஞ்தித், நீயும் ஒன்னு போடு". நான் அவன் மற்ற கன்னத்தை அறைந்தேன்.
"கமான், சீக்கிரம் க்ளாசுக்கு ஓடு, யாராவது பார்க்க போறாங்க" கங்கை அமரன் ஓட ஆரம்பித்தான், அவன் பின்னே நான். தூரத்தில் அந்த சிறுவன் கீழே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்தபடியே நான் வகுப்புக்குள் ஒட்டம் பிடித்தேன்.
அதற்கு பிறகு நான் gang வேலைகள் எதுவும் செய்யவில்லை, ஒரு வாரம் பிறகு என் டீச்சர் என்னை திரும்பவும் முதல் பென்ஞ்சிற்கு மாற்றினார்கள்.
4 comments:
mmm... super rowdydhaan ponga neenga!!!
aamam, andha gangai amaran yaaru.. ippo popularaa irukara gangai amarana???
priya,
that is not definitely that gangai amaran (come on i am not that old, when i mean school days its just 10 yrs back). Gangai amaran kadaisiyaa loyolavil padichadaa kelvi patten. Ippa enga irukaanu theriyaadu.
chey
naadu oru velu naicker ai izhandu vittadhu :)
Don Corleone, i give my respects to u... accept my friendship please.......
Post a Comment